Published:Updated:

கலகல கட்சிகள் ஜூனியர்: “நான் ஆரம்பிக்கிறேன்டா கட்சி!”

கலகல கட்சிகள் ஜூனியர்: “நான் ஆரம்பிக்கிறேன்டா கட்சி!”
பிரீமியம் ஸ்டோரி

ரு கட்சியில் கிளைச் செயலாளர் பதவி வாங்குவதற்குள், பலருக்கும் ஆயுளே முடிந்துவிடுகிறது. ‘‘அப்படி வருத்தப்பட்டு வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் என்னிடம் வந்தால், அவர்களுக்கு மாநில நிர்வாகி பொறுப்பைக் கொடுக்கிறேன்’’ என அறைகூவல் விடுக்கிறார் அன்பழகன். தஞ்சாவூர் பூக்காரத்தெருப் பக்கம் சென்று ‘இளநீர்க்கடை’ அன்பழகன் பற்றி விசாரித்தால், இவரின் செல்வாக்குப் புரியும்.

இவர், இந்தியன் பீப்புள் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் (ஐ.பி.சி.பி) அகில இந்தியத் தலைவர். தன்னை நம்பி வருபவர்களுக்கு, சம்பளம் கொடுத்து, மாநில அளவில் பதவியையும் கொடுக்கிறார்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “நான் ஆரம்பிக்கிறேன்டா கட்சி!”
கலகல கட்சிகள் ஜூனியர்: “நான் ஆரம்பிக்கிறேன்டா கட்சி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளை வேட்டி - சட்டை, தோளில் சிவப்புத் துண்டு, இடது கையில் கையில் கறுப்பு பேக், வலது கையில் கற்றையாக நோட்டீஸ்... இதுதான் இவரின் டிரேட் மார்க். அமெரிக்க ஒப்பந்தம் முதல் அரிசி விலை உயர்வு வரை அத்தனை விவகாரங்களும் இவருக்கு அத்துப்படி. இவருடைய பல நோட்டீஸ்கள்... ‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே’ என்றுதான் ஆரம்பிக்கும். தஞ்சாவூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்தால், ட்ரம்புக்கே சவால்விடுவார். 

எல்லாம் சரி, கட்சி நடத்தச் செலவுக்கு? “பணம் புழங்கும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் என நன்கொடை வசூலிக்கிறோம். இதுல என்ன தப்பு இருக்கு? எல்லா கட்சிகளும் இதைத்தானே செய்யுது. மக்கள்கிட்ட வசூல் பண்ணி மக்களுக்காகத்தான் செலவு செய்யறேன். இன்னிக்கிவரை என்கிட்ட டூவீலர்கூட கிடையாது. நடந்துதான் போறேன்’’ என்று சொல்லும் அன்பழகன், எப்போதும் எளிமையாகவே காட்சியளிக்கிறார்.

‘‘இவரிடம் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட சிஷ்யகோடிகள் பலர், தனிக் கட்சித் தொடங்கி அன்பழகனுக்குத் துரோகம் செய்துள்ளனர். இவரைப்போல, தஞ்சாவூரில் பலபேர் தேசியக் கட்சிகளை நடத்துகிறார்கள். நலிவடைந்த சிறிய வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைப்பதுபோல, இப்படி வழிதவறிப் போன சில சிஷ்யர்கள், தங்கள் கட்சிகளை அன்பழகனின் கட்சியுடன் இணைக்கும் விழாக்களும் அவ்வப்போது நடைபெறும்’’ என்கிறார்கள் தஞ்சாவூர்வாசிகள்.

கலகல கட்சிகள் ஜூனியர்: “நான் ஆரம்பிக்கிறேன்டா கட்சி!”

அன்பழகனின் அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப காரணம் சுவாரஸ்யமானது. தஞ்சாவூர் நகராட்சி அலுவலகம்முன்பு அமைதியாக இளநீர்க்கடை நடத்திக்கொண்டிருந்தார் அன்பழகன். அங்கே குரங்கு ஒன்று இறந்து போக, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி உண்டியல் வைத்துள்ளார். திராவிடர் கழகத்தினர் கோயிலை இடித்தனர். மீண்டும் கோயில் கட்டினார். அதுவும் இடிக்கப்பட்டது. ‘ஆரம்பிக்கிறேன்டா ஒரு கட்சி’ என அப்போது சபதமெடுத்தார். அன்றிலிருந்து அண்ணன் அரசியலில் பிஸியாகவே இருக்கிறார்.

- கு.ராமகிருஷ்ணன்
படம்: கே.குணசீலன்