தமிழ்நாட்டில் எல்லோருமே அம்பானி ஆகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது அரசு. ரேஷன் சர்க்கரை விலையை 13 ரூபாயிலிருந்து அதிரடியாக 25 ரூபாய்க்கு உயர்த்திவிட்டார்கள். ‘ரேஷனில் இனி உளுத்தம்பருப்பு வழங்கப்படாது’ என அறிவித்திருக்கிறது. துவரம்பருப்புக்குப் பதிலாக மசூர் பருப்பு கொடுத்து வதைக்கிறது. மானியங்களைக் குறைத்து மத்திய அரசு அடுத்தடுத்து கொடுக்கும் நெருக்கடிகளில், இன்னும் என்னென்ன விஷயங்களில் மாநில அரசு கை வைக்கப்போகிறதோ என்ற குழப்பம் நிலவுகிறது.

‘ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு எந்தப் பொருளும் தரப்படாது’ என ஜார்க்கண்ட் மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. அதனால், சந்தோஷி குமாரி என்ற 11 வயது சிறுமி, பட்டினியில் வாடி இறந்தார். அதற்காக மன்னிப்புக் கேட்ட மாநில உணவு அமைச்சர் சரயு ராய், ‘‘இதுபோன்ற உத்தரவுகள் ஏழைகளையே பாதிக்கின்றன’’ என ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நிலைமை என்ன? அரசுக்குப் புரிய வைப்பதற்காக ஒரு கிராமத்துக்கும், நகர்ப்புற குடிசைப்பகுதி ஒன்றுக்கும் சென்றோம்.

முதலில், தேனி மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம். ரேஷன் கடையே இல்லாத சிறிய கிராமம் அது. அருகிலிருக்கும் வயல்பட்டி கிராமத்திலிருந்து ரேஷன் பொருள்கள் வாங்கிவரப்பட்டு இங்கே விநியோகிக்கப்படுகின்றன. பெண்கள், இரவுச் சாப்பாட்டுக்காக வாசலில் அமர்ந்து அரிசி களைந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரான வேலுத்தாயி ஆற்றாமையுடன் பேசினார்.

‘‘யாருக்குத்தான் எங்கமேல அக்கறை இருக்கு? எங்க கிராமத்துல எல்லோரும் ரேஷன் பொருள்களை வாங்கித்தான் சாப்பிடுறோம். எங்களுக்கு ரேஷன் கடையைவிட்டா நாதியில்லை. ரேஷன் கடையில உளுந்தைக் கண்ணால பார்த்து பல மாசம் ஆகுது. உண்மையைச் சொல்லணும்னா, ரேஷன்ல உளுந்து போட்ட பிறகுதான் வீட்டுல இட்லி, தோசை சாப்பிட்டோம். இப்போ ‘இட்லி வேணும், தோசை வேணும்’னு குழந்தைங்க கேட்டா மனசு படபடக்குது. ‘உளுந்து வேணும்னு மக்கள் யார் கேட்டது’ன்னு கேள்வி கேட்கும் அமைச்சருக்குச் சொல்லுங்க, எங்க வீட்டில் இருக்கற குழந்தைங்க கேட்கிறாங்கன்னு. உளுந்து ஒருபுறம்னா, ஏதோ ‘மசூர் பருப்பு’ன்னு ஒரு பருப்பைக் கொண்டுவந்து இங்கே போடுறாங்க. அதை சாப்பிடக்கூடாதுன்னும் சிலர் சொல்றாங்க. குழப்பமாகவும், பயமாகவும் இருக்கு. ஆனாலும், எங்களுக்கு அதைவிட்டா வழியில்லை. பல மாதங்களா எங்களுக்கு மண்ணெண்ணெய் தருவதே இல்லை. சர்க்கரை விலையையும் 12 ரூபாய் உயர்த்திட்டாங்க. அரசாங்கத்துக்கு அது சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா, அந்த 12 ரூபாய்க்கு நாங்க படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும். அதிக விலை கொடுத்து சர்க்கரை வாங்கணுமான்னு யோசனையா இருக்கு.

காய்கறி விலை கூடிப்போச்சு. தண்ணீரைக்கூட காசுக்கு வாங்குற நிலைமை வந்திருச்சு. இப்படியே போனா இந்த நாட்டுல வாழ்றதா, சாகுறதானு தெரியல. எங்க கிராமம் மாதிரி எத்தனையோ கிராமங்கள் தமிழ்நாட்டுல இருக்கும். எல்லாத்தையும், எல்லாரையும் நினைச்சுப் பாத்து ஆட்சி நடத்துனா நல்லா இருக்கும்’’ என்றார் வேலுத்தாயி.

கோவை மாநகரின் புலியகுளம் அருகேயுள்ள ஒரு குடிசைப் பகுதிக்குச் சென்றோம். ‘‘ரேஷன் கடை இல்லைன்னா, இங்க பல வீடுகள்ல அடுப்பு எரியாது. இப்பத்தான் ஸ்மார்ட் கார்டுக்கு மாறினோம். ஆனா, இதைப்பத்தி ஒண்ணுமே புரியல. முதல்ல மாதிரி இப்ப பொருள்களை வாங்க முடியல. எப்ப போய்க் கேட்டாலும், ‘அப்புறம் வா, அப்புறம் வா’ன்னு சொல்றாங்க. இதனால, பல பொருள்களை வாங்கவே முடியல’’ என்றார் ஜோதி.

ஐயம்மாள் என்பவர், ‘‘35 வருஷமா ரேஷன் பொருள்களைத்தான் நம்பியிருக்கோம். எங்க ஏரியாவுல பாதி பேர்தான் ஸ்மார்ட் கார்டு வாங்கியிருக்காங்க. முன்னாடியெல்லாம், என்னென்ன பொருள் வாங்கியிருக்கோம்னு நம்ப குடும்ப அட்டைலயே டிக் பண்ணித் தருவாங்க. இப்போ அந்த மாதிரி எல்லாம் இல்ல. நாங்க வாங்காத பொருளை எல்லாம் வாங்கிட்டதா சொல்லி மெசேஜ் அனுப்பறாங்க. அரிசி, பருப்பு மட்டும்தான் ஓரளவுக்கு சரியாக கொடுக்கறாங்க. எண்ணெய் எல்லாம் கொடுக்கிறதில்லை. ரேஷன் கடைல எல்லாம் ரவுடிங்கதான் இருக்காங்க. வயசானவங்களை மதிக்கறதே இல்ல. கெட்ட வார்த்தைல திட்றாங்க’’ என்றார்.

டிஜிட்டல் இந்தியாவில், இந்த எளியவர்களும் உயிர் பிழைத்திருக்க, நியாய விலைக் கடைகள் நியாயமாகச் செயல்பட வேண்டாமா?.

- எம்.கணேஷ், இரா.குருபிரசாத்
படங்கள்: சக்தி அருணகிரி, க.விக்னேஸ்வரன்

பெப்பே!

தமிழகத்துக்கு ஒரு மாதத்துக்கு 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை. அதை, 2010-ல் வழங்கிய மத்திய அரசு, 2016-ல் 25 ஆயிரம் கிலோ லிட்டராகக் குறைந்துவிட்டது. அதனால், மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தவர்களில், 40 சதவிகிதம் பேருக்கு மட்டும்தான் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. 60 சதவிகிதம் பேருக்கு ‘அல்வா’!