‘‘தப்புன்னு படுற விஷயங்களைச் சுட்டிக்காட்டுறது என்னோட இயல்பு. அந்த இயல்பு தந்த பரிசுகள்தான் இதெல்லாம்’’ - சிரித்தபடி தன் தலையில் இருக்கும் தழும்புகளைக் காட்டுகிறார் பொன்.தங்கவேல். ஒரு சாதாரண மனிதன் சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்தால், அதிகார மையத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கு பொன்.தங்கவேல் உதாரணம். மிரட்டல்கள், தாக்குதல்கள், செட்டப் விபத்து, கூலிப்படை பேரம் என எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்து ஓய்ந்துவிட்டார்கள் எதிரிகள். உடனிருந்த ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி, உயிரையும் விட்டிருக்கிறார்.

ஆனாலும், துளியும் மனம் தளரவில்லை தங்கவேல். இவர் தொடர்ந்த வழக்கு, சென்னை மாநகராட்சியின் ஆணிவேரையே அசைத்துப்பார்த்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, காவல் துறை கமிஷனரையே புறவாசல் வழியாக நீதிமன்றத்துக்கு வரவழைத்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் களத்தில் நிற்கிறார் தங்கவேல்.

‘‘சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்குப் பக்கத்துல இருக்கிற எம்.சூரக்குடி என் சொந்த ஊர். எனக்கு 11 வயசானபோது, அப்பா இறந்துட்டார். அம்மாவோட உழைப்புலதான் வளர்ந்தோம். அண்ணன் சென்னைக்கு வந்து பீடாக்கடை ஆரம்பிச்சார். 2001-ல நானும் சென்னைக்கு வந்து, அண்ணனுக்கு உதவியா கடையில இருந்தேன். இங்கேயே சுத்திக்கிட்டுக் கிடந்தா வாழ்க்கை மாறாதுன்னு கடனை வாங்கி என்னை சிங்கப்பூருக்கு அண்ணன் அனுப்பி வச்சார். அங்க பார்த்த நிர்வாகம், எனக்கு பிரமிப்பைக் கொடுத்துச்சு.

ஒன்பது வருஷங்கள் அங்க வேலை செஞ்சிட்டு சென்னைக்கு வந்தேன். திருமணமாச்சு. சென்னையில என் மனைவி, ஒரு பெண்கள் விடுதி தொடங்கினாங்க. ஈஞ்சம்பாக்கத்துல வீடு கட்டலாம்னு ஒரு இடம் வாங்கினேன். அங்கிருந்துதான் பிரச்னை ஆரம்பமாச்சு. வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பும் மின்சாரமும் கேட்டு விண்ணப்பிச்சேன். ‘ரூ.30,000 கொடுத்தாதான் மின்சார இணைப்பு தருவேன்’னு சொன்னாங்க. தண்ணீர் இணைப்புக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்டாங்க. அக்கம்பக்கத்துல விசாரிச்சா, ‘பணம் கொடுக்கலேன்னா வேலையே நடக்காது’ன்னு சொன்னாங்க. வேற வழி தெரியலே. ஆனா, அப்பவே முடிவெடுத்துட்டேன். இந்த மாதிரி லஞ்சம் கொடுத்து இணைப்பு வாங்குற கடைசி ஆளா நாமதான் இருக்கணும்னு!

மக்களைக் கூட்டிப் பேசினேன். ‘ராஜன் நகர், செல்வா நகர் பொதுநலச் சங்கம்’னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சோம். சாய்நாத்னு ஒரு நண்பர் எல்லாத்துலயும் முன்னாடி நிக்கக்கூடியவர். 75 வயது. பொண்ணு அமெரிக்காவுல இருக்காங்க. பென்ஷன் வருது. சுகமா உக்காந்து சாப்பிட வேண்டிய வயது. அவரும் உற்சாகமா களத்துல நின்னு செயல்பட்டார். தண்ணி வராதது, கரன்ட் லோ வோல்டேஜா வர்றது, ரோடு சரியில்லாததுன்னு சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக மனு போட ஆரம்பிச்சோம். அதிகாரிங்கல்லாம் ‘எதுவா இருந்தாலும் நேராச் சொல்லுங்க. மனுப்போடாதீங்க’ன்னு வந்து நின்னாங்க. லஞ்சம் கொடுக்கலை. ஆனா, வேலைகள் ஒழுங்கா நடக்க ஆரம்பிச்சுச்சு...” - நிதானித்துப் பேசுகிறார் தங்கவேல்.

‘‘2011-ல் சென்னை மாநகராட்சியோடு புறநகர்களை இணைச்சாங்க. ஈஞ்சம்பாக்கம் பகுதி 196-வது வார்டில் இணைக்கப்பட்டது. அதுல இருந்துதான் பிரச்னை ஆரம்பமாச்சு. புதுசா பதவிக்கு வந்த கவுன்சிலர், தண்ணி இணைப்புக்கு ரூ.50,000, வீட்டுவரி நிர்ணயிக்க ரூ.1 லட்சம்னு எல்லாத்துக்கும் விலை நிர்ணயிச்சார். நாங்க லஞ்சம் கொடுக்க மறுத்தோம். பிரச்னை ஆரம்பிச்சுச்சு. கவுன்சிலர் 10 அடியாட்களோட வந்தார். அதுதான் நான் எதிர்கொண்ட முதல் மிரட்டல்.

ஆனா, நாங்க உறுதியா நின்னோம். அதுக்காக கவுன்சிலர் எங்களை டார்கெட் பண்ணினார். அப்பப்போ, ‘உன்னை காலி பண்ணிடுவேன்’னு மிரட்டுவார். போலீஸ்ல புகார் கொடுத்தா கண்டுக்கவே மாட்டாங்க. ஒருமுறை இன்ஸ்பெக்டர் என்னைக் கூப்பிட்டு, ‘கவுன்சிலரை அனுசரிச்சுப் போய்யா’ன்னு அட்வைஸ் பண்ணினார். ‘இது உங்க வேலை இல்லையே சார்’னு நான் சொன்னப்போ, ‘என்னடா எதுத்துப் பேசுறே’ன்னு அடிக்க வந்தார்.

ஊர்ல இருக்கற புறம்போக்கு நிலத்தையெல்லாம் கவுன்சிலர் முறைகேடா வித்திருந்தார். அதுதொடர்பா எல்லா ஆவணங்களையும் இணைச்சு புத்தகமா தயாரிச்சோம். அதை, விஜிலென்ஸ் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரைக்கும் அனுப்பினோம். விஜிலென்ஸ் அதிகாரிங்க, மாநகராட்சி அதிகாரிங்கல்லாம் வந்து ஆய்வு செஞ்சாங்க. அதுக்கப்புறம் நடவடிக்கை இல்லை. என்ன நடக்குதுன்னு எங்களால யூகிக்க முடிஞ்சுது.

ஒருநாள் 10 பேரு ஆயுதங்களோட வந்து எங்களைத் தாக்கினாங்க. குறிப்பா, சாய்நாத்தை குறிவச்சு அடிச்சாங்க. தடுக்கப்போனப்போ எனக்கு மண்டை உடைஞ்சது. சாய்நாத் ரத்த வெள்ளத்துல மயங்கினார். ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினோம். வந்த ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிட்டாங்க. எல்லாமே போலீஸ் முன்னிலையில நடந்துச்சு. பிரச்னையைக் கேள்விப்பட்டு ஏ.சி. உமாசங்கர் வந்துதான் ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி மருத்துவமனைக்கு அனுப்பி வச்சார். 15 நாள் கோமாவுல இருந்தே சாய்நாத் இறந்துட்டார். அந்த மரணத்துக்கு இன்னிக்கு வரைக்கும் நீதி கிடைக்கலே.

அந்த சம்பவத்துக்குப் பிறகு ஒருநாள்... என் அக்காவும் மனைவியும் ரோட்டுல நடந்து வந்துக்கிட்டிருந்தபோ, திடீர்ன்னு ஒரு கார் வந்து மோதுச்சு. என் அக்கா மரணத்தோட வாசலுக்குப் போய் தப்பிச்சாங்க. இடுப்பு எலும்பெல்லாம் நொறுங்கிடுச்சு. என் மனைவிக்கும் பலத்த அடி. மோதுன டிரைவர் உள்ளூர்க்காரர்தான். ‘பிரேக் பிடிக்கலே’ன்னார். விபத்து வழக்கு பதிவு பண்ணிட்டு முடிச்சுட்டாங்க. இதுக்கிடையில எண்ணூர்ல ஒரு கூலிப்படைக்கு என் போட்டோ போயிருக்கு. அங்கிருந்து ஒரு நண்பர் மூலமா தகவல் வந்துச்சு. பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் போனேன். உடனே பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார் நீதிபதி. ஆனா, மூணு மாதமா பாதுகாப்புத் தரலே. அதுக்கப்புறம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டதும், கமிஷனரா இருந்த ஜார்ஜ் நீதிமன்றத்துல ஆஜரானதும், உங்களுக்கே தெரியும். அதுக்குப்பிறகுதான் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாங்க’’ - சிரிக்கிறார் பொன்.தங்கவேல்.

வீட்டுவரி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் போட்ட ஒரு வழக்குதான், ‘2006 முதல் 2016 வரை சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்களின் சொத்து மதிப்பைத் தாக்கல் செய்யுங்கள்’ என நீதிபதி உத்தரவிடக் காரணமாக அமைந்தது. இங்கு பிரச்னை செய்த கவுன்சிலர் பல இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்தது வெளிச்சத்துக்கு வந்து, நீதிமன்றம் அதனை முடக்கியுள்ளது.

‘‘இதுவரைக்கும் 5,000-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டிருக்கேன். 40 முறை மிரட்டப்பட்டிருக்கேன். ஆனாலும், இப்பவும் உறுதியாதான் இருக்கேன். அதிகபட்சமா உயிர்போகும். சாய்நாத்தை சாகடிச்ச மாதிரி என்னையும் சாகடிக்கலாம். அவ்வளவுதானே! ஆனா, நிறைய சாய்நாத்கள், நிறைய தங்கவேல்கள் வருவாங்க. இப்போது ஈஞ்சம்பாக்கத்தில் ஆறு நகர்களில் குடியிருப்பு சங்கத்தை விரிவுபடுத்தியிருக்கோம். யாருக்கும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கிறதில்ல. ஒரு மாசத்துல முடிய வேண்டிய வேலை ரெண்டு மாசத்துக்கு இழுக்கும். பரவாயில்லே... வேலை நியாயமா நடக்குதே! அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் நீதி நிர்வாகம் சாதாரண மனிதனுக்குத் துணையா இருக்குங்கிற நம்பிக்கை வந்திருக்கு. ஆரம்பத்துல, கூடநிக்க யோசிச்ச மக்களெல்லாம் இப்போ தைரியமா தோள் கொடுத்து நிக்குறாங்க. என்னளவுல இது பெரிய வெற்றிதான்...’’ - உற்சாகமாக முடிக்கிறார் பொன்.தங்கவேல்.

எல்லோருக்குமான நம்பிக்கை இவர்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்