ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் அதிரிபுதிரி ரகம். பெயர், முகவரி போன்றவை மாத்திரம் அல்ல, குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில், நடிகை, நாய் படங்கள்; சிவகங்கை முகவரிக்குப் பதிலாக மலேசியா முகவரி என வாக்காளர் அடையாள அட்டைகளில்கூட இல்லாத அளவுக்குக் கூத்துகள் அரங்கேறின. அவை, சமூகவலைதளங்களில் வைரலும் ஆகின.

நாட்டையே மாத்திட்டாங்க!
சிவகங்கையைச் சேர்ந்த ஆர்.சுரேஷுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவருடைய பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் மட்டுமே சரியாக இருந்தன. முகவரியில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் எக்ஸ்ட்ராவாகச் சேர்ந்திருந்தது. மலேசியாவையும் ‘மலைசியா’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மூதாட்டி!
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த எம்.வினோத்குமாருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், மூதாட்டி ஒருவரின் படம் இருந்தது.

‘குழந்தை’த் தலைவர்!
திருப்பூரைச் சேர்ந்த பிரபு சுகுமாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், குடும்பத் தலைவராகிய சுகுமாரின் படமும் பெயரும் இருக்க வேண்டிய இடத்தில், அவரின் மகன் சச்சின் பிரபுவின் படமும் பெயரும் இருந்தன.

தேசியக் கொடி!
பழனி அருகே ஆயக்குடியில் தயால் சுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட கார்டில், அவரது புகைப்படத்துக்குப் பதிலாகத் தேசியக்கொடி இருந்தது. தேசபக்தியுள்ள யாரோ ரெடி செய்திருப்பார்போல!

செருப்பு!
தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே போசிநாயக்கன்ஹள்ளியைச் சேர்ந்த சித்தன் என்பவரின் மனைவி மகேஷுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவருடைய புகைப்படத்துக்குப் பதிலாக செருப்பு அணிந்த ஒற்றைக்கால் படம் இடம்பெற்றிருந்தது. மேலும், கணவரின் பெயருடன் சேர்த்து மகேஷ் சித்தன் என்பதற்கு பதிலாக, மாமனார் சின்னசாமியின் பெயர் இணைத்து மகேஷ் சின்னசாமி என இருந்தது.

காஜல் அகர்வால்!
சேலம் ஓமலூரை அடுத்த காமலாபுரத்தைச் சேர்ந்த பெரியதம்பியின் என்பவரின் மனைவி சரோஜா. இவருடைய ஸ்மார்ட் கார்டில், நடிகை காஜல் அகர்வால் போட்டோவில் சிரிக்கிறார்.

ஊரை மாத்திட்டாங்க!
சிவகங்கை மானாமதுரை அருகே மேலப்பசலையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில், மேலப்பசலை என்பதற்குப் பதிலாக, மேலபிடவூர் என பதிவாகியிருக்கிறது.

விநாயகர்!
திருப்பூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த நல்லசிவத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவர் புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில், விநாயகர் படம்தான் இருந்தது.

நாய்!
தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவரின் படத்துக்குப் பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.

பெயர் மாற்றம்:
சென்னை முகப்பேரைச் சேர்ந்த வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவருடைய மகன் பெயரை ஹர்ஜித் என தமிழில் அச்சிடுவதற்குப் பதிலாக, இந்தியில் அச்சிட்டிருக்கிறார்கள்.

-ஜெ.பிரகாஷ், தெ.பாலமுருகன்