Published:Updated:

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

கலங்கும் ஹாசினியின் அப்பா

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

கலங்கும் ஹாசினியின் அப்பா

Published:Updated:
“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் வேலைக்காக ஆந்திராவுல இருந்து சென்னைக்கு வந்தோம். போரூருக்குப் பக்கத்துல உள்ள மதனந்தபுரத்துல எங்க வீடு. என் மனைவி ஸ்ரீதேவி, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல டீச்சரா வேலைபார்த்துட்டு இருந்தாங்க. அந்த ஸ்கூல்லயே எங்க பொண்ணு ஹாசினியும் இரண்டாம் வகுப்புப் படிச்சுட்டிருந்தா. தம்பி தேஜஸ்னா அவளுக்கு உயிர். எங்க அழகான குடும்பத்தின் அத்தனை சந்தோஷமும், எதிர்காலமும் ஒரே நாள்ல சிதைஞ்சுபோச்சு’’ - தொண்டை அடைக்க, கண்ணீர் பெருக்கெடுத்து வெடித்து அழுகிறார் பாபு. பத்து மாதங்களுக்கு முன் சென்னையில், பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நான்கு வயது சிறுமி ஹாசினியின் தந்தைதான் பாபு.

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

கொலைக்குப் பின், ஐ.டி ஊழியரான பக்கத்து வீட்டு இளைஞர் தஷ்வந்த்தான் குற்றவாளி எனக் காவல்துறை கண்டுபிடித்தபோது, ‘ரெண்டு நாளா நம்மளோடு சேர்ந்து அவனும் குழந்தையைத் தேடி நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத் திட்டானே’ என்று குமுறினார்கள் அக்கம்பக்கத்தினர். அன்று சட்டத்திடம் ஒப்படைக்கப்பட்ட தஷ்வந்த் இன்று, ஜாமீனில் வெளிவந்திருக்கிறான். அவனும் அவன் குடும்பத்தினரும் அதே வீட்டில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் தீபாவளி கொண்டாடியுள்ளனர். இன்னொரு பக்கம், தஷ்வந்த் ஜாமீனில் வந்தவுடனேயே பாபுவும் அவர் குடும்பமும் ஆந்திராவுக்கே திரும்பி, ஓடி ஒளிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தஷ்வந்த்தின் அப்பா, ‘எம்மவன எப்படியாவது காப்பாத்துறேன் பாரு’ என்று பாபுவிடம் சவால்விட, தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்காதோ எனத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் பாபுவும் அவர் மனைவியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

இதற்கிடையில் கடந்த நவம்பர் 20-ம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் நடைபெற்ற ஹாசினி வழக்கு விசாரணையின்போது, தஷ்வந்த் தரப்பு வழக்கறிஞர், தான் விடுமுறைக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதால் வழக்கை இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதை மறுத்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை டிசம்பர் மாதம் வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், பாபுவைத் தொடர்புகொண்டோம். நமது அலுவலகத்துக்கு நேரிலேயே வந்தவர், பேசத் தொடங்கியதுமே கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்துக் கலங்கித்தான் போனோம்.

“எங்க பொண்ணே போயிட்டா... ‘எதுக்கு கேஸு, கோர்ட்டு’னு எங்களால நினைக்க முடியல. நானும் என் மனைவியும் படிச்சவங்க. குற்றவாளிக்கு நிச்சயமா தண்டனை வாங்கிக்கொடுப்போம். ரெண்டு மாசத்துக்கு முன்னால குற்றவாளி குண்டர் சட்டத்துல கைதாகி ஜெயில்ல இருந்தப்போ, அவனோட அப்பா என்கிட்ட, ‘எம் பையன எப்படி வெளியில எடுத்துக்காட்டுறேன் பாரு’ன்னு சவால்விட்டாரு. அதேபோல, ஜாமீன்ல எடுத்துட்டாரு. அப்போவே எனக்கு இந்தச் சட்டத்தின் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு. ஆனாலும், நம்ம பிஞ்சுக் குழந்தைக்காக நாம போராடியே ஆகணும்னு இருந்தோம். என் குழந்தையைப் பறிகொடுத்துட்டு நிக்கிற மாதிரி, இனி எந்த அப்பாவுக்கும் வரக்கூடாது. அதுக்கு, தஷ்வந்த் மாதிரியான குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்தாதான், மற்றவங்களுக்கும் பயம் வரும். இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல. பாதிக்கப்பட்டவங்க பக்கத்துல நிக்கிறதுக்குப் பதிலா, குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இன்னிக்கு செங்கல்பட்டு கோர்ட்ல குற்றவாளியே எங்கிட்ட நேரடியா, ‘உன் பையனையும் உன்னையும் ஆந்திராவுல ஆள் வெச்சு தூக்குறேன் பாரு’னு மிரட்டுறான்.

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

ஹாசினி இழப்புல இருந்து என் மனைவியால மீளவே முடியல. ‘நம்ம பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்மா. குற்றவாளி நிச்சயமா தண்டிக்கப்படுவான்’னு சொல்லி அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கோம். அது எப்போ நடக்குதோ, அப்போதான் எங்களுக்குத் தூக்கம் வரும். எங்களோட நாலு வயசுப் பையன் தேஜஸைக் கவனிச்சுக்கிற பொறுப்பைக்கூட விரும்பாம, வெறுமையா இருக்கு எங்க வாழ்க்கை. சரியா சாப்பிடுறதுகூட கிடையாது. குற்றவாளிக்குப் பயந்து நாங்க ஆந்திராவுலயே தலைமறைவா இருக்கோம்.

என் மனைவி, மகனைப் பார்க்கிறதா... இல்லை என் பொண்ணுக்கு நீதி தேடி ஓடுறாதான்னு தெரியல. போனமுறை நான் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தப்போ என்னை மறிச்சு அசிங்கமா திட்டிட்டுப் போனாங்க. இந்த முறையும் மிரட்டினாங்க. நம்ம ஒவ்வொருத்தரோட வீட்டுலயும் ஹாசினி இருக்கா. அவங்களைப் பாதுகாக்கணும்னா குற்றவாளி தண்டிக்கப்படணும்” என்றார் பாபு கண்ணீர் மல்க.

“இந்தச் சட்டம் யாருக்கானதுன்னு தெரியல!”

இதுபற்றி ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். “வழக்கை தள்ளிவெச்சுட்டா, இந்தக் கேஸ் எப்படி வேணும்னாலும் திசைதிரும்பும். சாட்சியங்களை மறைச்சுட முடியும். ஏற்கெனவே சாட்சிகளோட லிஸ்ட் அவங்க கையில இருக்கு. அதை வெச்சு சாட்சிகளை மிரட்டலாம், பணம் கொடுத்து விலைக்கு வாங்கிடலாம். அதனால, இந்த வழக்கைத் தள்ளிப்போடாம கூடுமான வரையில் சீக்கிரம் விசாரிக்கிறதுக் காகதான் நாங்க போராடிட்டு இருக்கோம்’’ என்றார் கண்ணதாசன்.

- மு.பார்த்தசாரதி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன்