Published:Updated:

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

தமிழக அரசு முடிவின் பின்னணிஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

தமிழக அரசு முடிவின் பின்னணிஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

யாரும் போராட்டம் நடத்தவில்லை; கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால், ‘தமிழகத்தில் 70 மணல் குவாரிகள் திறக்கப்படும்’ என்ற செய்தி அரசுத் தரப்பில் கசியவிடப்பட்டுள்ளது. ‘‘தமிழகத்தில், வரும் மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்படும்’’ என்று சென்ற மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். இந்த 21-ம் தேதி தலைமைச் செயலகத்தில் எட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள், ஐந்து மாவட்டங்களின் எஸ்.பி-க்களுடன் எடப்பாடி ஆலோசனை செய்தபிறகு, புதிய குவாரிகளைத் திறக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இதற்குப் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது.

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

‘‘கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்கள்!’’

‘மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். அவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்புவரை குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழகம் தவித்தது. மழை பொய்த்தது ஒரு காரணம்; நிலத்தடி நீர் பாழானது இன்னொரு காரணம். மணல் கொள்ளையைத் தடுத்திருந்தால், நாம் இப்படித் தவித்திருக்க மாட்டோம்.  

மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக, அதிக ஆழத்தில் மணல் எடுக்கின்றனர். இந்த மணல் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒரு லோடு மணல் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால், வெளி மாநிலங்களில் 60,000 ரூபாய் வரை விற்கின்றனர். கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக அரசுக்கு வர வேண்டிய பணம் வெளிமாநிலங்களுக்குப் போகிறது.

‘மணல் குவாரிகளைப் படிப்படியாக மூடுவோம்’ என்று முதல்வர் சொன்னார். ‘அரசே மணல் குவாரிகளை நடத்தும்’ என்றார். 2003-ம் ஆண்டிலிருந்து மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது.அதுகூட முதல்வருக்குத் தெரியவில்லை. கட்சிக்காரர்களின் கையில் குவாரி இருக்கிறது என்பது முதல்வர் பேச்சின் மூலம் தெளிவாகிறது.

எல்லா வகையிலும் சட்டத்தை மீறி இந்த அரசு செயல்படுகிறது. மணல் கொள்ளை காரணமாக, காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீர் செல்லவில்லை. ஆற்றில் 100 அடி ஆழத்துக்கு மணல் எடுக்கின்றனர். பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை எனச் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். 70 குவாரிகளுக்கு அனுமதி அளித்தால், அப்புறம் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும்... பாசனத்துக்கு நிலத்தடிநீர் எங்கிருந்து வரும்?

‘‘ஜெயலலிதா சொன்னதைச் செய்தார்களா?’’

கேரளாவிலும் ஆந்திராவிலும், ‘ஆறுகளில் பொக்லைன் வைத்து மணல் அள்ளக்கூடாது’ என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘தமிழகத்திலும் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதை, அரசு கண்டுகொள்வில்லை. ஆறுமுகசாமி, சேகர் ரெட்டி என அடுத்தடுத்து வந்து மணலைக் கொள்ளையடிக்கின்றனர்.

பல நகரங்களின் கூட்டுக் குடிநீர்த் திட்டங் களுக்கான கிணறுகள், ஆறுகளில் இருக்கின்றன. கிணறு இருக்கும் பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் மணல் எடுக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘100 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இருக்கும் இடங்களில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ‘அம்மா... அம்மா...’ என்று சொல்லும் இந்த அரசாங்கம், அவர் சொன்னதை நிறைவேற்றி இருக்கிறதா? இதை எதிர்த்துப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டு இருக்கிறேன். 

காவிரிப்படுகையில் 10 லட்சம் தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வள்ளியூர் அருகே நம்பியாற்றில் மணல் அள்ளக்கூடாது என்று கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். மணல் கொள்ளையர்கள் அவர்களை லாரி ஏற்றிக் கொல்ல முயன்றார்கள். அப்போது ப்ளஸ் டூ மாணவன் உயிரிழந்தான். இதுபோன்ற கொள்ளைகளும் கொலைகளும் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இன்னும் குவாரிகளைத் திறக்கப் போகிறதா?’’ என்று கேட்கிறார் நல்லகண்ணு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

மூடப்பட்ட குவாரிகளில் கடத்தல்!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சம்மேளனங்களின் தலைவர் பன்னீர்செல்வம், ‘‘தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 60,000 யூனிட் மணல், அதாவது 25,000 லோடு மணல் தேவை. ஆனால், இதற்காகத் தமிழகம் முழுவதும் 70 குவாரிகளைத் திறப்பது என்பது சாத்தியம் இல்லை.

புதிய குவாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கவேண்டும். முதலில் ஆறுகளில் மணல் இருக்கிறதா என்று ஆய்வுசெய்ய வேண்டும். அந்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட வேண்டும். அவர் அதைக் கனிமவளத் துறைக்கு அனுப்புவார். சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிக் கேட்பார். இந்த வேலைகளெல்லாம் முடிவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிடும். 

தமிழகத்தில் 14 குவாரிகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை செய்துவிட்டது. ஆனால், அந்தக் குவாரிகளில் ஆளும்கட்சியினர் ஆதரவுடன் நள்ளிரவில் மணலை அள்ளிக் கடத்துகின்றனர். காவிரியில் கரூர் மாவட்டம் மாயனூரில் ஆரம்பித்து திருச்சி வரை இருந்த குவாரிகள் இவை. ஆனால், இப்போதும் முக்கியப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவுடன், இங்கிருந்து மணல் அள்ளிக் கடத்தப்படுகிறது. இரண்டு யூனிட் 10,000, மூன்று யூனிட் 15,000 என்று விற்கின்றனர்.

‘‘கடத்தலுக்கு போலீஸே பாதுகாப்பு!’’


ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களை ‘கவனித்து’ தங்கள் பக்கம் தக்கவைப்பதற்காக இப்படி முடிவெடுக்கிறார்கள். ஏற்கெனவே தாமிரபரணி, வைகை ஆறுகளிலிருந்து கேரளாவுக்கு மணல் கடத்தப்படுகிறது. பாலாற்றிலிருந்து ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கடத்துகிறார்கள். மாநில எல்லை வரை பிரச்னை இல்லாமல் கொண்டுசெல்வதற்கு போலீஸாரே பாதுகாப்பு அளிக்கின்றனர். இங்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர்.

தமிழகத்தில் பல அரசு கட்டடங்கள், அரசுத் திட்டங்களுக்குக் கூடுதல் விலையில் மணல் வாங்குகின்றனர். மணல் தட்டுப்பாடு காரணமாக பல கட்டடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மணல் விற்பனையைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நியமித்திருக்கின்றனர். ஆனால், அவருக்கு அரசுத் துறைகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை’’ என்கிறார் பன்னீர்செல்வம்.

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

மாறாமல் தொடரும் கொள்ளை!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணன், ‘‘ஆட்சியும் முதல்வர்களும் மாறினாலும், மணல் கொள்ளை மட்டும் தங்குதடையின்றி நடக்கிறது. இது பருவமழைக் காலம். காவிரியில் தண்ணீர் வரும் நேரம். இந்த நேரத்தில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்டப் பகுதிகளில் 70 குவாரிகளைத் திறக்கப்போவதாகச் சொல்கின்றனர். அப்புறம் எப்படி விவசாயத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் போகும்? ‘எது அழிந்தாலும் பரவாயில்லை, மணல் குவாரி நடக்க வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும்’ என்று நினைக்கின்றனர். இந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் தள்ளாடுகிறது. எனவே, கட்சிக்காரர் களையும், ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் திருப்திப்படுத்த இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

‘கட்டுமானத் தொழிலுக்குப் பாதிப்பு’ என்று சொல்கிறார்கள். ஆனால், மணலைச் சுரண்டி விவசாயத்தையும் குடிநீர்த் தேவையையும் காவு கொடுத்துவிட்டு, கட்டுமானத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? மணல் இல்லாத மாநிலங்களில் கட்டடங்கள் இல்லையா என்ன? மாற்று வழிகளில் அரசுக்கு அக்கறையில்லை’’ என்றார், காட்டமாக.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தாலும், அதைத் தடுப்பார்கள்... எம்.சாண்ட் போன்ற மாற்று வழிகளையும் அடைப்பார்கள்... இவர்களுக்கு மணல் முக்கியமல்ல; அதில் வரும் பணம்தான் முக்கியம்.

- கே.பாலசுப்பிரமணி
படம்: தே.அசோக்குமார்

‘‘மலைகளை மொட்டையடிப்பார்கள்!’’

‘‘ம
ணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். அதற்காகக் கற்களை வெட்டியெடுக்க, தமிழகத்தில் உள்ள மலைகளையெல்லாம் மொட்டையடிப்பார்கள். அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காதா?’’ என்று கேட்கிறார், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி திருநாவுக்கரசு. ‘‘அரசு உத்தரவுப்படி, உண்மையிலேயே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் மணல் அள்ளப்பட்டால், விதிமுறைப்படி, ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுப்பார்கள். ஆனால், மணல் அள்ளுவது வேறு சிலரின் கைகளில் இருக்கிறது. இப்போது ஆன்லைனில் மணல் விற்பனை செய்வது நல்ல முயற்சிதான். ஆனால், ஆன்லைனில் புக் செய்து பல நாள் காத்திருக்க வேண்டும். அதன்பிறகு மணல் லோடு ஏற்றி வரும்போது, வழியில் இருக்கும் கிராமங்களில் சிலர் பணம் வசூலிக்கின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டும். விதிமுறைப்படி மணல் அள்ளுவதையும், யாருடைய தலையீடும் இல்லாமல்  நியாயமான விலைக்கு விற்பதையும் உறுதி செய்தால், மணல் குவாரிகளை முறைப்படுத்த முடியும்’’ என்கிறார் அவர்.

எம்.எல்.ஏ-க்களை ‘கவனிக்க’ 70 மணல் குவாரிகள்?

‘‘பணம் வாங்கிப் பழகி விட்டார்கள்!’’

மிழக அரசின் ஆன்லைனில் மணல் விற்பனை செய்யும் திட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் தம்புராஜிடம் பேசினோம். ‘‘ஆன்லைனில் எந்த மணல் குவாரியில் பதிவுசெய்கிறார்களோ, அவர்களுக்கு வரிசைப்படி, உரிய தேதியில் மணல் வழங்கப்படும். தமிழகத்தில் இப்போது 11 குவாரிகள் செயல்படுகின்றன. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அரசு ஆலோசித்துவருகிறது. 70 குவாரிகளையும் உடனே திறக்க முடியாது. எதிர்காலத் துக்காகத் திட்டமிட்டிருக்கின்றனர். மணல் குவாரி செயல்படும் இடங்களில் யாரும் கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்று கடுமையாக உத்தர விட்டுள்ளோம். வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதைத் தடுக்க லோக்கல் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.