Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

Published:Updated:
கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

நூறு பேர் வேண்டும்!

ட்சிக்குத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், நிறுவனர் என ஆல் ‘போஸ்ட்’களையும் ஒரே ஆளாகத் தலையில் சுமந்தபடி, கட்சி நடத்தும் பலர் இங்கு உண்டு. இவர்களால், தங்கள் கட்சிகளைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யக்கூட முடியாது. அதற்கான விதிகள் கடுமையாக உள்ளன.

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

ஒரு கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், தேர்தல் ஆணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், பதிவு செய்வதற்கான கட்டணம் 10,000 ரூபாய். கட்சியின் கொள்கைகள், சட்ட விதிகள் எதுவும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதிக்காதபடி இருக்க வேண்டும். இந்தச் சட்டவிதிகளைக் கட்சியின் லெட்டர் பேடில் டைப் செய்து, பொறுப்பாளர்கள் கையெழுத்திட வேண்டும். ‘கட்சியைக் கலைப்பதற்கோ, வேறு கட்சியுடன் இணைப்பதற்கோ, என்ன வழிமுறையைப் பின்பற்றுவோம்’ என்பதையும் தெரிவிக்க வேண்டும். கட்சிப் பொறுப்புகளுக்கு எப்படித் தேர்தல் நடத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

எல்லாவற்றையும்விட முக்கியமாக, கட்சியில் குறைந்தபட்சம் 100 பேராவது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இவர்களின் பிரமாணப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்திய வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த வாக்காளர் பட்டியல் பிரதிகளை இணைக்க வேண்டும். ‘இந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கும் யாரும், வேறு எந்தக் கட்சியிலும் இல்லை’ என்று கட்சியின் தலைவரோ, பொதுச்செயலாளரோ பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

கட்சியின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும். கட்சியை ஆரம்பித்து 30 நாள்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிவுபெற விண்ணப்பம் செய்ய வேண்டும்.

- அகஸ்டஸ்     

‘‘ரெண்டு கட்சிகளுக்கு ஒரே பொதுச்செயலாளர்!’’

தி
ருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரில் டியூஷன் சென்டர் ஒன்றில் செயல்படுகிறது பாரத் மக்கள் கட்சி (பி.எம்.கே). நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை தனிமனிதனாக ஏற்றுக் கட்சியை நடத்திவருகிறார் அண்ணாதுரை. ‘‘மொத்தமா 65 கொள்கைகளை முன்வெச்சு நம்ம கட்சி இயங்குது’’ என அதிர்வேட்டு போடுகிறார். பல்லடம் நகராட்சிக்குக் குப்பைக்கிடங்கு அமைக்கப் புறநகரில் நிலம் வாங்கினார்கள். ஆனால், அதற்கான வழித்தடத்தை வாங்காததால், குப்பை லாரிகள் அங்கு போகமுடியவில்லை. ‘குப்பை லாரிக்குப் பதிலாக ஹெலிகாப்டர்களைத் தமிழக அரசு வழங்கினால் வானத்தில் பறந்துபோய் குப்பை கொட்டலாம்’ என நகரம் முழுக்க இவர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பு கிளப்பியது.

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

‘‘பாரத் மக்கள் கட்சி என் சொந்தக்கட்சி. அதுபோக என்னுடைய நண்பர் ஜெகன்னாத் மிஸ்ரா கேட்டுக்கொண்டதால், அவர் நிறுவனத்தலைவராக இருக்கும் ‘மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்கிற கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கேன். உலகத்திலேயே இருவேறு கட்சிகளுக்குப் பொதுச்செயலாளராக இருப்பது நான் ஒருத்தன்தான்’’ என்கிற அண்ணாதுரையை, பிரபலமான மூன்று கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தனவாம். ‘‘தனித்துப்போட்டி என்கிற முடிவில் உறுதியாக இருப்பதால் மறுத்து விட்டேன்’’ எனச் சிரிக்காமல் சொல்கிறார்.

- ஜி.பழனிச்சாமி

“கோட் மாட்டி துண்டு போடணும்!”

ருணாநிதியால், ‘முரட்டு பக்தன்’ என அழைக்கப்பட்டவர் மறைந்த தூத்துக்குடி பெரியசாமி. கடந்த 36 ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர், அவர். அவருடைய மகள் கீதாஜீவன் ஒரு முன்னாள் அமைச்சர். இவர், இப்போது சட்டமன்ற உறுப்பினர். கீதாஜீவனின் தம்பி ராஜா ஒரு வழக்கறிஞர். பெரியசாமி இருந்தபோதே தி.மு.க-விலிருந்து பி.ஜே.பி-க்குத் தாவி, அங்கிருந்து தே.மு.தி.க-வில் இணைந்தார் ராஜா. அங்கு பதவி கிடைக்காததால், அதிலிருந்து விலகினார். ‘நாம் இந்தியர் அமைப்பு’ என்ற கட்சியை ஆரம்பித்து, அதற்குத் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

தனது கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தைத் தூத்துக்குடியில் நடத்திய ராஜா, ‘‘அரசியல்வாதின்னா வேட்டிதான் கட்டணுமா? வேட்டி, தமிழனோட அடையாளம். அது அரசியல்வாதியோட அடையாளம் இல்ல. எங்க கட்சியில சேர்றவங்க வேட்டி கட்டணும்னு அவசியம் இல்ல. பேன்ட், ஷர்ட், கோட் போட்டுக்கலாம். ஆனா, கட்சியோட கரைத் துண்டை கண்டிப்பா தோள்ல போட்டுக்கணும். கேள்வி கேட்காம எதுவும் நடக்காது. கேட்டாத்தான் எல்லாமே நடக்கும். அதனால நிறைய பேச்சாளர்களை உருவாக்கப்போறோம். வரப்போற உள்ளாட்சித் தேர்தல் முதல் எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல் வரை எல்லா தேர்தல்லயும் எங்க கட்சி வேட்பாளர்கள் நிற்பார்கள். மற்ற கட்சிகள்ல சீட்டு கிடைக்காதவர்களுக்கு எங்க கட்சியில இடம் இல்லை’’ என அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, மழை அடித்துக் கூட்டத்தை முடித்துவைத்துவிட்டது.

- இ.கார்த்திகேயன், படம்: ஏ.சிதம்பரம்

அ.தி.மு.க. தெரியும்... ஆ.தி.மு.க., தெரியுமா?

‘திராவிடர்களும் முன்னேறவில்லை; ஆரியர்களும் முன்னேறவில்லை. இவர்களை முன்னேற்றுவதாகச் சொல்லிச் சொல்லி அரசியல்வாதிகள் மட்டுமே முன்னேறி வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் திராவிடர்களையும் ஆரியர்களையும் முன்னேற்றுவது மட்டுமே என் கடமை. அதனால்தான் இப்படி ஒரு பெயரை என் கட்சிக்கு வைத்தேன்’’ என்கிறார், ஆரிய திராவிட வளர்ச்சி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் லார்டு பால்ராஜ்.

‘‘முன்பு ‘ஏழைகள் முன்னேற்றக் கட்சி’ என்றுதான் பெயர் வைத்திருந்தேன். பெயரை மாற்றியபிறகு, என் கட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்.

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

இங்கிலீஷுக்குத் தடை, இறக்குமதியை ஒழித்தல், தரமான பொருள்களை உள்நாட்டிலேயே தயாரித்தல், விவசாயத்தை அரசுடைமையாக்குதல்... இதெல்லாம் எங்க கொள்கைகள். குறிப்பாக, வெளிநாடுகளிடமிருந்து எதையும் இந்தியா வாங்கக்கூடாது. அனைத்துப் பொருள்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படணும். அப்போதுதான், நம் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்’’ என்கிறார்.

அப்புறம் ஏன் பெயருக்கு முன்னாடி லார்டு?

‘‘நான் லார்ட்ஸ் கிளப் இன்டர்நேஷனல்னு ஒரு கிளப் வெச்சிருக்கேன். அதனால இப்படி! நம்ம பெயருக்கு முன்னாடி ‘லார்டு’ இருப்பது பெருமைதானே? ஏழைகள் எல்லாரும் பெயருக்கு முன்னால ‘லார்டு’ சேர்த்துக்கணும்!’’

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!

- ஜெ.அன்பரசன்

தேர்தலில் நிற்க முடியாத தலைவர்!

‘‘அரசியலுக்குப் பணம் வேண்டும். அல்லது ரஜினி, கமல் மாதிரி ஒரு கவர்ச்சிகரமான தலைவரின் பப்ளிசிட்டி வேண்டும். ரெண்டுமே இல்லைன்னா தாக்குப்பிடிக்கறது கஷ்டம்’’ என்று கலகலக்கிறார் ‘விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி’யின் தலைவர் கார்த்திக்ராஜா.

கலகல கட்சிகள் ஜூனியர்: துணுக்குகள்

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ஆனால், அந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட 25 வயதாகி இருக்க வேண்டும். எனக்கு 23 வயது என்பதால் நான் போட்டியிட முடியவில்லை.  

எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை. படித்தது திருச்சி அரசு சட்டக்கல்லூரி. சமூக அவலங்களுக்கு எதிராக எல்லோருக்கும் இருக்கிற கோபம்தான் எங்களையும் அரசியலுக்கு வரவெச்சுது. ‘மாற்று அரசியலுக்கான இளையோர் கூட்டமைப்பு’ என்ற பெயரில், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து, 2012-ம் ஆண்டில் கட்சி ஆரம்பித்தோம். எல்லா வி.ஐ.பி தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கினோம். தமிழகத்தில் பரவலாக 16 மாவட்டங்களில் எங்களுக்குத் தொண்டர்கள் இருக்காங்க. ஆனா, அவர்கள் குறித்த டேட்டாக்களைச் சேகரிக்கவே பணம் தேவைப்படுகிறது. இதுதான் நிஜமான அரசியல் நிலைமை’’ என்றார் ஆதங்கத்துடன்.

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: வி.சதிஷ்குமார்