Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: “முதல்வராகப் போற நாளை எதிர்பாத்துக்கிட்டிருக்கேன்...” இது ‘வாழ்வா சாவா’ கட்சி

கலகல கட்சிகள் ஜூனியர்: “முதல்வராகப் போற நாளை எதிர்பாத்துக்கிட்டிருக்கேன்...”  இது ‘வாழ்வா சாவா’ கட்சி
பிரீமியம் ஸ்டோரி

“பிறப்பு முதல் இறப்புவரை உங்களின் பிரச்னைகளை எங்களிடம் சொல்லுங்க... தீர்வை நாங்க தர்றோம்...” என்கிறார், ‘வாழ்வா சாவா’ கட்சியின் தலைவர்.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல. ‘‘கட்சிக்கு இப்படி ஒரு பெயரா... எதற்காக கட்சி ஆரம்பிச்சீங்க பாஸ்?’’ என்று ‘வாழ்வா சாவா’ கட்சியின் தலைவரான சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷிடம் கேட்டோம்.

‘‘பிறந்தது முதல் வயதாகி இறக்கும்வரை ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்னைகள். அவற்றைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை. அதுபற்றி ஆழ்ந்து யோசித்தபோதுதான், நாமே ஏன் அப்படியொரு கட்சியை ஆரம்பிக்கக்கூடாது என்று தோன்றியது. 2015-ம் ஆண்டு மே மாதம் ‘வாழ்வா சாவா’ கட்சியை ஆரம்பித்தோம். பலரும் பணம் சம்பாதிக்கறதுக்குத்தான் அரசியலுக்கு வருவாங்க... ஆனால், என்னுடைய கட்சியின் நோக்கமே, மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடித் தர்றதுதான். எங்க கட்சியோட கொடியே, இந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கும்’’ என்றவர், அதற்கான விளக்கத்தையும் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகல கட்சிகள் ஜூனியர்: “முதல்வராகப் போற நாளை எதிர்பாத்துக்கிட்டிருக்கேன்...”  இது ‘வாழ்வா சாவா’ கட்சி

‘‘கொடியின் மேல்புறம் உள்ள வெள்ளை நிறம், குழந்தையின் மனதைக் குறிக்குது; நடுவில் இருக்கும் சிவப்பு நிறம், வளரும் பருவத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் குறிக்குது; கொடியின் கீழ்ப்புறத்தில் உள்ள கறுப்பு நிறம் மரணத்தைக் குறிக்குது. படிப்படியா எல்லா பிரச்னைகளையும் தீர்ப்போம்னு எங்களோட கொடியே சொல்லிடுது.

இதுவரை நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கேன். 2016-ம் ஆண்டு ஆர்.கே நகர் தொகுதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவே வேட்புமனுத் தாக்கல் செய்தேன். ஆனால், அதிகாரிகள் வேண்டுமென்றே என் நாமினேஷனைச் சூழ்ச்சி செய்து தடுத்துட்டாங்க. அதற்காக ஜெயலலிதா, தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகத் தேர்தல் அதிகாரிகள்னு மொத்தம் 33 பேருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அந்த கேஸ் இப்பவரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு. அதேமாதிரி, சேலம் வடக்குத் தொகுதியில நின்னு 96 ஓட்டுகள் வாங்கியிருக்கேன். அதுவும் எடப்பாடி பழனிசாமி ஊர்லயே. வெற்றியா, தோல்வியாங்குறது முக்கியமல்ல... விடாமுயற்சிதான் முக்கியம். கண்டிப்பாக, என்னால தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். இன்னும் கொஞ்ச வருஷத்துல நான் முதலமைச்சர் சீட்ல உக்காருவேன். அதுக்கப்புறம் தமிழ்நாட்டோட நிலைமையப் பாருங்க... முதலமைச்சரா ஆகப்போற அந்த நாளை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்’’ என்றார் சுரேஷ் தன்னம்பிக்கையுடன்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “முதல்வராகப் போற நாளை எதிர்பாத்துக்கிட்டிருக்கேன்...”  இது ‘வாழ்வா சாவா’ கட்சி

எல்லா கட்சிகளுமே மக்களை ஒவ்வொரு நாளும் ‘வாழ்வா, சாவா’ என்கிற வாழ்க்கைப் போராட்டத்தில்தான் தள்ளிவிட்டிருக்கின்றன. டச்சிங்காக அந்தப் பெயரிலேயே ஒரு கட்சியை ஆரம்பிக்கிறது ஒரு திறமைதான்.

- ஜெ.அன்பரசன்