இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்திருக்கும் நேரத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியா வந்து சென்றிருக்கிறார். இலங்கையுடனான கிரிக்கெட் போட்டியை இந்தியர்கள் கண்டுகொள்ளாததுபோலவே, ரணிலையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நம் தமிழக மீனவர்களுக்கு இது கவனிக்க வேண்டிய நிகழ்வாக இருந்தது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை, இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் விடுவிப்பு... ஆகியவை தொடர்பாக இந்தியா கண்டிப்பு காட்டும் என நம்பினார்கள்.

தன் நான்கு நாள் பயணத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை ரணில் சந்தித்தார். நவம்பர் 23-ம் தேதி, ஹைதராபாத் இல்லத்தில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்தனர்.

மாத்தளை விமானநிலையக் கட்டமைப்புப் பணிகள், திரிகோணமலை துறைமுகப் பணிகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 50 மெகாவாட் திறனுள்ள சம்பூர் மின் நிலையம் என இலங்கையில் இந்தியா மேற்கொண்டிருக்கும் பணிகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. மாத்தளை விமான நிலையக் கட்டமைப்பு பணிகளை முன்பு சீன அரசு மேற்கொண்டது. இப்போதைய அதிபர் சிறீசேனா தலைமையிலான அரசு, அதை மாற்றி இந்தியாவுடன் 40 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டங்களுக்காக பெருமளவு பண உதவியை இந்தியா வழங்குகிறது.

ஹோட்டலில் செய்தியாளர்களை ரணில் தனியாகச் சந்திக்க இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், முதல் நாள் இரவு அது திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், டெல்லி செய்தியாளர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் ரணிலைச் சந்தித்தனர். தமிழக மீனவர்கள்மீதான தாக்குதல் குறித்து அவர்கள் கேட்டனர். ‘‘இப்போது உங்கள் அரசின் கடலோரக் காவல்படைதானே துப்பாக்கிச்சூடு நடத்துகிறது’’ என்று சொல்லி சிரித்த ரணில், “தவறாக எடுத்துக்
கொள்ளாதீர்கள்’’ என்றார்.

‘தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டதா’ என்பது குறித்து கடைசிவரை நம் அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.

- டெல்லி பாலா