என் பெயர் குடும்ப அட்டை. ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு... இப்படி எனக்குப் பல பேர் இருக்கு! ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ டயலாக் எனக்குதான் கரெக்டா செட் ஆகும். பத்து பக்கங்கள்ல ஸ்கூல் நோட்புக் மாதிரி இருந்த நான், இப்போது டிரைவிங் லைசென்ஸ் கார்டு மாதிரி சுருங்கிட்டேன். எல்லாம் டிஜிட்டல்மயம் ஆகிட்டபிறகு, நான் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன?

கோர்ட்டுக்கு சாட்சியா போய் நின்னாலும், ஜாமீனுக்கு நின்றாலும் என் துணை இல்லாம எதுவும் நடக்காதுன்னு இருந்த காலம் உண்டு. இப்போ பல ஆவணங்களில் ஒன்றாகக் கடைசி இடத்தில் இருக்கேன்.

ஆரம்பத்தில், நீள வடிவத்தில் இருந்தேன். என்மீது கனத்த அட்டை போட்டு மக்கள் பாதுகாத்தாங்க. இப்ப நானே அட்டையா மாறிட்டேன். கால் நூற்றாண்டுக்கும் மேலாக என்னில் எத்தனையோ மாற்றங்கள். பச்சை, ரோஸ், மஞ்சள் என்று கறுப்பைத் தவிர எல்லா கலர்களிலும் என்னை மாத்திப் பார்த்துட்டாங்க. அஞசு வருஷமா உள்தாள் ஒட்டி, கம்பியால் குத்தி என்னை அருவருப்பு தோற்றத்துக்கு மாற்றிவிட்டது அரசாங்கம்.

ரேஷன் கடைகள்ல பொருள் கிடைக்கலைன்னா என்னைத் தூக்கியெறிஞ்சே மக்கள் கோபத்தைத் தீர்த்துக்கறாங்க. அரசாங்கம் செய்யற தப்புக்கு என்னையா தண்டிக்கணும்? அன்று தாராளமாய்க் கொடுத்ததும் நானல்ல, இன்று கிள்ளிக் கொடுப்பதும் நானல்ல. இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செஞ்ச பட்ஜெட்ல, ‘நான் தண்டச் செலவினம்’னு சொல்லாம சொல்லிட்டாரு. ‘ரேஷன் கடைகள்ல விற்பனை செய்யப்படுற சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்துவந்த மானியம் ரத்து’னு அதுலதான் சொன்னாங்க. இன்னும் என்னென்ன வரப்போகுதோ?!

என்னுள்ளே ஆயிரம் சோகங்கள் இருந்தாலும், என்னை நினைச்சு நானே மகிழ்ந்த, அழுத தருணங்கள் உண்டு. வெள்ளம் வந்தா பொதுமக்கள் முதல்ல பாதுகாப்பது என்னைத்தான். வெள்ள நிவாரணம் பெற சில ஆண்டுகளுக்கு முன் என்னை வெச்சு பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்தது அரசாங்கம். நிவாரணத்தை வாங்குறது ஏற்பட்ட நெரிசல் காரணமா, பல பேர் இறந்துட்டாங்க. ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி-சேலைகளை அரசு வழங்கினாலும், அந்தக் கடைக்கு நானும் கூடவே போகவேண்டும்ங்குற நிலை இருந்துச்சு. சில இடங்கள்ல விலையில்லாப் பொருள்களை மந்திரிகள், கலெக்டர்கள் கொடுத்தாங்க. அந்த வகையில், அனைத்து அரசு சக்திகளையும் பார்த்துட்டேன். ஆனாலும், என் நிலைமை இப்போ சொல்லும்படி இல்லை.

ரேஷன் பொருள்களை வழங்குறது உணவுத்துறைன்னாலும், கூட்டுறவுத் துறையிலும் கொஞ்சம் ரேஷன் கடைகள் வருது. அறிவியல் ஆர்வத்தோட முயற்சிகளைச் செய்யற கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு, என் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். என்னையும், என்னால் பயன்பெறும் நாட்டு மக்களையும் காப்பாத்தலாம்.

கேட்டு எழுதியவர்:
ந.பா.சேதுராமன்

என்னா ஒரு தந்திரம்!

மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால் எதிர்ப்பு வரும் என்பதால், மிகவும் தந்திரத்தைக் கையாண்டுள்ளது மத்திய அரசு. 2016 ஜூலை முதல் 2017 வரை, மாதம் ஒன்றுக்கு 25 பைசா வீதம் விலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். 10 மாதங்களில் ரூ. 2.50 உயர்ந்துவிட்டது. (இந்த மாதிரியான திறமையை மல்லையாகிட்ட கடனை வசூலிக்கிறதுல காட்டியிருக்கலாமே... மிஸ்டர் கவர்மென்ட்!)