Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

உரிமைக்குரல் எழுப்பும் அ.எம்.ஜி.ஆர்.ம.மு.க

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

உரிமைக்குரல் எழுப்பும் அ.எம்.ஜி.ஆர்.ம.மு.க

Published:Updated:
கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”
கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

ரோஸ் கலர் எம்.ஜி.ஆரைப் பார்த்திருப்பீர்கள்... கறுப்பு கலர் எம்.ஜி.ஆரையும்கூடப் பார்த்திருப்பீர்கள். பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா என்று பளீரென பன்னிரண்டு கலர்களில் ஜொலிக்கும் எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டாபிராமுக்குப் போனால் பார்க்கலாம்.

சென்னையை அடுத்த பட்டாபிராமில், கண்ணைப் பறிக்கும் கலர்களில் பேன்ட் - சட்டை, டை, கூலிங்கிளாஸ், தொப்பி சகிதமாக ஊரை வலம்வரும் இந்த ‘எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்’ ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச்செயலாளர்.

‘‘எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு. ஆனால், என் பெயர்ல இருக்கற எம்.ஜி.ஆர் அவர் இல்லை. என்னுடைய தாத்தா முருகப்பன், பாட்டி கங்கம்மா, அப்பா ரங்கநாதன் ஆகியோரோட பெயர்களிலிருந்து முதல் எழுத்துகளை எடுத்துக் கோத்து, என் பெயருக்கு முன்னால் எம்.ஜி.ஆர் என்று இனிஷியலாகச் சேர்த்துக் கொண்டேன்’’ என்று ஸ்டைலாகப் புன்னகைக்கிறார், விஸ்வநாதன்.

‘‘எம்.ஜி.ஆர் பிறந்த தேதியில் தான் நானும் பிறந்தேன் (அடடே!). படிக்கும் காலத்திலேயே எம்.ஜி.ஆரைச் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் உதவினார்; படித்து முடித்ததும் நேரடியாகத் தலைமை யாசிரியர் பதவியிலும் என்னைப் பணியமர்த்தினார்; அவரது ஆசியில்தான் திருமணமும் செய்து கொண்டேன்.

ஒயிட் அண்ட் ஒயிட் உடையில், டை கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குப் போய்வருவேன். ரிட்டயர்டு ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு சேஞ்சுக்காக மஞ்சள் கலர் பேன்ட், சட்டை அணிந்து பள்ளிக்கூடம் போனேன். மாணவர்கள் எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர் (ஆஹான்!). ‘இந்த டிரஸ் உங்களுக்கு நல்லாருக்கு சார்’ என்று அவர்கள் சொன்னதால், அன்றிலிருந்து அதையே ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டேன்.

வெளியில் செல்லும்போது, ‘எம்.ஜி.ஆர் மாதிரி கூலிங்கிளாஸ், தொப்பி அணிந்து கொள்ளுங்களேன்’ எனப் பொதுமக்கள் வற்புறுத்தியதால் (இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்குறாங்களேப்பா!) இப்போது இந்த எம்.ஜி.ஆர் கெட்டப்பிலேயே வலம்வருகிறேன். ‘இதென்ன கோமாளி மாதிரி’ன்னு சிலர் கிண்டல் பண்றாங்க. அதனால, சில சமயம் தொப்பியும், கண்ணாடியும் அணிவதில்லை’’ என்று தன்வரலாறு கூறியவர், இப்போதைய அரசியலுக்குள் வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

‘‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்கள் எல்லோருமே கொள்கைப் பிடிப்பு இல்லாத, சுயநலம் மிக்கவர்கள்தான். ஜெயலலிதாவைத் தொண்டர்கள் அவ்வளவு எளிதில் அணுகமுடியாது. எல்லாவற்றையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நானே இப்போது அ.தி.மு.க தொண்டர்களைக் காப்பாற்ற அ.எம்.ஜி.ஆர்.ம.மு.கழகத்தை ஆரம்பித்துவிட்டேன்.

‘இரட்டை இலைச் சின்னத்தை எங்கள் கட்சிக்குத்தான் தரவேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டனாக இரட்டை இலையைக் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. தருவதும் தராததும் அவர்களுடைய உரிமை! (அர்ர்ருமை).

2016-ல் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யப் போனேன். ‘இங்கு போட்டியிடாதீர்கள்’ என்று அ.தி.மு.க தொண்டர்கள் கேட்டுக் கொண்டதால், அம்பத்தூர் தொகுதிக்கு வந்து மனுத்  தாக்கல் செய்தேன்’’ என மூச்சுவிடாமல் பேசியவரிடம், ‘‘எவ்வளவு வாக்குகள் வாங்கினீர்கள்?’’ என்றோம்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

‘‘அதையெல்லாம் நான் கேட்க வில்லை(?). அப்போது நான் கட்சி ஆரம்பித்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. அதனால், டெபாசிட் வாங்கவில்லை (இப்போ மட்டும்?). தமிழகம் முழுக்க எங்கள் கட்சிக்கு நான்கரை லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இருக்கிறார்கள் (உங்க கட்சிக்கு இருக்கிறார்களா?). அதனால், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதும், ஆட்சியைப் பிடிப்பதும்தான் எங்கள் கட்சியின் ஒரே கொள்கை!’’ என்று உறுதியுடன் சொன்னார், எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்.

இலைக்காகப் போராடும், எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன், தீபா வகையறாக்கள் கவனிக்க!

- த.கதிரவன்

‘‘அடிக்கடி வசூலுக்குப் போறதில்லை!’’

கலகல கட்சிகள் ஜூனியர்: “இரட்டைஇலை எங்களுக்குத்தான்!”

தமிழக மனித உரிமைக் கட்சியின் தலைவர் இராமதாஸ். தலைவர் பதவியை மட்டுமல்ல... பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், தொண்டர்கள் என அனைத்துப் பதவிகளையும் 20 ஆண்டுகளாக ஒற்றை ஆளாய் இவர் சுமக்கிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் வலம்வரும் இவருக்கு, வெள்ளைச் சட்டையில் அம்பேத்கர் பேட்ஜும் தோளில் நீலநிற சால்வையும் தனி அடையாளங்கள். காவல் நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் கைகூப்பிக் காரியம் சாதிப்பதில் கெட்டிக்காரர். 

‘‘கூட்டணிக்காக போயஸ் கார்டன் வரை சென்றுள்ளேன்’’ என்கிறார் பெருமையாக. சரி, கட்சி நடத்த செலவுகளுக்கு? ‘‘எல்லாக் கட்சிகளையும் போல நன்கொடை வசூல்தான். வர்த்தகர் சங்கம் நிறைய உதவி செய்றாங்க. ஏதாவது நிகழ்ச்சி என்றால்தான் வசூலுக்குப் போவேன்!’’ என்கிறார் சிரித்தபடி.

- மு.இராகவன்