Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

Published:Updated:
கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!
கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

தேர்தல் நேரத்தில் திடீர் திடீரென கட்சிகள் முளைப்பதும், தேர்தல் முடிந்ததும் அவை காணாமல் போவதும் மதுரை மக்கள் பார்த்துப் பழகியதுதான். சுவர்களெங்கும் விதவிதமான... கலர்கலரான கட்சிகளின் போஸ்டர்களைப் பார்த்து மதுரை ஜனங்கள் அலுப்பதே இல்லை. சாம்பிளுக்குச் சில கட்சிகள்...

ஏ.எம்.டி.எம்.கே!


ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா, ஓ.பி.எஸ்., தீபா என மூன்று அணிகளாகப் பிரிந்து அ.தி.மு.க மோதிக்கொண்டிருந்த நிலையில்... ‘எந்தப் பக்கம் போவது’ என்று தொண்டர்கள் தவித்தனர். அந்த தருணத்தில், ‘அண்ணா வழிவந்த எம்.ஜி.ஆர் தொண்டர்களே... கவலைப்பட வேண்டாம்! உங்களுக்கு வழிகாட்ட நான் இருக்கிறேன். உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகள் இருக்க வேண்டிய இடம், என்னுடைய ஏ.எம்.டி.எம்.கே.தான் (அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகம்), என்று பரபரப்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. அதைக் கொடுத்தது, அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட க.முருகன். ஏற்கெனவே,  பெரும் குழப்பத்தில் சிக்கித்தவித்த அ.தி.மு.க தொண்டர்கள், இதைப் பார்த்து விக்கித்தவிக்க ஆரம்பித்தார்கள்.

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏ.எம்.டி.எம்.கே-வுக்கான மதுரை மாவட்ட நிர்வாகிகளை நியமித்து, அவர்கள் போஸ்டர்கள் ஒட்டி, நன்றி அறிவிப்பெல்லாம் செய்தனர்.

‘அ.தி.மு.க-வின் உண்மையான கொள்கைப்படி, நாங்கள்தான் செயல்பட உள்ளோம். சென்னையில் விரைவில் தலைமை அலுவலகம் திறக்க உள்ளோம்’ என்று விளம்பரங்கள் வெளியாகின. இப்போது, மதுரை முழுக்க சல்லடை போட்டுத் தேடிப்பார்த்தும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அ.இ. புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம்!


‘நீங்க அப்படியே தகதன்னு எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கீங்க’ என்று ஒரு டீக்கு ஆசைப்பட்டு யாரோ துதியைப் போட்டு வைக்க... அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு இளமைக்காலம் முதல் உடல், பொருள், ஆவி அனைத்திலும் எம்.ஜி.ஆர் போலவே மாறினார் சக்கரவர்த்தி. ஆம், இதுதான் அவர் பெயர். கொஞ்சம் வசதியான குடும்பப் பின்னணி என்பதால், எம்.ஜி.ஆராகவே வாழ ஆரம்பித்தார். ரோஸ் பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு, எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது போன்ற செருப்பு, கண்ணாடி மற்றும் ஆடைகளை அணிந்துகொண்டு மதுரையில் அ.தி.மு.க நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் வலம் வந்தவருக்கு ஒரு வட்டச் செயலாளர் பதவி என்ன... கூட்டத்தில் முன்வரிசையில் உட்கார ஒரு சீட்கூட கிடைக்கவில்லை.

அது மட்டுமில்லாமல், ஜெயலலிதா வரும்போது அவர் அருகில் கட்சி நிர்வாகிகள் இவரை விட்டதில்லை. ஜெயலலிதாவுடன் வரும் சசிகலாவின் கெடுபிடிகளும் சக்கரவர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘தான் எம்.ஜி.ஆர் போல் இருப்பதால் கட்சியைக் கைப்பற்றி விடுவேனோ என்ற பயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒதுக்குகிறார்கள்’ என்று நினைத்தார்.

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

மதுரையில் கட்சி நிர்வாகிகள் இவரை ஒரு வேஷக்காரராக நினைத்து அவமதித்திருக்கிறார்கள். ஆனாலும் எம்.ஜி.ஆர் மீதான காதல் இவருக்குப் போகவில்லை. எம்.ஜி.ஆர் வேடமிட்டு ‘உலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்’ என்ற படத்தைத் தானே நடித்து, சொந்தமாகத் தயாரித்து ரிலீஸ் செய்ய முடியாமல் திண்டாடினார். அடுத்து, ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எடுத்தார். ஜெயா டி.வி.கூட அப்படத்தை வாங்க முன்வரவில்லை. இதற்காக தன் சொத்துகள் சிலவற்றை இழந்தார்.

இந்த நிலையில்தான் ‘இனிமேலும் சசிகலா, எடப்பாடி, தீபா போன்றவர்கள் கைகளில் அ.தி.மு.க சிக்கியிருக்கக் கூடாது’ என்று முடிவெடுத்து, பெங்களூரு மற்றும் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் போட்டவர், ஒட்டுமொத்த எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் ஒன்று திரட்ட எண்ணினார்.  நம்பி வந்த ஐம்பது பேரை வைத்து ‘அகில இந்திய புரட்சித்தலைவர் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைக் கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் ஆரம்பித்தார். ஃபுல் மேக்கப்பில் கட்சியை ஆரம்பித்த அவர், அதற்குப்பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

அ.தி.மு.க-வுக்குள் இப்போது பிரளயம் ஏற்பட்டுள்ள நிலையில், சக்கரவர்த்தியை மதுரையிலும் பார்க்க முடியவில்லை. சொல்ல முடியாது... அடுத்த தேர்தலுக்குள் ரோஸ் பவுடரோடு வந்து நிற்கலாம்!

கலகல கட்சிகள் ஜூனியர்: ரகளையான ரெடிமேட் கட்சிகள்!

க.கா.கா!

2016 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை என்பதால் கோபித்துக்கொண்டு தனிக்கட்சியைத் தொடங்கினார் மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி. காங்கிரஸ் கட்சியின் வட்டச் செயலாளராக நீண்டகாலம் இருந்த அவருக்குப் பெரிய பொறுப்புகள் எதையும் கட்சி வழங்கவில்லை. ‘எவ்வளவு காலம் இப்படியே இருப்பது’ என்று யோசனை எழ, ‘கக்கன் காமராஜ் காங்கிரஸ்’ என்ற கட்சியை அவர் தொடங்கினார். ஆரம்பத்தில் சில நாள்கள் மதுரைக்குள் போஸ்டர்கள் தென்பட்டன. அடுத்துவந்த நாள்களில் அ.தி.மு.க கூட்டங்களில் பெரியசாமியைப் பார்க்க முடிந்தது. அதன்பிறகு, ஆளையும் காணோம்... கட்சியையும் காணோம். இனி, அடுத்த தேர்தலுக்குத்தான் அவரைப் பார்க்க முடியும்போல.

- செ.சல்மான்,  ஓவியம்: சுரேஷ்