பிரீமியம் ஸ்டோரி

தணலின் பாடல்

தணலின் வெதுவெதுப்பை
மழை அவன் கரங்களுக்குக் கடத்தியிருந்தது.

கவிதைகள் - அ.ரோஸ்லின்


வான் துளிகளின்
நீர்மை சுமக்கும் சிற்றிலைகள்
அவன் பிரியத்தின் மகத்துவத்தைப்
பொழுதிற்கு வழங்கியிருந்தன.
இந்த நாள்
இப்படிக் கடந்து செல்லும் என
அவள் நினைத்திருக்கவில்லை.
நீர்மையற்ற தாழ்ப்பாள்களுக்குள்
அடைத்துவைத்திருக்கிறாய்
சின்னஞ்சிறு தேவதைக்கான
ஒரு சொல்லை.
இசைக்கருவியின் நாண்களில்
ஔிந்திருக்கும் அவள் கீதம்
புத்தம்புது பாடல்களை இசைக்கிறது.
மீட்டும் இசைக்கம்பியிலிருந்து
மெல்லிய அதிர்வுகள்
புறப்பட்டு எழுகின்றன
கானகத்தின் பசும் நெடியுடன்.

கவிதைகள் - அ.ரோஸ்லின்

காமத்தின் கனி

கனியின் முதிர்வைப்போல
ஓர் அன்பைக் கண்ணுற்றபடியிருக்கிறேன்.
அதன் இளம் வாசனையென மிளிர்கிறது,
நாம் ஔித்துவைத்திருக்கும் சிநேகம்.
தொலைவெனும் இடைவெளியில்
உடலின் மதுரத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.
மகத்துவமான உன் பிரியத்தின் நெடியில்
தேகம் வேண்டும் மாம்சத்தின் வாஞ்சையோடு,
தன்னை இலகுவாக்கிக்கொள்கிறது
காமத்தின் கனி.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு