அது ஒரு கார்காலம். நடராசனுக்கு கல்லூரிக்காலமும்கூட!

தஞ்சாவூர் சரபோஜி மன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் நடராசன். 1960-களில் பிரபலமான ‘பாண்டியாக்’ காரை, கல்லூரி நண்பர் விக்டர் வைத்திருந்தார். விக்டரின் அண்ணன் சேவியரிடம் ‘ஸ்டுடிபேக்கர்’ கார் ஒன்றும் இருந்தது. பள்ளிப் பருவத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய நடராசன், கல்லூரிக் காலத்தில் முதன்முறையாக கார் ஓட்டவும் கற்றுக்கொண்டார். அதற்குப் பயன்பட்டது பாண்டியாக்கும் ஸ்டுடிபேக்கரும்தான்.

பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளையின் மகன் சாமிநாதனும் நடராஜனுக்கு நண்பர். அவர், ‘பிளைமவுத்’ கார் வைத்திருந்தார். தஞ்சையில் அரசு வழக்கறிஞராக இருந்த சாமிநாத முதலியார் மகன் தியாகசுந்தரத்திடமும் கார் இருந்தது. இப்படி நிறைய ‘கார்’ நண்பர்கள் நடராசனுக்கு உண்டு. கல்லூரிக்கு லீவு விட்டாச்சு என்றால் இந்தக் கார்களில் கூட்டாக நண்பர்களோடு வெளியூர் ட்ரிப் அடிப்பது வழக்கம். இப்படியான பயணங்களில் ‘கார் ஓட்டுவதில் யார் ஸ்பீடு?’ எனப் போட்டியே நடக்கும்.

லீவு விடப்பட்ட கார்காலமொன்றில், தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு கார்கள் சீறிப் பறந்தன. விக்டரிடம் அப்போது ‘மோரீஸ் மைனர்’ என்ற டூரர் கார் இருந்தது. வளைவு நெளிவுகள் நிறைந்த சாலையில் வேகமாகப் பாயக்கூடியது. போட்டிப் போட்டுக்கொண்டு கார்கள் சாலையில் சீறிப் பாய்ந்தன. விக்டரின் காரில் நடராசன் திகிலோடு அமர்ந்திருந்தார்.

அதே திகில் இப்போது கார் வழக்கு ஒன்றில் வந்து நிற்கிறது. வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததற்காக நடராசனுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை உறுதி செய்து, அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முதலில் வழக்குக்குள் போவோம். 1994-ம் ஆண்டு மாடல் இங்கிலாந்து தயாரிப்பான ‘லெக்ஸஸ்’ காரை, அதே ஆண்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார் நடராசன். அப்போது ஜெயலலிதாதான் ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பக்கத்தில் நடராசனின் மனைவி சசிகலா இருந்ததையெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. ‘1993 ஜூலையில் தயாரிக்கப்பட்ட ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய லெக்ஸஸ் கார்்’ எனச் சொல்லி காரை இறக்குமதி செய்திருந்தார் நடராசன்.

ஆனால், ‘வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்களைத் தயாரித்து அரசுக்கு ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்’ எனக் கண்டுபிடித்தது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதில், நடராசன், வி.என்.பாஸ்கரன், லண்டனிலிருந்து காரை அனுப்பிய தொழிலதிபர் டாக்டர் பாலகிருஷ்ணன், அவரின் மகன் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா சுந்தரராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பவானி ‘அப்ரூவராக’ மாறினார். பாலகிருஷ்ணன் பிடிபடாததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சி.பி.ஐ கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. ‘நடராசன், வி.என்.பாஸ்கரன், யோகேஷ், சுஜரிதா சுந்தரராஜன் ஆகியோர்மீதான கூட்டுச் சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’ என 2010 அக்டோபர் 26-ம் தேதி தீர்ப்பு சொன்னது சி.பி.ஐ கோர்ட்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்தான், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை இப்போது உறுதி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ‘வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சேகரித்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என நடராசன் தரப்பு வாதிட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இதை ஏற்கவில்லை. ‘போலி ஆவணங்கள் மூலம் அரசை மோசடி செய்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காருக்கான ரசீது, வாகனப் பதிவுச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை பாலகிருஷ்ணனின் பெயரில் போலியாக யோகேஷ் தயாரித்திருக்கிறார். வங்கிக்கணக்கு வைத்திருப்பவர் பெயரோ, கணக்கு எண்ணோ குறிப்பிடாமல் பணப் பரிவர்த்தனை நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கான சான்றிதழை வங்கி அதிகாரி சுஜரிதா சுந்தரராஜன் வழங்கியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சுங்கத் துறை சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறார்கள். காருக்கான சுங்கவரியை வெளிநாட்டுப் பணமாக வழங்காமல், இந்தியப் பணமாக நடராசன் அக்கவுன்ட்டிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனையையும், வங்கிக் கணக்கையும் வி.என்.பாஸ்கரன் கையாண்டிருக்கிறார். இந்தக் கூட்டுச் சதிக்கு வங்கி அதிகாரியும் உடந்தையாக இருந்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ந்ீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்.

இந்தத் தீர்ப்பின்படி சி.பி.ஐ கோர்ட்டில் நடராசன் உள்ளிட்டவர்கள் சரணடைய வேண்டும். இதற்கு கால அவகாசம் கேட்டதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பு நகல் சி.பி.ஐ கோர்ட்டுக்குப் போனவுடன், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படலாம். இதன்படி அவர்கள் கைது செய்யப்படலாம்; அல்லது சரணடையலாம். அங்கே அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா எனத் தெரியவில்லை. தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வார்கள். அங்கே வழக்கு முடிய எவ்வளவு காலம் ஆகுமோ! 1996-ம் ஆண்டில் போட்ட வழக்கு, சி.பி.ஐ கோர்ட்டில் 2010-ல்தான் முடிந்தது. அதன்பிறகு அப்பீல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இந்தாண்டு முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கே 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. சுப்ரீம் கோர்ட்டில் முடிவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை அனுபவிப்பது நடக்குமா?

சரி. முன்னுரையில் சொன்ன விஷயத்துக்கு வருவோம். கல்லூரி காலத்தில் கார் ரேஸில் பயணித்த நடராசனுக்கு ஸ்பீடு கார்கள்மீது மோகம் இருந்தது. அதனால்தான் 3,000 சி.சி. எந்திர திறன் கொண்ட ‘லெக்ஸஸ்’ காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். இதில் 200 கி.மீ வேகத்தில் போனாலும், உள்ளே இருப்பவர்களுக்கு இன்ஜின் ஓசை கேட்காது. அதிகத் திறன் கொண்ட காரை இந்தியாவில் பயன்படுத்த அனுமதியில்லை. 1,600 சி.சி-க்கும் அதிகமான திறன் கொண்ட கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விதிமுறைகள் உண்டு. ‘காரை இறக்குமதி செய்பவர்கள், இந்தியாவில் நிரந்தரமாக தங்கப்போகும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியராகவோ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவோ இருக்கவேண்டும். வெளிநாட்டில் 2 ஆண்டுகள் தங்கியிருந்து, அங்கு அந்தக் காரை ஓராண்டு பயன்படுத்திவிட்டு, பிறகு இந்தியாவுக்குக் கொண்டுவருபவராக இருக்கவேண்டும். அப்போதுதான் அதிகத் திறன் கொண்ட சொகுசு கார்களை இறக்குமதி செய்ய முடியும்’ என விதிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் மீறித்தான் காரை இறக்குமதி செய்தார் நடராசன். எல்லாமே கல்லூரிக்கால கார் மோகம்தான்.

நடராசன் என்ன சொல்கிறார்? ‘‘ஏதோ புதிதாக பெரிய கார்களில் இப்போதுதான் நான் போவதுபோல நாலந்தர ஏடுகள் சேற்றை வாரி வீசுகின்றன. இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரிக் காலத்திலேயே நான் கார் ஓட்டியவன்’’ என்கிறார்.

‘லெக்ஸஸ்’ காரை நடராசன் இறக்குமதி செய்ததில் சுங்கத்துறையின் சீனியர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உண்டு. ஆனால், அந்த அதிகாரியைக் குற்றவாளியாக சேர்க்க சி.பி.ஐ-க்கு மத்திய அரசு ஏனோ அனுமதி அளிக்கவில்லை. அதனால் அவர் எஸ்கேப் ஆனார்.

சசிகலாவின் சகோதரர் விநோதகனின் கிளாஸ்மேட்தான் பாலகிருஷ்ணன். மயக்கவியல் மருத்துவரான பாலகிருஷ்ணன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டதற்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் பெற்றிருந்தால்தான் காரைக் கொண்டு வந்திருக்க முடியும்.

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
படம்: ஆ.முத்துகுமார்