எடையில் தகிடுதத்தம் செய்வார்கள்... மண்ணெண்ணெய் அளவைக் குறைப்பார்கள்... என ரேஷன் கடை ஊழியர்கள் என்றாலே ‘தில்லுமுல்லு ஆசாமிகள்’ என்ற பார்வை சமூகத்தில் உண்டு. ஆனால், அவர்களின் மறுபக்கமோ சோகம் நிறைந்தது.

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

“ரேஷன் கடை ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கலை. ஆனா, அவங்களுக்குப் பின்னால இருக்கற நிஜத்தையும் நீங்க பார்க்கணும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமலும் அரிசிக் கடத்தல் நடக்குது தெரியுமா? ஒரு அப்பார்ட்மென்ட்டில் 10 குடும்பங்கள் இருந்தால், அவர்கள் யாரும் ரேஷன் அரிசி வாங்குறதில்லை. அந்த ரேஷன் கார்டுகளை வாங்கி, அங்கு வீட்டு வேலை செய்றவங்க அரிசி வாங்குறாங்க. ஒரு அட்டைக்கு 20 கிலோ அரிசி. 10 அட்டைகளுக்கு 200 கிலோ. அதை மூட்டைகள்ல கட்டி ஆட்டோவிலோ, பைக்கிலோ எடுத்துட்டுப் போறாங்க. அவங்களை மடக்கிப் பிடிச்சிட்டு, ரேஷன் கடை ஊழியர்களைக் கைது செய்றாங்க. முன்பு, அரிசியை 50 கிலோ மூட்டைகளா எடைபோட்டு கடைகளுக்கு அனுப்புவாங்க. இப்போ, 42 கிலோ, 39 கிலோ, 48 கிலோ மூட்டைகள்தான் வருது. குறையற அளவை ரேஷன் ஊழியர்கள்தான் ஈடுகட்ட வேண்டியிருக்கு. 20 கிலோ பைகளா போட்டுக் கொடுத்துட்டா பிரச்னையே இல்லை. அதை ஏன் அரசு செய்யமாட்டேங்குது?

ஒருமுறை பொங்கல் பண்டிகைக்காக பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு எல்லாம் ஒரு பையில போட்டு ரேஷன் கடை மூலம் இலவசமாகக் கொடுத்தாங்க. மிஞ்சிப்போன பைகள்ல இருந்த பொருள்கள் எல்லாம் உளுத்துப்போச்சு. ‘அதுக்கான பணத்தைக் கட்டுங்க’ன்னு ஊழியர்களுக்கு உத்தரவு வந்துச்சு. ஒரு கடைக்கு ஆயிரம் கார்டுகள்னா, எல்லா கார்டுகளுக்குமான பொருள்களை ஒதுக்கீடு செய்யமாட்டாங்க. 750 கார்டுகளுக்கான பொருள்கள்தான் ஒதுக்கீடு செய்வாங்க. ‘எப்படியாவது சமாளிங்க’ன்னு அதிகாரிகள் சொல்லிடுவாங்க. பொருள் இல்லைன்னா, ஊழியர்களோடதான் மக்கள் சண்டை போடுறாங்க.

சோப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயம், வேர்க்கடலை என என்னென்னத்தையோ விற்கச் சொல்றாங்க. என்ன கொடுமைன்னா... அந்த சோப்புல நுரையே வராது; அந்தப் பெருங்காயத்தைத் தண்ணில போட்டா, ஒரு வாரம் ஆனாலும் கல்லு மாதிரி கரையாம கெடக்கும். கட்டாயம் அதை வித்தாக வேண்டும். விக்கலைன்னா, அதுக்கான பணத்தை ஊழியர்கள் கட்டணும். எனவே, அதையெல்லாம் மக்கள் தலையில ஊழியர்கள் கட்டுறாங்க. அதனால, மக்கள்கிட்ட ஊழியர்களுக்குத்தான் கெட்ட பெயர்.

பழையக் கோணிப்பைகளை எல்லாம் ஏலம் விடுவாங்க. ஒரு கோணிப்பையோட விலை ரூ.11.20. எலி கடிக்கிறதால, குத்தூசி போடுறதால கிழிஞ்ச கோணிப்பைகளுக்கு 7-8 ரூபாய்தான். அந்தப் பணத்தை ஊழியர்தான் ஈடுகட்டணும். ‘இன்ஸ்பெக்ஷன்’, ‘ரெய்டு’, ‘வெரிஃபிகேஷன்’ என விதவிதமான பெயர்கள்ல அதிகாரிகள் அதிரடியாக வருவாங்க. ஒருத்தர் ரெண்டு பேர் இல்லை... வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உணவுப்பிரிவு அதிகாரிகள் எனப் பல துறைகளின் அதிகாரிகளும் வருவாங்க. அது மிகப்பெரிய டார்ச்சர்.

ஒவ்வொரு கடைக்கும் ஒரு விற்பனையாளர், ஒரு எடையாளர் இருக்கணும். ஆனா, பல கடைகள்ல எடையாளர்கள் இல்லை. விற்பனையாளர் மட்டும் இருப்பார். மண்ணெண்ணெய் பீப்பாயைத் தூக்கி நிறுத்தணும்; அரிசி மூட்டையை இழுத்துவந்து, தூக்கி நிறுத்தி பிரிச்சு எடை போடணும்; எல்லாத்துக்கும் பில்லும் போடணும். இவ்வளவு வேலையையும் ஒருத்தரே செய்ய முடியுமா? சிலர் பெண்களாகவும், மாற்றுத்திறனாளியாகவும் இருப்பாங்க. அவங்களால என்ன செய்ய முடியும்? அதனால, அவங்களே ஒரு உதவியாளரை நியமிச்சுக்கிறாங்க. அவருக்கான ஊதியத்தை இவர்களே கொடுக்குறாங்க. அந்தப் பணத்துக்கு இவங்க எங்கே போவாங்க? பல துறைகளின் அதிகாரிகளைக் ‘கவனிக்கணும்’, ஆளும் கட்சிக்காரர்களைக் ‘கவனிக்கணும்’. தப்புசெய்ய அரசே தூண்டுது.

தூசிக்குள்ளே புழங்குறதால நுரையீரல் தொடர்பான நோய்கள் வருது. அவங்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான எந்த உதவியையும் அரசு செஞ்சு தரலை. பணிநிரந்தரமோ, ஓய்வூதியமோ இல்லை. பெண் ஊழியர்கள் வேலைசெய்யிற பல கடைகளில் கழிப்பறை வசதிகளே கிடையாது. இவ்வளவு பிரச்னைகள் இருக்கு. இதெல்லாம் யாருக்காச்சும் தெரியுமா? இதைப் பத்தி யாராவது கவலைப்படுறாங்களா?” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

‘எடை குறைப்பு’ புகார் சுமக்கும் ஊழியர்களுக்கு இத்தனை குறைகளா?

- பைக்காரா அழகன், பா.ஜெயவேல்

மிச்சப்படுத்துறாங்களாம்!

‘நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்குவோம்’ என்று 1.11.2016-ல் தமிழக அரசு அறிவித்தது. அப்படியென்றால், 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஆனால், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 20 கிலோவுக்கு மேல் அரிசி கிடையாது என்ற நிலைதான் தற்போது உள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி தரவேண்டும். ஆனால், 10 கிலோ அரிசிதான் தருகிறார்கள். மீதி 10 கிலோவுக்கு கோதுமையை வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஏனென்றால், ஒரு கிலோ அரிசியின் விலை 3 ரூபாய்; கோதுமை விலை 2 ரூபாய். 10 கிலோ அரிசியைக் குறைத்தால், 20 ரூபாய் அரசுக்கு லாபம் வருமாம்.

ரூ. 3,000 கோடி யார் தருவா?

2016-17-ம் ஆண்டு உணவு மானியத்துக்காக, 5,500 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ‘உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தினால், தமிழக அரசுக்கு 3,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்’ என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்லிவந்தார். அதன்படி, உ.பா.சட்டத்தை அமல்படுத்தியதால், 2017-18 நிதியாண்டில் உணவு மானியமாக 8,500 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், அதே 5,500 கோடி ரூபாயைத்தான் ஒதுக்கியுள்ளனர். பாக்கியை யார் தருவார்?