Published:Updated:

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

பிரதமர் மோடியின் கவிதை சிக்னல்

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

பிரதமர் மோடியின் கவிதை சிக்னல்

Published:Updated:
“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

லக்கியப் ‘பேனா’ பிடித்த இந்தியப் பிரதமர்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார், நரேந்திர மோடி. ஆர்.எஸ்.எஸ் பட்டறை, நெடுந்தூர இமயமலைப் பயணங்கள், டீக்கடை, எம்.ஏ அரசியல் அறிவியல், முதல்வர், பிரதமர் என வலம் வந்துகொண்டிருப்பவரின் இந்த ‘கவிஞர்’ அவதாரம் தமிழக மக்களுக்குப் புதிது.

தாய்மொழி குஜராத்தியில் மோடி எழுதியிருக்கும் கவிதைகள், ‘சிந்தனைக் களஞ்சியம்’ எனும் நூலாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற சமஸ்கிருத பேராசிரியை ராஜலக்ஷ்மி சீனிவாசனின் மொழிபெயர்ப்பில், ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியது, சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நூலை வெளியிட்டார்.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

‘ஆசிரியர் உரை’யிலேயே தன்னைப் பற்றிய நீண்ட பத்தியை மோடி எழுதியிருக்கிறார். ‘நான் கவிஞனுமல்ல, காவியம் படைப்பவனுமல்ல, என் அறிமுகம் கூறவேண்டுமானால் கலைவாணியின் பக்தன் என்றே கூறலாம்... இந்த நூலில் என் பதவியை நோக்காமல், என் பாவின் பதங்களை நோக்குங்கள்’ என அடக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

தன் எண்ணங்களை இந்தப் புத்தகத்தில் ஓடவிட்டிருக்கிறார் மோடி. தி.மு.க தலைவர் கருணாநிதியை மோடி சந்தித்திருக்கும் நேரத்தில், நூலில் இடம்பெற்றுள்ள ‘சூரியன்’ பற்றிய கவிதை வேறு ரகம். மலைகளில் காடுகளிலும் ஓடியாடி, தாவி விளையாடும் இளம் நரேந்திர மோடி, கொஞ்சம் பொதுவுடைமையையும் பேசியிருப்பதுதான் அதிர்ச்சிகலந்த ஆச்சர்யம்!

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளிலிருந்து  சில வரிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

பொய் புகன்றிடின் காக்கை கொத்திடும்.
அதனால் உண்மை பேசுவது அவசியமாயிற்றா?
உண்மை நமது கௌரவமே!

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

குளிர்ந்த உறவில் எனக்குக் கொளுத்தும் வெப்பம்
மலர்ப் பாதையில் முட்கள் குத்திட
மனித நடமாட்டமற்ற காட்டில்
இசைப்பருவம் இல்லை
கண்களில் ஓரிரு கண்ணீர் துளிகள்
இருத்தி விடுகின்றன.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

குரலின் கண்களைத் திற
சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடு
கபட மௌனத்தின் ஆடம்பரத்தை
சுடச் சுட சுட்டுவிடு.
ஒருபொழுதும் முகஸ்துதியின்
மடியில் அமர வேண்டாம்.
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டாததைப் பேசுவார்.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”
“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

நான் என் படத்தில் இருக்கிறேன்;
இல்லாமலும் இருக்கிறேன்.
நான் எனது போஸ்டரில் இருக்கிறேன்;
இல்லாமலும் இருக்கிறேன்.
நீங்கள் என் புகைப்படத்திலோ போஸ்டரிலோ
என்னைத் தேடும் மாயை முயற்சியைச்
செய்யாதீர்கள்.
நீங்கள் என்னை என்னுருவத்தில் எடை
போடாதீர்கள்
என் வியர்வை மணத்தில் என்னை
அடைந்திடுங்கள்.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

எனது ஒவ்வொரு செயலின் பின்னரும்
இறைவனின் ஆசி நிறைந்திருக்கிறது.
தவறைச் செய்யாதவன் எப்பொழுதுமே
அஞ்சவேண்டாம்
எல்லாவற்றினுள்ளுமே நல்ல சர்ச்சை இருக்கும்;
சொற்படி நடப்பேன்;
எப்பொழுதும் ஒரு கெடுதலும் நிகழாது.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது
தனது ஏழு குதிரைகளின் கடிவாளங்களையுமே
தன் கைப்பிடியில் வைத்துள்ளான்.
ஆனால், இவற்றில் எந்தக் குதிரையையும்
சாட்டையால் அடித்ததாக அறியவில்லையே.
இருந்திடினும்
சூரியனின் மதி
சூரியனின் நடை
சூரியனின் திசை
எல்லாமே பொருந்தி இருக்கிறதே;
அன்பு ஒன்றினாலேயே அது.

“இந்தச் சூரியன் எனக்குப் பிடித்திருக்கிறது!”

ஒரு மதமுமில்லை, சம்பிரதாயமுமில்லை
மனிதன் மனிதன்தான்
வெளிச்சத்தில் வேற்றுமையும் உண்டோ?
லாந்தரோ அகலோ
நிலைத்த இடத்தில் தொங்கும் சரவிளக்கைப்போல்
ஒருக்காலும் தொங்கியதில்லையே