Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”
பிரீமியம் ஸ்டோரி

‘‘ ‘தேர்தல் நேரத்தில் செயல்படு... மற்ற நேரத்தில் வேலையைப் பாரு’ என்பதுதான், எங்கள் கட்சியின் கொள்கை. வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடித்தால், நிஜமாகவே மக்களுக்குச் சேவை செய்வோம். அது எந்தளவுக்கு என்றால், எங்கள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வாசல் கூட்டி, கோலம் போட்டு, சோறு சமைத்து, குழம்பு வைத்துத் தருவார்கள். இதுதான் உண்மையான மக்கள் பணி...’’

- இது, சினிமாவில் வடிவேலு பேசும் டயலாக் இல்லைங்க... சேலத்தில் செயல்படும் ‘பிஸ்மில்லா மக்கள் கட்சி’யின் கொள்கையே இதுதான்.

பிஸ்மில்லா கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர், ‘சிலிண்டர்’ ஷாஜகான். 2016 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஷாஜகானுக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம், சிலிண்டர். அதனால், இவரை ‘சிலிண்டர்’ ஷாஜகான் என்று இவருடைய தொண்டர்கள் பாசத்துடன் அழைக்க ஆரம்பித்தனர். கடைசியில் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. இவர் ஒரு வழக்கறிஞர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

‘‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சுமார் ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு தனி ஓர் ஆளாக, பிஸ்மில்லா மக்கள் கட்சியைத் தொடங்கினேன். ஆள் இல்லாத கட்சி என்று குறைச்சு எடைபோட்டுடாதீங்க (எத்தனை கிலோ வெயிட்?). தினந்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்கு க்யூவில் வந்து நிற்கிறார்கள் . (ஸ்ஸப்பா!) ‘தேர்தல் நேரத்தில் செயல்படு. மற்ற நேரத்தில் சொந்த வேலையைப் பாரு’ என்ற கட்சியின் கொள்கையை அவர்கள் அனைவரிடமும் அன்பாகச் சொல்லி அனுப்பிவைக்கிறேன். (தப்பிச்சாங்க!)

என் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் நெரிசலிலிருந்து என்னை விலக்கிவிடுவதற்காக 20 பேர் கொண்ட தொண்டர் படையை மட்டும் வைத்திருக்கிறேன். (இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா சாமி...)

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல், உண்ணாவிரதம்... இதெல்லாம் எங்களுக்கு அலர்ஜி (ம்ம்ம்... அப்புறம்?). மிக முக்கியமான மக்கள் பிரச்னையாக இருந்தால் மட்டும், வேலைக்குப் போகிற வழியில் அரை மணி நேரம் அடையாள ஆர்ப்பாட்டம் செஞ்சுட்டுப் போயிடுவோம். மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது பாருங்க... அதுக்காக 20-க்கும் குறைவான தொண்டர்கள் மட்டும் கூடுவோம். (அதுக்கு மேல வந்துட்டாலும்...)

ஆட்சியைப் பிடித்ததும் என்னுடைய முதல் கையெழுத்து, தேர்தல் சட்டத்தைச் திருத்துவதற்குத்தான் இருக்கும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஓட்டுப்போட வருகிற மக்களுக்கு போண்டா, டீ, காபி கொடுத்து ஒரு நாள் சம்பளமும் கொடுக்கச் சொல்வோம். ஜனநாயகத்தைக் காப்பாத்தறதுக்குத்தானே அவங்க க்யூவில் நிக்கிறாங்க (ஆஹா!). இப்போது, இரட்டை இலைக்காக சண்டைபோடுவதுபோல, சின்னத்துக்காக யாரும் சண்டைபோடக்கூடாது. அதுக்காக, வேட்பாளரின் புகைப்படத்தையே சின்னமாக அறிவிச்சிடுவேன். எங்கள் கட்சியின் சின்னமே என் முகம்தான். எங்கள் கட்சியின் கொடி, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

சமத்துவ சமுதாயம்தான் எங்கள் லட்சியம். எல்லா பதவிகளுக்கும் கல்வித் தகுதிதான் அடிப்படை. திருடன், போலீஸ் ஆகலாம். போலீஸ், திருடன் ஆகலாம். பிச்சைக்காரன், பேங்க் மேனேஜர் ஆகலாம். பேங்க் மேனேஜர், பிச்சைக்காரன் ஆகலாம். (சூப்பரோ சூப்பர்!) இதுவே உண்மையான சமத்துவம்’’ என்றார் ஷாஜகான்.

- வீ.கே.ரமேஷ், படம்: க.தனசேகரன்
ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, சுரேஷ்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

செயல்படாத கட்சிகள் எத்தனை?

ந்தியாவில் பதிவுபெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து 255 கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. “ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில்கூட யாரையும் நிறுத்தியதற்கு ஆதாரமும் இல்லை’’ என்று இந்தக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்களை ஆணையம் திரும்பப்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை மத்திய நேரடி வரி வாரியத்துக்கு (CBDT) தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலித்து வருமானவரிச் சலுகை பெறமுடியும். அதற்காகவே கட்சி ஆரம்பித்தவர்களும் உண்டு. இனி, இந்தக் கட்சிகள் அப்படிச் சலுகை பெறமுடியாது.

சில கட்சிகள், தங்களின் அலுவலகம் என்று கொடுத்திருந்த முகவரிகளைத் தேர்தல் ஆணையம் ஆராய்ந்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அனைத்திந்திய முற்போக்கு ஜனதா என்று ஒரு கட்சி... மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டு முகவரியைத் தன் அலுவலக முகவரியாக அந்தக் கட்சி கொடுத்துள்ளது. பவித்ர ஹிந்துஸ்தான் கழகம் என்ற கட்சி கொடுத்துள்ள முகவரியில்தான், காஷ்மீர் போலீஸின் சி.ஐ.டி பிரிவு அலுவலகம் பல ஆண்டுகளாகச் செயல்படுகிறது. அகில பாரத டஸ்ட்கர் மோர்ச்சா, ராஷ்ட்ரிய யுவ லோக்தந்த்ரிக் கட்சி ஆகிய இரண்டும், டெல்லியில் பல நீதிமன்றங்கள் செயல்படும் ‘பாட்டியாலா ஹவுஸ்’ வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கப்படும் சேம்பர்களையே முகவரியாகக் கொடுத்துள்ளன.

- ந.பா.சேதுராமன்

கலகல கட்சிகள் ஜூனியர்: “வெள்ளை நிறம் எங்கள் கொடி... வெற்றிச் சின்னம் என் படம்!”

தமிழ்நாட்டில் தண்டிக்கப்பட்ட கட்சிகள்!

ரு கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துவிட்டால், அதை வைத்து ஏகப்பட்ட சலுகைகளை வாங்க முடிகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இப்போது எல்லா கட்சிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து, பெயருக்குச் செயல்படும் கட்சிகளுக்கு வழங்கியுள்ள சலுகைகளைப் பறிக்கிறது. கடந்த டிசம்பரில் இப்படி தமிழ்நாட்டில் தண்டிக்கப்பட்ட சில கட்சிகளின் பட்டியல் இதோ...

மக்கள் தமிழ் தேசம், மறுமலர்ச்சி தமிழகம், பச்சை குடிமக்கள் கட்சி, மக்கள் நீதிக் கட்சி, ராஜீவ் மக்கள் கட்சி, ராம் மாநிலங்களவை பாதை, தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ், தமிழக முன்னேற்ற முன்னணி, தாயக மக்கள் கட்சி, தொண்டர் காங்கிரஸ், பழங்குடி மக்கள் கட்சி, உழைப்பாளர் கட்சி, உழைப்பாளர் பொதுநல கட்சி, அனைத்திந்திய எம்.ஜி.ஆர் கட்சி, பாரத மக்கள் காங்கிரஸ், பாரதிய ஜனநாயக தளம், கிருஸ்துவ மக்கள் கட்சி, ஜனநாயக ஃபார்வர்டு பிளாக், திராவிட மக்கள் காங்கிரஸ், விவசாயிகள் வளர்ச்சிகள் கட்சி, கிராம முன்னேற்ற கழகம், ஐக்கிய மக்கள் முன்னேற்றக் கழகம், காஞ்சி அறிஞர் அண்ணா திராவிட மக்கள் கழகம், எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம்.

- ந.பா.சேதுராமன்