Published:Updated:

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!
பிரீமியம் ஸ்டோரி
சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

Published:Updated:
சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!
பிரீமியம் ஸ்டோரி
சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

ந்துவட்டி கொடுமை தாளாமல் நெல்லையில் தீக்குளித்து இறந்த நான்கு பேரின் சாம்பல்கூட இன்னும் கரையவில்லை. அப்போது, ‘‘கந்துவட்டி கொடுமையை வேரறுப்போம்’’ என முழக்கமிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தலைநகரில், செல்வாக்கான மனிதர்கள் உலவும் சினிமா தொழிலில் கந்துவட்டியின் கொடுமைக்கு ஆளாகி, தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அரசு கள்ள மௌனம் காக்க, ‘‘தயாரிப்பாளர்களும் நடிகர்களும் சேர்ந்து ஃபண்டு சேர்த்துத் தயாரிப்பாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கலாமே’’ என சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். இதுதான் அரசின் குரல் என்றால், இந்த அரசு யாரைக் காப்பாற்ற நினைக்கிறது என்பது புரிந்திருக்கும்.

சினிமாவை ஆளும் அரசியல் வில்லனாக அன்புச்செழியனை வளர்த்துவிட்டவர்கள் யார்? `நடிகர் சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ இணை தயாரிப்பாளரும் உறவினருமான அசோக்குமாரைத் தற்கொலைக்குத் தூண்டினார்’ என அன்புச்செழியன்மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

2003-ம் ஆண்டு மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வி. தற்கொலையின்போது அன்புச்செழியன் பெயர்தான் அடிபட்டது. 2011-ம் ஆண்டு ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தயாரிப்பாளர் தங்கராஜின் புகார் அடிப்படையில் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார். ஆனாலும், அதற்குப்பின் வெளியான பெரும்பாலான தமிழ்ப் படங்களுக்கு அவர்தான் ஃபைனான்ஸியராக இருந்தார். அஜீத், ரம்பா, தேவயானி, லிங்குசாமி, ஞானவேல்ராஜா, விஷால்... என்று அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் நீள்கிறது. இந்த நிலையில் ‘இதுவும் கடந்துபோகும்’ என்கிறார்கள் அன்புவின் ஆதரவாளர்கள். அவரின் ஹிஸ்டரி அப்படிப்பட்டது.

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

கீரைத்துறை கில்லாடி!

ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகன் அன்புச்செழியன். கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். தந்தையிடம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு மதுரைக்கு வந்தவர், தன்னுடைய ஊர்க்காரர்கள் அதிகம் வாழும் கீரைத்துறையில் குடியேறினார். சிறிய அளவில் சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளிகளுக்குத் தவணைக்குப் பணம் கொடுத்து வந்தார்.

பிறகு மீனாட்சியம்மன் கோயிலருகே இருக்கும் சினிமா விநியோகக் கம்பெனிகளுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்து, சினிமாத் தொழிலின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்டார். பழைய படங்களை வாங்கி, கிராமப்புறத் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்யத் தொடங்கினார். அதன்பின்பு புதுப்படங்களை விநியோகிக்க ஆரம்பித்தார். அப்படியே சென்னையிலுள்ள படத்தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய ஃபைனான்ஸியராக ஃபார்ம் ஆனார். மதுரையிலும் சென்னையிலும் அலுவலகம் போட்டார். கேட்டவுடன் எவ்வளவு பெரிய தொகையையும் கொடுப்பதுதான் அன்புவின் ஸ்டைல். கொடுக்கும் பணத்துக்கு ஈடாக சொத்துப் பத்திரங்கள் மட்டுமில்லாமல், படத்தின் விநியோக உரிமையையும் சேர்த்து வாங்கிக்கொள்வார். கடன் வாங்கிவிட்டுத் திருப்பித் தராதவர்களை, மதுரைக்குத் தூக்கிவந்து சொத்துகளை மிரட்டி எழுதிவாங்குவது அன்புவின் வழக்கம் என்கிறார்கள்.

அன்புச்செழியனும் அரசியலும்

கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த அன்புவின் உறவுகள், மதுரையில் தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளிலும் முக்கியப் புள்ளிகளாக வலம்வந்தார்கள். அவர்களின் ஆசி அன்புவுக்குக் கிடைத்தது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக வலம்வந்த சுதாகரனுக்கு நெருக்கமானவராக ஆரம்பத்தில் காட்டிக்கொண்டார். தி.மு.க-வில் பொறுப்பிலிருந்த வேலுச்சாமி, மன்னன், குருசாமி போன்றோரை வைத்து மு.க.அழகிரியின் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அழகிரி மகன் துரை தயாநிதி சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது, அதற்குப் பெரிய அளவில் உதவிகள் செய்தார். ஆனால், அரசியலில் வெளிப்படையாக வந்ததில்லை. அது ஒரு கவசம்தான்.

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரில் அன்பு கைது செய்யப்பட்டார். (பிறகு அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அவர்மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்கிறார்கள்!)அதன்பின் தி.மு.க தொடர்பைத் துண்டித்துக்கொண்டவர், அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 2015-ல் ஜெயலலிதா மதுரை  வந்தபோது அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் சகோதரர் பால்ராஜை அ.தி.மு.க-வில் இணைத்ததும் இவர்தான். அதன்பின்பு விஜயகாந்த்தின் பால்ய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரையும் இணைத்து விட்டார். அன்புவுக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டத் துணைச்செயலாளர் பொறுப்பை செல்லூர் ராஜு பெற்றுக்கொடுத்தார். மதுரையில் அ.தி.மு.க நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் செலவு செய்வது அன்புதான். செல்லூர் ராஜுவுடன் நெருக்கம் காட்டிய அதேநேரத்தில், ஓ.பி.எஸ் மகனுடனும் இறுக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டார். ‘‘அரசியல் தொடர்பிலிருக்கும் பலரின் பணம் இவர் வழியே பாய்கிறது’’ என்பதுதான் திரையுலகில் தீர்க்கமான பேச்சு.

சிக்கிய சசிகுமார்


இயக்குநர் - நடிகர் சசிகுமார் குடும்பம், மதுரை புதுத்தாமரைப்பட்டியில் மிகவும் வசதியான, மரியாதையான குடும்பம். உறவினர்களும் வசதியானவர்கள். கையில் காசில்லாமல் சினிமா எடுக்கப்போனவர்கள் மத்தியில், பணத்துடன் சினிமா எடுக்கச் சென்றவர் சசிகுமார். தன் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ள, மாமன் மகனான அசோக்குமாரைத் தன்னுடன் வைத்துக்கொண்டார். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ தெய்வ நாயகம், அசோக்குமாரின் பெரியப்பா.

‘தாரை தப்பட்டை’ படத்தை ரிலீஸ் செய்ய அன்புச்செழியனிடம் கடன் வாங்கினார் சசிகுமார். படம் பெருத்த நஷ்டம். அடுத்த படமான ‘கொடி வீரன்’ பட்ஜெட்டும் அதிகமாகவே, அதற்கும் அன்புவிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் சிக்கலில், ‘கொடி வீரன்’ படத்துக்காக இன்னொரு ஃபைனான்ஸியரிடமும் கடன் வாங்கியதுதான் அன்புச்செழியனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாம். அதைத் தொடர்ந்து சசிகுமாரையும் அசோக்குமாரையும் கடுமையாகத் திட்டியுள்ளனர் அன்புவின் ஆட்கள். அதன் விளைவாகவே அசோக்குமார் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதுபற்றி சசிகுமார் வாய் திறந்தால் உண்மை வெளிவரும்.

‘‘யார் வந்தாலும் விடமாட்டோம்!’’

நவம்பர் 22-ம் தேதி இரவு 7.30 மணிக்கு அசோக்குமார் உடல், கோமதிபுரத்திலுள்ள அவர் வீட்டுக்கு வந்தது. அஞ்சலி செலுத்த மதுரை வந்த விஷால், அமீர், சமுத்திரக்கனி, ஞானவேல்ராஜா, கருணாஸ் ஆகியோர் மிகவும் சோகமாகவும் கோபமாகவும் இருந்தனர். அசோக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் மிகவும் எமோஷனலாகப் பேசினார்.

‘‘சக தயாரிப்பாளராக, கடன் வாங்கித் தொழில் செய்பவனாகச் சொல்கிறேன். திரைப்பட உலகில் இதுதான் கடைசி மரணமாக இருக்கும். இந்த மாதம் வட்டி கட்ட முடியவில்லையென்றால் எங்கேயும் ஓட மாட்டோம். அடுத்த மாதம் செலுத்துவோம். அதற்காக மோசமாக மிரட்ட நினைத்தால் இனி நடப்பதே வேறு. போலீஸை நாடுவோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு உறுதியாகத் தண்டனை வாங்கித் தருவோம். இந்தப் பட்டியலில் கெளதம் மேனன், பார்த்திபன், நான் உள்பட பலர் உள்ளோம். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துதான் கடன் வாங்குகிறோம். இதுவரை அன்புச்செழியன் கைது செய்யப்படாமல் இருப்பதில் சந்தேகம் உள்ளது. அன்புச்செழியனுக்குச் சாதகமாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார் வந்தாலும் விட மாட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

அன்புச்செழியன்மீது புகார்கள் வந்த பின்பும், அவருடைய அணுகுமுறை இப்படித்தான் என்று தெரிந்த பின்பும், எங்களுக்குப் படம் ரிலீஸ் செய்ய உடனடியாகக் கடன் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் அவரைத்தான் நாட வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் கடவுளிடம் நான் பிரார்த்திக்கப் போவதில்லை; ‘நடவடிக்கை எடுங்கள்’ என்று காவல்துறையினரிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்றார் விஷால்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘‘தமிழ் சினிமாவில் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் ஐம்பது பேர் இருக்கிறார்கள். அதில் அன்புச்செழியனும் போத்ராவும்தான் மோசமானவர்கள். போத்ராமீது சமீபத்தில் அரசு நடவடிக்கை எடுத்தது. மற்ற ஃபைனான்ஸியர் களிடம் கடன் அடைக்கப்பட்டுவிட்டால், கையெழுத்து போட்ட பேப்பரைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். ஆனால், அன்புச்செழியன் திருப்பிக் கொடுப்பதில்லை. அதை வைத்து மிரட்டியே வட்டி வாங்குகிறார். இனிமேலாவது அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’’ என்றார்.

தன் கூடவே பயணித்த உறவினரை இழந்து, மிகவும் நொந்துபோன மனநிலையில் இருக்கிறார் சசிகுமார்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், ஜெ.வேங்கடராஜ்

‘‘அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணத்தை விவசாயிகளுக்குத் தரலாமே?’’

சினிமா உலகம் பற்றி எப்போதும் அக்கறையோடு பேசும் நடிகர் பிரகாஷ்ராஜிடம் கேட்டோம். ‘‘தியேட்டரில் எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்கிற உண்மையான கணக்கை எந்த தியேட்டர்காரரும் தயாரிப்பாளருக்குத் தருவதே இல்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கும் படத்தை இலவசமாகவோ, கேபிள் டி.வி-யிலோ, திருட்டு டி.வி.டி-யாகவோ வெளியிட்டால், அந்தத் தயாரிப்பாளரின் மனநிலை, பொருளாதார நிலை என்னாகும்? இன்றைக்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும், சமூகத்தில் வாழும் நாம்தான் முக்கியக் காரணம்.

சினிமாவை ஆளும் அரசியல் வில்லன்!

இன்றைக்கு நம் கண்ணெதிரே அசோக்குமாரின் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பு எத்தனையோ தயாரிப்பாளர்களின்  தற்கொலைகள் நம் கவனத்துக்கு வராமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. சொந்த வீட்டையே விற்றுவிட்டு நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். சாவதற்கான பாதையைப் புறந்தள்ளுவோம்; வாழ்வதற்கான வழிகளைக் காணுவோம்’’ என்று முடிக்கப் போனவரிடம் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்துக் கேட்டோம்.

திடீரென கோபத்தின் உச்சத்துக்குப் போன பிரகாஷ்ராஜ், ‘‘அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து நாட்டை நடத்தலாமே! மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஓரிடத்தில் வைத்து, தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் கொடுத்து உதவலாமே! என்ன பேச்சு இது? பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பொறுப்பே இல்லாமல் பேசுவது அமைச்சருக்கு அழகா?’’ என்று கொந்தளித்தார்.