நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவர், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸைப் (A.I)பயன்படுத்தி ஒரு ‘விர்ச்சுவல்’ அரசியல்வாதியை (உ.தா: ரோபோவைப்போல)உருவாக்கியிருக்கிறார். கொள்கைகள் மற்றும் மக்கள் பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு அது ‘நச் நச்’ என பதில் சொல்லுமாம். ‘சாம்’ எனப்படும் இதை, அடுத்த தேர்தலில் நிற்கவைக்கவும் ஐடியா இருக்கிறதாம். நம்மூர் தலைவர்களிடம் கற்றுக்கொண்டால்தானே, அது கச்சிதமான அரசியல்வாதி ஆகமுடியும்.

ஒரு A.I அரசியல்வாதி இருக்கும்வரையில் ஓகே. அடுத்தடுத்து நிறைய விர்ச்சுவல் அரசியல்வாதிகள் இப்படி உருவாகிவிட்டால்? கோஷ்டி அரசியல் பாடத்தை காங்கிரஸ்காரர் களிடமிருந்து வாங்கி A.I அரசியல்வாதியின் காதில் ஓதவேண்டும்.

துருவித் துருவி எத்தனை கேள்விகள் கேட்டாலும்... இடியே விழுந்தாலும்கூட, ‘அது கொஞ்சம் தள்ளித்தானே தம்பி விழுந்துச்சு’ என சிரித்தபடி போஸ் தருபவர், ‘தொப்பி’ அண்ணன் தினகரன். அவருடைய பொறுமை குணத்தை அந்த விர்ச்சுவல் அரசியல்வாதிக்கு கண்டிப்பாக ஊட்ட வேண்டும்.

சுனாமியே வந்தாலும் அலட்டிக்கொள்ளாமல், ‘சுனாமியை எழுப்பிய வங்கக் கடலையும், இந்தோனேஷிய பூகம்பத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என அறிக்கைவிட்டுவிட்டு அமைதியாகிவிடும் செயல் தலைவர் ஸ்டாலினின் ‘டேக் இட் கூல்’ குணத்தையும் புகட்ட வேண்டும்.

கேட்ட கேள்விக்கு சட்டென ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டால், அப்புறம் அரசியல்வாதிக்கு என்ன மதிப்பு? ஒன்றுமில்லாத விஷயத்தையும் பில்டப் கொடுத்து ஊதிப் பெரிதாக்கும் பி.ஜே.பி தலைவர்களின் வித்தைகளையும் அதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

‘பாவம், அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு’ எனப் புலம்பவைக்கிற மாதிரி பேட்டி கொடுக்காமல், என்ன அரசியல்வாதி? தமிழக அமைச்சர்களின் டி.வி பேட்டிகளை ஓடவிட்டு, டிரெய்னிங் கொடுக்க வேண்டும்.

எல்லாம் சரி. ‘செந்தமிழன் சீமான் இந்த லிஸ்ட்லயே இல்லையே’ என்கிறீர்களா? வேணாம் பாஸ்! ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பாவம்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி