Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

வைரல்

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் - இயக்குநர் சிவா கூட்டணி களமிறங்குகிறது. இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அதே ‘வி’ சென்டிமென்ட்டாக ‘விசுவாசம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். #thala58 #viswasam என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்டு அடித்துவரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ். ‘விசுவாசம்’ என்ற டைட்டில் வெளியான 20 நிமிடங்களில், உலகம் முழுவதும் தேடப்படும் வார்த்தையாக, அது மாறியது.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாலி கேள்வி

வ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல் வர்றமாதிரி, ‘ரஜினி எப்போ அரசியலுக்கு வருவார்?’ என்ற கேள்வியும் வந்துக்கிட்டுதான் இருக்கும். ரஜினியும் அதைச் சமாளிச்சுக்கிட்டுதான் இருக்கார். இப்போகூட, ‘அரசியலுக்கு வருவதற்கான அவசரம் இல்லை’னு சொல்லிட்டுப்போற ரஜினிகாந்த்கிட்ட, மறுபடியும் அதே கேள்வியைத்தான் கேட்கணும்... ‘இப்போ அவசரம் இல்லை, சரி... எப்போ அந்த அவசரம் வரும்?’

மிஸ்டர் மியாவ்

தமிழில் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிஸி நடிகை ஆகிவிட்டார், மேகா ஆகாஷ். ‘லை’ தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமான மேகா, தமிழில் தனுஷ் ஜோடியாக ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜோடியாக ‘ஒரு பக்கக் கதை’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இப்போது, கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஹாட் டாபிக்

யக்குநர் சசிகுமாரின் உறவினரும், ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிர்வாகியுமான அசோக்குமாரின் மரணம், திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தன் மரணத்துக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம்’ என அசோக்குமார் கடிதம் எழுதிவைக்க, அன்புச்செழியனுக்கு எதிராக சசிகுமார், அமீர், பார்த்திபன், விஷால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பேசிவருகிறார்கள். அதேசமயம், ‘அன்புச்செழியன் உத்தமர்’ என இயக்குநர் சீனுராமசாமி ட்வீட் செய்துள்ளார். ‘நானும் அவரிடம் கடன் வாங்கித்தான் படம் தயாரிக்கிறேன். சரியாகக் கடன் செலுத்துகிறேன். இதுவரை அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. இந்த விவகாரத்தில் அன்புச்செழியனைச் சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. எப்போதும் இரண்டுபடுவதுதானே சினிமா உலகம்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயன், பகத் ஃபாசில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் நீளத்தைக் கருதி, அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்ற யோசனையை நிராகரித்திருக்கிறார், இயக்குநர் மோகன்ராஜா. பட ரிலீஸ் தாமதம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம். முழுமையான எடிட்டிங் பணிகளுக்குப் பிறகு, மூன்று மணி நேரப் படமாக உருவாகியிருக்கிறதாம், ‘வேலைக்காரன்’.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

டிகையாக 25 படங்களைக் கடந்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ரெஜினா. தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும், ஆரம்பத்தில் தெலுங்குப் பட வாய்ப்புகளே அதிகம் கிடைத்தன. அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இந்த ஆண்டு வெளியான ‘மாநகரம்’, ரெஜினாவைக் கவனிக்க வைத்தது. இப்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ எனத் தமிழிலும் ரெஜினா பிஸி!