பதினொன்றாம் வகுப்பு மாணவிகளான சங்கரி, ரேவதி, தீபா, மனிஷா நால்வரும் படிப்பில் சளைத்தவர்கள் அல்லர். 10-ம் வகுப்பில் நால்வருமே 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள். இவர்களை, ‘‘நீங்க படிக்கவே லாயக்கு இல்லாதவங்க... போய் மாடு மேய்ங்கடி’’ என சக மாணவிகளின் முன்பே அவமானப்படுத்தி, அவர்களின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கின்றனர் ஆசிரியர்கள்.

என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தனர், இந்த நான்கு மாணவிகளும். சென்ற 24-ம் தேதி காலை... வழக்கம்போல பள்ளிக்கு வந்தவர்கள், தங்கள் பைகளை மட்டும் இருக்கைகளில் வைத்துவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் முகங்களில் இனம்புரியா சோகம். கண்கள் ஏற்கெனவே அழுது சிவந்திருந்தன. சைக்கிள்களில் கிளம்பி, ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி வெங்கடேசனின் கிணற்றருகே வந்து நின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள், நான்கு பேரும் கைகளைக் கோத்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்தனர்... இப்படித்தான் அந்தச் சம்பவத்தை விவரிக்கிறார்கள் கிராமத்து மக்கள்.

மகள்களைப் பறிகொடுத்துவிட்டு, கண்ணீரும் ஆற்றாமையுமாக தவித்துக் கிடக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பேசினோம்.

சங்கரியின் அப்பா ரவி, ‘‘அன்னிக்குக் காலையில 6 மணிக்கெல்லாம் பக்கத்து கிராமத்துக்குக் கூலி வேலைக்குப் போய்ட்டேன். 11 மணியிருக்கும்... பக்கத்து வீட்டு பொண்ணு மனிஷாவின் பெரியப்பா மணிமாறன் எனக்கு போன் செஞ்சு ‘மாமா! உங்க பொண்ணும் எங்க தம்பி பொண்ணும் ஸ்கூல்ல இல்லையாம். ஹெட் மாஸ்டர் தகவல் சொல்லிடச் சொன்னதா, ஒரு பொண்ணு அவங்க பையை மட்டும் எடுத்துட்டு வந்து வீட்டுல கொடுத்துச்சு. நீங்க உடனே வாங்க, போய் விசாரிக்கலாம்’னாரு.

நாங்க நாலு வண்டிய எடுத்துக்கிட்டு ஊரச் சுத்தித் தேடிட்டு, மதியம் 1 மணிக்கு ஸ்கூலுக்குப் போய்க் கேட்டோம். ஹெச்.எம். கோபமா வந்து, ‘யோவ்... சி.இ.ஓ வந்திருக்காங்க. சத்தம் போடாம வெளியே போங்கய்யா. அதுங்க பேக்கை வெச்சுட்டு எங்கயோ போய் இருக்குதுங்க. ஸ்கூல் விடற நேரத்துல அதுங்களா வீட்டுக்கு வந்துடும்’னு சொன்னாங்க. அப்ப எங்க அண்ணன் மகன்கிட்டே இருந்து போன் வந்தது. ‘ராமபுரம் வாங்கப்பா... ரோட்டோரம் இருக்கிற கிணத்தாண்ட ஸ்கூல் பேக், ரெண்டு சைக்கிள், செருப்புலாம் இருக்கு’ன்னு சொன்னான். பதறி அடிச்சிக்கிட்டு போய்ப் பார்த்தா என் பொண்ணோட செருப்பு கிணத்துல மிதந்துக்கிட்டு இருந்துச்சு. உடனே மனிஷா பெரியப்பா மணிமாறன் காவேரிப்பாக்கம் போலீஸுக்கும், தீயணைப்புப் படைக்கும் போன் செஞ்சாரு. அவங்க வந்து கிணற்றில தேடினப்பதான் தெரிஞ்சது, நாலு புள்ளைங்களும் கிணற்றில குதிச்சி உயிர விட்டுடுச்சுங்க’னு. குழந்தைகள ஒவ்வொண்ணா வெளியில எடுக்கும்போது என் குலையே நடுங்கிப் போச்சு.

படிக்கற புள்ளைங்க மனசு ஒடிஞ்சி இந்த முடிவ எடுத்து இருக்குங்க. எம்பொண்ணு சங்கரி ‘படிச்சி நர்ஸ் ஆகி, எல்லாருக்கும் சேவை செய்யணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பா. காலையில 5 மணிக்கே எழுந்து படிப்பா. 7 மணிக்கு ரெடியாகி டைப்ரைட்டிங் கிளாஸ் போய்ட்டு 8.30-க்கு ஸ்கூலுக்குக் கிளம்பிடுவா. ஆனா, இன்னிக்கு ஸ்கூலுக்குப் போனவ பொணமாத்தான் வந்தா’’ என்று கதறி அழத் தொடங்கினார்.

ரேவதி அம்மா அமலு, ‘‘எம்பொண்ணு ஒழுங்கா படிக்காமத்தான் பத்தாவதுல 456 மார்க் எடுத்தாளா? ஸ்கூல்ல எம்பொண்ணு செல்போன் வெச்சிக்கிட்டு இருந்ததாவும், டீச்சர மரியாதை இல்லாம பேசுனதாவும் சொல்றாங்க. அப்படி போன் வெச்சிருந்தா, அத எங்ககிட்டதானே சொல்லியிருக்கணும்? எங்க போன் நம்பர், அட்ரஸ் எல்லாம் ஸ்கூல்ல இருக்கு. அவங்க எங்ககிட்ட சொல்லியிருந்தா நாங்க கண்டிச்சிருப்போம். அதைச் செய்யாம, ஸ்கூல் பிரேயர்லயே நிக்க வெச்சு எல்லா பிள்ளைங்க முன்னாலயும் முட்டிப்போட்டு மன்னிப்புக் கேட்க வெச்சிருக்காங்க. ஹெச்.எம். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்காங்க. கேவலமா பேசியிருக்காங்க. அதனாலதான் இப்படி முடிவு எடுத்துட்டாளுங்க’’ எனக் கதறினார்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ், ‘‘ தலைமை ஆசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் லில்லி இருவரையும் சஸ்பெண்டு செய்திருக்கோம். சம்பவத்துக்கு மூணு நாள் முன்பு, கிளாஸ்ல அந்த மாணவிகள் செல்போன் வெச்சு விளையாடிக்கிட்டு, கானா பாட்டு பாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அதை வகுப்பு டீச்சர் லில்லி பார்த்து சத்தம் போட்டிருக்காங்க. ‘நீ யாரு எங்களைக் கேக்கிறதுக்கு’னு அந்த மாணவிங்க திருப்பிக் கேட்டாங்களாம். லில்லி டீச்சர் ஹெச்.எம். ரமாமணிகிட்ட போய்ப் புகார் சொல்லியிருக்காங்க. அந்த மாணவிகளை ஆபீசுக்கு வரச் சொல்லி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியிருக்காங்க. வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோ என்ற பயத்துல இப்படி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஆசிரியர்கள்மீது தவறு இருப்பின் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

எஸ்.பி. பகலவன், ‘‘நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்கிறோம். மாணவிகள் விஷயம் என்பதால் பெண் இன்ஸ்பெக்டர், பெண் போலீஸாரை வைத்து விசாரிக்கிறோம்’’ என்றார்.

சிறு விஷயங்களுக்காக மாணவர்கள் மனம் உடைந்து போவது தவறு... மாணவர்களின் மனங்களை உடைப்பதும் தவறு!

- கா.முரளி
படங்கள்: ச.வெங்கடேசன்