Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ந்த ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும், நம்மைக் கடந்து செல்லும்போது

தலையங்கம்

அழுத்தமான முத்திரைகளைப் பதித்து, பல படிப்பினைகளையும் அளித்துச் செல்கிறது. மொழி, இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் 2017-ல் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கமே ஒரு பண்பாட்டுக் கொந்தளிப்புடன்தான் ஆரம்பித்தது. ‘ஜல்லிக்கட்டுக்கான தடை’ என்பது தமிழினப் பண்பாட்டின் மீதான தடையாகப் பார்க்கப்பட்டு, மெரினாவில் புதிய வகைப் போராட்ட முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மொழி, இன அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் உணரப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் முன்னகர்ந்தன. குறிப்பாக மத்திய அரசு, மேலும் மேலும் அதிகாரக் குவியலாக மாறி, மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலில் ‘மாநில சுயாட்சி’ என்னும் கருத்தாக்கம், காலத்தின் புதிய வெளிச்சத்தில் அலசப்பட்டது. ‘நாடு முழுமைக்கும் ஒரே பொதுத்தேர்வு’ என்ற முயற்சி, ‘நீட்’ அமலாக்கத்தைத் தொடர்ந்து அனிதாவின் தற்கொலை ஆகியவை மீண்டும் ஒற்றைத்துவ அடையாளத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான போராட்டங்களை உசுப்பியது. எல்லா அரசியல்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

பொருளாதார விவாதங்களின் பின்னாலும் பண்பாடு குறித்த அக்கறைகளும் இருக்கின்றன என்ற வகையில் இந்த எதிர்க்குரல்கள் முக்கியமானவை.

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடக் கட்சி ஆட்சிக்கு வந்த பொன்விழா, கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, இந்திராகாந்தி நூற்றாண்டு விழா, ரஷ்யப் புரட்சி நூற்றாண்டு விழா, காரல் மார்க்ஸ் இருநூற்றாண்டுத் தொடக்கம் என ‘2017’ பல அரசியல் முக்கியத்துவங்களை உடைய ஆண்டு. நாட்டார் ஆய்வுகளைத் தமிழில் தொடங்கிவைத்த முன்னோடி நா.வானமாமலையின் நூற்றாண்டு இது என்பது, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் தளத்தில் முக்கியமான ஒன்று. அசோகமித்திரன், மா.அரங்கநாதன், அப்துல் ரகுமான், நா.காமராசன், ச.வே.சுப்பிரமணியன், வீரசந்தானம், கோவை ஈஸ்வரன், க.சீ.சிவகுமார், கழனியூரன், ஹெச்.ஜி.ரசூல், எம்.ஜி.சுரேஷ், மா.நன்னன், மேலாண்மை பொன்னுச்சாமி எனப் பல ஆளுமைகள் காலத்தில் கரைந்ததும் இந்த ஆண்டுதான். நம் முன்னோடிகளின் பதிவுகளும் செயற்பாடுகளும் நமக்கு உரமாகிட, இளம் தலைமுறையின் இலக்கியச் செயற்பாடுகளை மேலும் மன எழுச்சியுடன் முன்னெடுத்துச் செல்வதே நமது தொடர்ந்த பணி. தொடர்வோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism