நெல்லை மாவட்டம், குற்றாலம் அருகே இலஞ்சியில் இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இந்தப் பள்ளியில் 1,800 பேர் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார் எனக் கொந்தளித்துக் கிடக்கிறது குற்றாலம்.

இதுபற்றி மாணவிகள் சிலரிடம் பேசினோம். ‘‘ப்ளஸ் டூ தமிழ்ப் பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இருக்கிறார். அவர் இந்த வருடத்துடன் ஓய்வுபெற இருப்பதால், தற்காலிக ஆசிரியராக ராஜு என்பவரை நியமித்துள்ளனர். அவர், காலையில் மாணவர்களுக்கும், மாலையில் மாணவிகளுக்கும் தன் வீட்டில் பாடம் நடத்துவார். அப்போது, எங்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார். ஒரு மாணவியிடம் அத்துமீறியபோது, அந்த மாணவி அழுதுகொண்டே ஓடிவந்தாள். தலைமை ஆசிரியரான ஆறுமுகம் சாரிடம் புகார் செய்தோம்.

கோபமான ஆறுமுகம் சார், ‘நீங்க ரொம்ப ஒழுக்கமோ? உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? உங்களையெல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு விரட்டிடுவேன்’ என அவமானப் படுத்தினார்’’ என்றார்கள் அச்சத்துடன்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தவே, ஆசிரியர் ராஜு, தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பள்ளியின் செயலாளரான சண்முக வேலாயுதம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘‘ராஜுவை ஆசிரியராக நியமனம் செய்ய பள்ளி நிர்வாகம் எட்டு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டது. அதனால்தான், நிரந்தர ஆசிரியர் இருக்கும் போதே, தற்காலிக ஆசிரியரைப் பாடம் எடுக்க வைத்தார்கள். இந்த நிர்வாகத்துக்கு பணம் மட்டுமே குறி. அதனால், நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அல்லது அரசே இந்தப் பள்ளியை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று குமுறினார்கள் பெற்றோர்கள் பலர்.

பள்ளியின் நிர்வாகக்குழுத் தலைவரான பி.ஜி.பிச்சையாவிடம் பேசினோம். ‘‘தமிழ் ஆசிரியரான ராஜுவை தற்காலிக ஆசிரியராக நியமிக்கும் முன்பாக நிர்வாகக் குழுவில் யாருமே கேட்கவில்லை. அவர்களாகவே முடிவுகளை எடுப்பதும், ஆசிரியர் நியமனங்களைச் செய்வதுமாக இருக்கிறார்கள். மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த ஒரு மாதமாக நான் சென்னையில் இருக்கிறேன். நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது’’ என்று வருத்தப்பட்டார்.

குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் சரஸ்வதி, ‘‘ஆசிரியர் ராஜு, தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்முக வேலாயுதத்தைத் தேடி வருகிறோம்’’ என்றார்.

மதுரை மாவட்டம் பொதும்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது போன்ற கடும் தண்டனை இவர்களுக்கும் வழங்கப்படுமா?

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்