ரேஷன் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்று மு.க.ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர். அதைத்தொடர்ந்து, மதுரை காளவாசலில் உள்ள மதுரா கோட்ஸ் நியாயவிலைக் கடையில் ஆய்வு(!) நடத்தினார், ‘தெர்மாகோல் புகழ்’ கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

கடைக்குள் நுழைந்து மேலும் கீழும் பார்த்துவிட்டு வெளியே வந்த அமைச்சர், அந்த ரேஷன் கடையின் முன்பாகக் கூடியிருந்த சிலரிடம் (ஆளும் கட்சியினர் ஏற்பாட்டில் அழைத்துவரப்பட்டவர்கள்), “அரிசி, பருப்பெல்லாம் தட்டுப்பாடு இல்லாம கிடைக்குதா?” என்று கேட்டார். அதற்கு, “எல்லாப் பொருளும் தட்டுப்பாடு இல்லாம கிடைக்குது” என்று அவர்கள் பதில் சொன்னார்கள். “பார்த்தீங்களா! எல்லாப் பொருளும் தட்டுப்பாடு இல்லாம கிடைக்குதுன்னு பொதுமக்களே சொல்கிறார்கள். ஆனா, உண்மை தெரியாம எதிர்க்கட்சித் தலைவர்கள் தேவையில்லாம அவதூறு பரப்புகிறார்கள்” என்று ஊடகங்களுக்கு அமைச்சர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். ‘ரேஷன் கடைக்கு அமைச்சர் வந்துள்ளார்’ என்ற விஷயம், அந்தப் பகுதியில் பரவியது. பொதுமக்கள் திமுதிமுவென அங்கு வந்துவிட்டனர். அவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளைக் காண்பித்து, “ஆறு மாசமா எந்தப் பொருளும் தரலை. அரிசி மட்டும்தான் போடுறாங்க” என்று ஆக்ரோஷம் காட்டினர்.

அதுவரை அமைச்சரை கவர் செய்துகொண்டிருந்த கேமராக்கள் எல்லாம், பொதுமக்கள் பக்கமாகத் திரும்பின. அமைச்சருக்கு ஒரே தர்மசங்கடமாகிவிட்டது. புகார் சொல்லும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த, அமைச்சரின் அடிப்பொடிகள் முயற்சி செய்தனர். அப்போது, “ஆமாண்ணே. ஆறு மாசமாக அரிசியைத் தவிர வேறு எந்தப் பொருளுமே தரலைண்ணே. எல்லாப் பொருளும் தட்டுப்பாடு இல்லாம கிடைக்குதுனு சொன்னா, பணம் தர்றதா சொல்லி எங்களைக் கூட்டிட்டு வந்தாங்க. அதனால, அப்படிச் சொன்னோம்” என்று ஆளும்கட்சியினரால் அழைத்துவரப்பட்டவர்கள், பிளேட்டை மாற்றிப்போட... அடுத்த நிமிடமே அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்து ஜூட் விட்டார்.

- செ.சல்மான், படம்: வீ.சதீஷ்குமார்