Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: ‘பாக்கெட் மணி’யில் பக்கா கட்சி!

கலகல கட்சிகள் ஜூனியர்: ‘பாக்கெட் மணி’யில் பக்கா கட்சி!
பிரீமியம் ஸ்டோரி

‘‘எங்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் நல்லவர் என்று தெரிந்தால், அவருக்கு வழிவிட்டு அந்த வேட்பாளரையே ஜெயிக்க வைப்போம். இந்தியாவின் ஒற்றுமைதான் எங்களுக்கு முக்கியம். இந்தியா முழுக்க எங்களுக்குக் கிளைகள் இருக்கு. நிறைய மாநிலத் தேர்தல்களில் போட்டியிட ஏகப்பட்ட திட்டங்கள் எங்களிடம் உண்டு’’ என உற்சாகமாகப் பேசுகிறார் சுபி. ‘வருங்கால இந்தியா கட்சி’யின் தலைவர் இவர்.

‘‘2013-ல் கட்சி தொடங்கினோம். தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., காங்கிரஸ் என எக்கச்சக்கமான கட்சிகள் இருக்கு. ஆனால், இளைஞர்களுக்கென பிரத்யேகக் கட்சி இல்லை. இந்தக் கட்சிகளிடம் போய் சீட் கேட்கவேண்டிய நிலையில் இளைஞர்கள் இருக்கிறார்கள். இதை மாற்றவே, இளைஞர்களுக்கென சுதந்திரமான கட்சி ஒன்று வேண்டும் என்று நினைத்தோம்.நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கட்சியைத் தொடங்கினேன். நான், ஏரோநாட்டிகல் இன்ஜினீயர். இப்போது, முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டதால், வேலைக்குப் போவதில்லை’’ என்கிறார்.

கலகல கட்சிகள் ஜூனியர்: ‘பாக்கெட் மணி’யில் பக்கா கட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சுமார் 500 உறுப்பினர்களுடன் கட்சியைத் தொடங்கினோம். இப்போது, இந்தியா முழுக்க 10,000 உறுப்பினர்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 3,000 பேர் இருக்கிறோம். இவ்வளவு இருந்தும், நாங்கள் வெளியே தெரியாமல் போனதற்குப் பண வசதியோ, அரசியல் பின்புலமோ இல்லாததுதான் காரணம். 2016 சட்டமன்றத் தேர்தலில் சோழிங்கநல்லூர், மாதவரம், கிள்ளியூர், நாகர்கோவில் என நான்கு தொகுதிகளில் போட்டியிட்டோம். வேறு பல இடங்களில் எங்கள் வேட்பாளர்களுக்கு உரிய வயதாகவில்லை எனச் சில விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டனர். நாங்கள் நின்ற இடங்களில் சிலர் பிரச்னை செய்தனர். அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி எனச் சில கட்சியினர் ‘ஏன் நிக்கிறீங்க. எங்ககூட சேருங்க’ என்று கூப்பிட்டார்கள்.

சோழிங்கநல்லூரில் 1000-க்கும் அதிகமான  வாக்குகள் வாங்கினோம். நான் போட்டியிட்ட நாகர்கோவிலில் 150 வாக்குகள். எங்களுடைய அரசியல் செலவுகளுக்கு வீட்டில் கொடுக்கும் ‘பாக்கெட் மணி’யைத்தான் பயன்படுத்துகிறோம். ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் மற்ற மாநில இளைஞர்களையும் இணைக்கிறோம். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டம் வைத்திருந்தோம். நேரம் இல்லாததால் மிஸ் ஆகிவிட்டது. இப்போது, தெலங்கானாவுக்குக் குறிவைத்துள்ளோம். தமிழகத்தைத் தலைநகராக வைத்து இந்திய முழுக்க ஆட்சி நடத்துவதுதான் எங்களின் எதிர்காலத் திட்டம்’’ என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுபி.

நல்லா இருக்கே!

- சி.மீனாட்சி சுந்தரம்