Published:Updated:

சினிமா இனி சுத்தமாகும்?

சினிமா இனி சுத்தமாகும்?
பிரீமியம் ஸ்டோரி
சினிமா இனி சுத்தமாகும்?

சினிமா இனி சுத்தமாகும்?

சினிமா இனி சுத்தமாகும்?

சினிமா இனி சுத்தமாகும்?

Published:Updated:
சினிமா இனி சுத்தமாகும்?
பிரீமியம் ஸ்டோரி
சினிமா இனி சுத்தமாகும்?

 கஸாலி, டைரக்டர் & தயாரிப்பாளர்

எம்.பி.ஏ. பாடத்தில் டிமாண்ட் & சப்ளை என்ற சொற்றொடர் உண்டு. தேவைக்குக் குறைவாக பொருள் இருந்தால், விலை அதிகமாக இருக்கும்; தேவையைவிட அதிகமாக பொருள் உற்பத்தியானால், விலை குறையும். சிலவேளை மக்களால் சீண்டப்படாமலே போகும். சினிமாவையும் அந்தக் கேடு ஓரளவு பிடித்திருந்தது. எல்லா மீடியாக்களிலும் சினிமாவின் நஷ்டக் கதை சொல்லப்பட, 2015-க்குப் பின் புதிய தயாரிப்பாளர்கள் வரத்து குறைய ஆரம்பித்தது.

சினிமா இனி சுத்தமாகும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவிலும் முக்கியமான ஒரு விஷயம், முகம்தெரிந்த நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டும் வட்டிக்குப் பணம் கிடைக்கும். தியேட்டரில் குத்துமதிப்பாக ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு வசூல் ஆகிறது என்று விவரங்கள் எடுப்பார்கள். சில பல நேரம் வசூலை வேண்டுமென்றே உயர்த்திச் சொல்லி... பட்ஜெட் என்ற பெயரில் எழுதி மொத்தப் பணத்தையும் கடனாக வாங்குவார்கள். வட்டியின் கணக்கை மறந்து, வாங்கிய பணத்தில் பந்தாவாக வீடு, கார் என்று புதிதாகத் தனக்கும் (சில நேரம் ‘துணை’க்கும்) வாங்கி, தயாரிப்பில் கோட்டை விடுவார்கள். விட்ட நஷ்டத்தை சரி செய்ய மேலும் நடிகர்களுக்கு வலை போட்டு, மேலும் கடன் வாங்கி, அடைக்க முடியாமல், வாங்கிய வீட்டை விற்று, அதற்குப்பிறகும் வட்டி நெருக்க... ‘சினிமா தயாரிப்பது நரகம்டா சாமி’ என்ற ஞானம் வரும்போது எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே!

இப்போது வருடத்துக்குச் சுமார் 200 படங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. 150–170 படங்கள் எடுத்து முடிக்கப்படுகின்றன. 130–150 படங்கள் சென்சார் செய்யப்படுகின்றன. 120–130 படங்கள் திரைக்கு வரும் என்ற நிலையில் இருக்கின்றன. இதில் முகம் தெரிந்த நடிகர்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய தயாரிப்பு கம்பெனியின் படங்கள் என்று சுமார் 50–70 படங்கள் கணக்கு வரும். மீதம் உள்ளவை மட்டும் வேறு வழியில்லாத, வேறு தொழில் தெரியாத, சினிமாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்கள் அங்கே இங்கே புரட்டி சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படுபவை. இப்படி எடுக்கப்பட்ட படங்களுக்கு வியாபார வாய்ப்பு மிகவும் குறைவு. வருடம் முழுவதும் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால், சிறிய படங்கள் சீண்டுவாரற்றுக் கவலைக்கிடமாகக் கிடந்தன.

இப்போது கந்துவட்டி சர்ச்சையும், அதைத் தொடர்ந்து சினிமா சங்கங்கள் எடுப்பதாகச் சொல்லும் முயற்சிகளும், சிறிய படங்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வியாபாரக் கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டிருப்பது போல் படுகிறது. காரணம், ரொம்ப சிம்பிள்!

சினிமா இனி சுத்தமாகும்?

பல வருடங்களாக ‘அன்பு’ப் பிடியில் சினிமா சிக்கியிருந்ததால், மற்ற நிறைய ஃபைனான்சியர்கள் முடங்கிக் கொண்டனர். காரணம், ‘அன்பு’ மட்டுமில்லை; எடுத்த படங்களில் ஒரு 10% படங்கள் தவிர்த்து மற்ற எல்லாமே நஷ்டத்தைச் சந்தித்ததும் இன்னொரு காரணம். எனவே, தற்போதைய நிலைமையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு  ஃபைனான்ஸ் செய்பவர்கள் இல்லை. வங்கிகளுக்குச் சென்றால், வேண்டாத விருந்தாளி காண்டாமிருக சூப் கேட்டதைப்போல முகத்தை அஷ்ட கோணலாக்கி விரட்டுகிறார்கள். இன்ஸ்டிடியூஷனல் ஃபண்டு என்று ஒன்று உண்டு. தரமான தனியார் கம்பெனிகளின் ஃபைனான்ஸ்! நம்மிடம்தான் ஒழுங்கான கணக்கு விபரங்கள் இல்லையே? வெட்டியாக ‘சக்சஸ் மீட்’ வைத்து ஏமாற்றும் கும்பலைக் கண்டு மிரண்டு போயிருக்கின்றன தனியார் கம்பெனிகள்.

எனவே, இப்போதைக்குப் பெரிய நடிகர்களின் படங்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் இல்லை. இந்த நிலைமை 3 மாதங்கள் நீடித்தால் குறைந்தபட்சம் 30-50 படங்களின் தயாரிப்பு முடங்கும் அபாயம் இருக்கிறது. இரண்டு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் தயாரிக்கப்படும். அப்படியானால் பெரிய நடிகர்களின் எதிர்காலம்? நிச்சயம் ஒரு ஆரோக்கியமான மாற்றம் வரும்.

வெறுமனே சம்பளம் வாங்குபவராக இல்லாமல், தயாரிக்கும் படத்தில் பங்குதாரராக வருவார். சொந்தப் படம் என்ற நிலையில், அநாவசியமாகச் செய்யப்படும் செலவுகள் உறுத்தும். இயக்குநர்களுக்குக் கட்டுப்பாடு வரும். சங்கங்களின் அடாவடி குறையும். புரொடக்‌ஷன் ‘டேமேஜர்கள்’ இனி புரொடக்‌ஷன் ‘மேனேஜர்களாக’ வேலை செய்வார்கள். எல்லா தியேட்டர்களிலும் கணினி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெறும். கணக்கு வழக்கு தெளிவாகக் கையில் வரும்போது, தனியார் கம்பெனிகளின் முதலீடு தமிழ் சினிமாவுக்குள் வரும். இனிமேல் ‘தயாரிப்பு ஆலோசகர்’ என்ற அனுபவம் பெற்ற ஒருவர் சம்பளம் வாங்கிக்கொண்டு தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருப்பார்.

அடுத்த நான்கைந்து மாதங்களில், வெளிவராமல் தூங்கிக் கொண்டிருந்த பல நல்ல தரமான சிறிய படங்கள் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை கனிந்திருப்பதாகப் படுகிறது.

இதற்கு ஒரு மனிதரின் மரணம் தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் துயரம்!