‘நாங்கள் ஒரு மின் மீட்டரை ரூ.453-க்குக் கொடுப்பதாகக் குறைந்த ஒப்பந்தப்புள்ளி அளித்தோம். ஆனால், எங்களுக்குத் தராமல், ரூ.495-க்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய வேறொரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டார்கள்’ என உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேபிடல் பவர் சிஸ்டம் என்னும் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மின் மீட்டர் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

தமிழக மின்துறையில் மின் மீட்டர்கள் தட்டுப்பாடு நீண்ட காலமாக நிலவுகிறது. இதனால், பழுதடைந்த மீட்டரை மாற்ற முடியாமல், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகிறார்கள். இதைச் சரிசெய்ய, 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 30 லட்சம் மின் மீட்டர்களை வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் டெண்டரை அறிவித்தது. மொத்தம் 13 நிறுவனங்கள் போட்டியில் இறங்கின. அவற்றில், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி ஆறு நிறுவனங்கள் நீக்கப்பட்டன. மீதியிருந்த ஏழு நிறுவனங்களில், குறைந்த தொகையைக் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில்தான், மின் வாரியம் மீது ஊழல் புகார் கிளம்பியுள்ளது.

இதுபற்றி தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, ‘‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஏற்கெனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் மூழ்கியிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்ததே, இந்தக் கடன்சுமைக்கு முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் நத்தம் விசுவநாதன் டெல்லிக்குப்போய் அதானி நிறுவனத்திடம் சூரியசக்தி மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டார். ஒரு யூனிட் ரூ.7.01. ஆனால், இதே மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.5.50 என்று கொடுத்திருக்கிறார்கள். பாருங்கள்... விலை வித்தியாசத்தை! இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்! ஆனால், அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வைச் சுமத்துகிறார்கள்.

இப்போது மின் மீட்டர்களை வாங்கும் டெண்டரையும் ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்க முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு, டெண்டர் நாடகம் போட்டிருக் கிறார்கள். ஒரு நிறுவனம் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும், ‘டெண்டரை இன்னும் முடிவு செய்யவேயில்லை’ என்று மின்துறை அமைச்சர் தங்கமணி திரும்பத் திரும்பக் கூறுகிறார். நீதிமன்றம் சென்ற கேபிடல் பவர் சிஸ்டம் கம்பெனி, கடந்த 20 வருடங்களாக மின் மீட்டர்களை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சப்ளை செய்பவர்கள். ‘இவர்கள் கடந்த காலத்தில் சப்ளை செய்த ஒன்றரை லட்சம் மின் மீட்டர்கள் பழுதாகிவிட்டன’ என அமைச்சர் தங்கமணி இப்போது கூறுகிறார். புகார் வந்ததுமே, அந்த நிறுவனம்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பிளாக் லிஸ்ட்டில் சேர்த்து டெண்டரில் கலந்துகொள்ளவிடாமல் செய்திருக்கலாமே? ‘நாங்கள் சப்ளை செய்த மின் மீட்டர்களில் பழுது இருப்பதை மின்வாரியம் தெரியப்படுத்தவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், பழுதை சரிசெய்து கொடுத்திருப்போம்’ என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகவே சொல்கிறது.

இங்கு என்ன நடக்கிறது? டெண்டர் விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. கம்பெனிகள் குறிப்பிட்ட தொகை விவரங்கள் எப்படி லீக் ஆகின? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் உரிய விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார்.

மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். ‘‘மின் வாரியத்தில் இப்போது இ-டெண்டர் முறை கடைபிடிக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அப்படித்தான் கேபிடல் பவர் சிஸ்டம் நிறுவனமும் விண்ணப்பித்தது. அடுத்து, இரண்டு கட்டங்களாகப் பரிசீலனைகள் நடக்கின்றன. ஒன்று, டெக்னிக்கல் சம்பந்தப்பட்டது. அடுத்து, கொள்முதல் விலை தொடர்பானது. மின் மீட்டரைத் திருத்த வாய்ப்புகள் இருப்பது தெரியவந்ததால், அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் முதல்கட்டப் பரிசீலனையிலேயே தகுதியிழந்தது. இரண்டாம் கட்ட பரிசீலனைக்கே அந்த நிறுவனம் வரவில்லை.

கேபிடல் பவர் சிஸ்டம் ஏற்கெனவே சப்ளை செய்த மின் மீட்டர்களில், ஒரு லட்சத்து இருபதாயிரம் மீட்டர்கள் பழுதாகிவிட்டன. சிறிய அளவிலான பழுதுகளை சரிசெய்து பயன்படுத்தினோம். பெரிய பழுதுகள் இருந்த மீட்டர்கள் பயன்படாமல் குவிந்துகிடக்கின்றன. அப்படிப்பட்ட நிறுவனம், இப்போது எங்கள்மீது அவதூறு பரப்பி வருகிறது. மின் மீட்டர் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை. ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி செய்தால்தான் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிப்போம். ‘ரூ.495-க்கு மின் மீட்டரைக் கொள்முதல் செய்தால் நஷ்டம் ஏற்படும்’ என்பது உண்மைக்குப் புறம்பான தகவல். தி.மு.க ஆட்சியில் ரூ.600-க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் மீட்டர், இப்போது குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரும் மின்வெட்டை உருவாக்கிய தி.மு.க, எங்களை விமர்சிப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றார் அவர்.

நெருப்பில்லாமல் புகையுமா... தவறு நடக்காமல் ஷாக் அடிக்குமா?

- சூரஜ்
படம்: ஜெ.வேங்கடராஜ்