Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: “ஒவ்வொரு டாஸ்மாக் கடையுமே எங்கள் கட்சிக்கான கிளைதான்!”

கலகல கட்சிகள் ஜூனியர்: “ஒவ்வொரு டாஸ்மாக் கடையுமே எங்கள் கட்சிக்கான கிளைதான்!”
பிரீமியம் ஸ்டோரி

‘வெளி மாநில சரக்கடித்தாலும் வேலை வாய்ப்பில் (டி.என்.பி.எஸ்.சி) ஒருபோதும் வெளி மாநிலத்தவரை அனுமதிக்க மாட்டோம்!’ என ரைமிங்கில் டைமிங் கலக்கி அப்டேட்டாகப் பிரசாரம் செய்துவருகிறார்கள் ‘தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்பு உணர்வு சங்க’த்தினர். அதிரடியாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ‘சட்டசபையில் சரக்கு பற்றிப் பேசிட எங்கள் வேட்பாளரை ஜெயிக்க வையுங்கள்’ என எகிடுதகிடாக பிரசாரம் செய்து கலக்கிய அமைப்பு இது. 

‘‘சரக்கு அடிப்பவர்களுக்காக ஒரு சங்கமா?’’ என்ற கேள்வியை ஆச்சர்யத்துடன் கேட்டால், ‘‘என்ன அப்படிக் கேட்டுட்டீங்க...” என்று ஆரம்பித்தார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்லபாண்டியன்.  “ஆண்டவனில் ஆரம்பித்து ஐ.டி கம்பெனிகள்வரை எல்லா இடங்களிலும் மது இருக்கு. மரங்கள் சாய்ந்தாலும், மதுக்குடிப்போர் சாய்ந்தாலும் அது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. அதனால்தான், குடிகாரர்களின் ஆரோக்கியம் காக்கவும், அவர்களின் குடும்பத்தார் நலன் காக்கவும் இந்தச் சங்கத்தை ஆரம்பித்தோம்’’ என்கிறார் ‘தெளிவாக’!

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே. நகர் தொகுதியில், ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறங்கினார்,

த.ம.கு.வி சங்கத்தின் வேட்பாளர் குமாரசாமி. அவர், 57 வாக்குகள் வாங்கியதில் அ.தி.மு.க-வினரே அரண்டு போய்விட்டனராம். நெக்ஸ்ட்.... நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  தயாராக இருக்கிறார். இந்தச் சங்கத்தின் கோரிக்கைகள் - கொள்கைகள்(!) குறித்து ‘அடுத்த ரவுண்டு’ பேச ஆரம்பித்த செல்லபாண்டியன், ‘‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மதுவையும் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்தால்தான் கலப்பட சரக்கு ஒழியும். போதையை அதிகப்படுத்துவதற்காக மதுவில் ‘ஹான்ஸ்’ சேர்க்கிறார்கள். உடலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தச் சரக்கை அடித்துவிட்டு, இடுப்பில் துணி இருக்கிறதா, இல்லையா என்பதுகூடத் தெரியாமல் நடுத்தெருவில் சிலர் மட்டையாகி விடுகிறார்கள். மது குடித்தாலும் மானத்துடன் வாழ நினைப்பவர்கள் நாங்கள். அதனால்தான், ‘குடிகாரர்கள் அனைவரும் டவுசர் மாடல் ஜட்டிகளையே அணிய வேண்டும்’ என்று தெருத்தெருவாக போஸ்டர் அடித்துப் பிரசாரம் செய்கிறோம்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “ஒவ்வொரு டாஸ்மாக் கடையுமே எங்கள் கட்சிக்கான கிளைதான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2015 மழை வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்தோம். மழையால் கூலி வேலைக்கும் போகமுடியாமல், குவார்ட்டர் வாங்கிக் குடிக்கவும் வழியில்லாமல் சிரமப்பட்டவர்களுக்காக, ‘மதுபான விலையைப் பாதியாகக் குறைக்கவேண்டும்’ என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம். எங்கள் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘நாங்கள் குவார்ட்டரில் கை வைத்தால்தான், ஆட்சியாளர்கள் கோட்டையில் கொடி ஏற்றமுடியும்’ என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, டாஸ்மாக் வருமானத்திலிருந்து தனி மருத்துவமனைகள் அமைத்து, குடிகாரர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் ‘ஓப்பன்’ பண்ணக்கூடாது என்கிறார்கள். அதனால்தான், சென்னை மாநகர மதுக்கடைகளை யெல்லாம் ஒட்டுமொத்தமாக தீவுத்திடலுக்கு இடம் மாற்றி, எங்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘மால்’ ஒன்றை அங்கே ஏற்படுத்தித்தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியைத் தடைசெய்யப்போவதாக வியாபாரிகள் அறிவித்ததும் நாங்களெல்லாம் அதிர்ந்துபோனோம். டாஸ்மாக் மதுபானங்களில் கோக், பெப்சி கலந்து குடித்தால்தான் எங்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது. திடீரென இந்தக் குளிர்பான விற்பனையைத் தடைசெய்தால், குடிகாரர்களது மனநிலை பாதிக்கப் படும். எனவே, மது குடிப்போரை பாதிக்கும்விதமாக முடிவுகளை எடுக்கக்கூடாது.

சரக்கு சம்பந்தப் பட்ட எங்கள் கோரிக்கைகளைச் சட்டசபையில் எடுத்து வைக்கும் விதமாகத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட் டோம். அடுத்த கட்டமாக, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடு வதற்கான முன்னேற்பாடு களைச் செய்து வருகிறோம்! (மோடிக்கு செக்?)

கலகல கட்சிகள் ஜூனியர்: “ஒவ்வொரு டாஸ்மாக் கடையுமே எங்கள் கட்சிக்கான கிளைதான்!”

தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் கடைகள், 4,700 பார்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடை யிலும் 500 பேர் என்று கணக்கு வைத்தால்கூட எங்கள் கட்சிக்கான ஆதரவு எங்கேயோ போய்விடுகிறது. அந்தவகையில், ஒவ்வொரு டாஸ்மாக் கடையுமே எங்கள் கட்சிக்கான கிளைதான். அதனால், அடுத்த தேர்தலில் எங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.

குடிகாரர்களுக்கான சங்கம் என்றதும், எங்களை எல்லோரும் ஏளனமாகப் பார்க்கிறார்கள். நாங்கள் குடிப் பழக்கத்தை ஆதரிக்கவில்லை... குடிப்பழக்கத்தை விட்டொழியுங்கள் என விழிப்பு உணர்வுப் பிரசாரம்தான் செய்கிறோம். குடியினால் கணவனை இழந்த பெண்கள், அவர்களின் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும் போராடுகிறோம்’’ என்று சென்ட்டிமென்ட் டச் கொடுத்த செல்லபாண்டியனுக்கு, ‘மதுப் பழக்கம் இல்லை’ என்பதுதான் ஹைலைட்!

- த.கதிரவன்,
படங்கள்: க.பாலாஜி