2011 முதல் 6 ஆண்டுகளாக நீடிக்கும் புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு விசாரணை கமிஷன் பற்றி 22.11.2017 தேதியிட்ட ஜூ.வி-யில், ‘புதிய தலைமைச் செயலக விசாரணை கமிஷன் என்ன ஆச்சு... கரன்சிதான் விரயம் ஆச்சு!’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். நீதிபதி ரகுபதி மேலும் சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘புதிய தலைமை செயலக விசாரணை கமிஷனின் விசாரணை நீண்டுகொண்டு போவதற்கு நான் காரணமல்ல. 2012-ம் ஆண்டில்தான் கமிஷனுக்கு பொறுப்பு ஏற்றேன். 2015-ம் ஆண்டே கமிஷனின் விசாரணை முடிந்துவிட்டது. 95 சாட்சிகளின் வாக்குமூலம், டெண்டர் மற்றும் கட்டட கோப்புகள் அரசிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கருத்தும் கேட்கப்பட்டது. புதிய தலைமை செயலகம் கட்டப்பட்ட காலக்கட்டத்தில் இருந்த முதல்வர், துணை முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சரின் கருத்துகள் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் 2015 மார்ச்சில் கமிஷன் விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடையாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடையை விலக்குவதற்கான மனுவும் பதில் மனுவும் கமிஷன் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் 2016-ல் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். அதோடு ஐந்து அரசு அதிகாரிகளையும் திருப்பி போக சொல்லிவிட்டேன்.

2012-ம் ஆண்டிலிருந்து 2015 வரையில் எனக்கு வழங்கப்பட்டது நாள் ஊதியம் (சிட்டிங் பீஸ்) 6 ஆயிரம் ரூபாய். மாதத்துக்கு 13 அமர்வுகள். நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக, நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் சராசரிக்கும் அதிகமாக வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளது.

மவுலிவாக்கம் விசாரணை கமிஷனுக்காக நாங்கள் இரவு பகலாக உழைத்து, அதன் அவசரத்தன்மையை கருதி 45 நாட்களுக்குள் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதற்கு இன்றுவரை நான் ஊதியம் பெற்றுக் கொள்ளவில்லை. 65 பேர் சாவுக்குக் காரணமான அந்தக் கோர சம்பவத்தில் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டாவது கட்டடம் என் அறிக்கையை வைத்துதான் இடிக்கப்பட்டது. எனவே என்னை பொறுத்தவரையில் நிதி விரையத்துக்கு நான் காரணமில்லை. புதிய தலைமை செயலக வழக்கு உயர் நீதிமன்றத்தில் பைசல் ஆகும் வரை கமிஷன் விசாரணை முடிக்க சாத்தியமில்லை.’’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி