டிஜிட்டல் இந்தியா... புதிய இந்தியா... என கர்ஜிக்கும் இந்தியாவில்தான் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகூட இல்லை. ரேஷன் கார்டை வைத்துதான் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் பெற முடியும். ஏன், நலத்திட்ட உதவிகள் அனைத்துக்கும் அதுதான் ஆணிவேர். ஆனால், இன்றும் தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்கள் ஏராளம். சாம்பிளுக்கு, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சியில் களமிறங்கியது ஜூ.வி.

நாம் பார்த்த ஒரு பகுதியில் மட்டுமே 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது. கிழிந்துபோன, காணாமல் போன கார்டுகள், தனியாகப் பிரிந்து வாழும் குடும்பங்கள், வெளிமாநிலங்களுக்குப் பிழைக்கப் போய் திரும்பி வந்தவர்கள் எனப் பல காரணங்கள்.

“பொறந்த ஊர் பள்ளப்பட்டிதான். பெங்களூரைச் சேர்ந்தவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் பத்து வருஷம் அங்கேதான் இருந்தேன். வருமானம் போதாததால் இங்க வந்துட்டோம். பத்து வருஷம் ஆச்சு. ரேஷன் கார்டு கிடைக்காம அல்லாடுறோம். ரேஷன் கடைப் பொருள்களை வாங்க முடியல. ரேஷனில் கம்மி விலைக்கு வாங்கும் பொருள்களை வெளியே அதிக ரூபாய்க்கு வாங்குறோம். வறட்சி நிவாரணம், இலவச வேட்டி சேலை என எதுவும் கிடைக்கல’’ என்று குமுறினார், ஷோபா என்பவர்,.

அடுத்துப் பேசிய மாரியப்பன், ‘‘ஒன்பது வருஷங்களுக்கு முன்னாடி, வீடு எரிஞ்சதுல ரேஷன் கார்டும் சேர்ந்த எரிஞ்சு போயிடுச்சு. கைவண்டி இழுத்துதான் வாழ்க்கையை ஓட்டுறேன். அந்த வருமானத்துல அரிசி, பருப்பு எல்லாம் வாங்க முடியல. புது ரேஷன் கார்டு கேட்டு நாலு தடவை மனு கொடுத்தேன். இன்னும் கார்டு வரலை” என்றார்.

ரிபாய்தீன் ஹாசனோ, ‘‘இங்கே மட்டும் இரண்டாயிரம் பேர் தேர்தல்களில் வாக்களிக்க முடியலை. தாசில்தார், வட்ட வழங்கல் அதிகாரி, கலெக்டர் எனப் பலரிடம் புகார் செய்தும் பலனில்லை’’ என்றார்.

கரூர் கலெக்டர் கோவிந்தராஜிடம் பேசினோம். ‘‘இந்த பிரச்னை இப்போதுதான் கவனத்துக்கு வருகிறது. உடனே அதிகாரிகளை முடுக்கிவிட்டுப் பிரச்னையைத் தீர்க்கிறேன்” என்றார்.

பள்ளப்பட்டியில் பல ஆண்டுக்காலம் இப்படியொரு பிரச்னை இருப்பது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜுக்கு தெரியாதா? இனிமேலாவது அங்கே போய்ப் பார்ப்பாரா?

- துரை.வேம்பையன்
படங்கள்: தே.தீட்ஷித்