Published:Updated:

யார் சுட்ட குண்டு?

யார் சுட்ட குண்டு?
பிரீமியம் ஸ்டோரி
யார் சுட்ட குண்டு?

யார் சுட்ட குண்டு?

யார் சுட்ட குண்டு?

யார் சுட்ட குண்டு?

Published:Updated:
யார் சுட்ட குண்டு?
பிரீமியம் ஸ்டோரி
யார் சுட்ட குண்டு?

‘‘இலங்கை கடற்படை தாக்கியபோது, நம் அரசிடம் பாதுகாப்பு கேட்டோம். நம்முடைய கடலோரக் காவல் படையே தாக்குவதை யாரிடம் போய் முறையிடுவது?’’ என விரக்தியாகக் கேட்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள்.

நவம்பர் 13-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிச்சை, ஜான்சன் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்றுவந்த மீனவர்களைச் சந்தித்த மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகள், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தனர்.

யார் சுட்ட குண்டு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, ‘‘மீனவர்களைச் சுட்டதாகக் கூறப்படும் குண்டு எங்கள் பாதுகாப்புப் படையிடம் இல்லை’’ என்றார். இதற்கு மாறாக மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ், ‘‘மீனவர்கள்மீது நடந்த தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட 0.22mm துப்பாக்கிக் குண்டு பாதுகாப்பு படையினர் பயன்படுத்துவதுதான்’’ என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் ஜான்சன், ‘‘நம்ம கோஸ்ட்கார்டு கப்பல்தான் எங்களை துரத்திக்கிட்டு வந்துச்சு. கப்பலிலிருந்து ஒருத்தர் சுட்டுக்கொண்டே இருந்தார். என் கையை உரசிக்கிட்டு துப்பாக்கிக் குண்டு போனது. பிச்சையோட கையிலயும் துப்பாக்கிக் குண்டு பட்டது. மூன்று மணி நேரம் எங்களைக் கொடுமைப்படுத்தினாங்க.’’ என்றார் வேதனையுடன்.

மீனவர் சங்கத் தலைவர் சேசு, ‘‘நம்ம கரையிலிருந்து ஏழு கடல் மைல் தூரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு, நம் கடலோரக் காவல் படையைத் தவிர வேறு யாரும் வர முடியாது. அன்று ரோந்தில் ஈடுபட்ட ‘ராணி அபாக்கா 77’ கப்பலின் ரேடார் பதிவுகளையும், எங்கள் படகின் ஜி.பி.எஸ் மார்க்கையும் ஆய்வு செய்தால் உண்மை தெரிந்துவிடும்’’ என்றார்.

யார் சுட்ட குண்டு?

சி.ஐ.டி.யு மீன்பிடித் தொழிற்சங்க பொதுச்செயலாளர் செந்தில்வேல், ‘‘தாக்குதலை மத்திய அமைச்சர் மறுக்கிறார். இங்கே டி.எஸ்.பி-யை வைத்து விசாரிக்கிறார்கள். எப்படி உண்மை வெளிவரும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.

நல்லவேளை... மீனவர்கள் தங்கள் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் ‘மீனவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டனர்’ என்றுகூட சொல்வார்கள்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி