Published:Updated:

ராஜ்பவன் - உள்ளே... வெளியே

ராஜ்பவன் - உள்ளே... வெளியே
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்பவன் - உள்ளே... வெளியே

ராஜ்பவன் - உள்ளே... வெளியே

ராஜ்பவன் - உள்ளே... வெளியே

ராஜ்பவன் - உள்ளே... வெளியே

Published:Updated:
ராஜ்பவன் - உள்ளே... வெளியே
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்பவன் - உள்ளே... வெளியே

ராஜ்பவனுக்குள் கவர்னர்கள் மாறினாலும், அங்கே இருக்கிற அதிகாரிகள் மாறுவதில்லை. ஆனால், பன்வாரிலால் புரோஹித் கவர்னராக வந்த சில வாரங்களிலேயே, கவர்னரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, டிட்கோவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் இருந்த இடத்துக்குக் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜ்பவனில் நடந்த இந்த ‘உள்ளே வெளியே’ விளையாட்டில் அரசியலும் கலந்திருக்கிறது.

ராஜ்பவன் - உள்ளே... வெளியே

உள்ளே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜகோபால்

 ஐ.
ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சென்னை நெற்குன்றத்தில் 445 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும் பணி, முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கியது. ரூ. 31 லட்சம் என வீடு​களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வீடுகளை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் நடந்தபோது, பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கைத்தறித் துறையின் செயலாளராக இருந்த ராஜகோபால், அதில் கலந்துகொள்ளவில்லை. ‘இந்த வீடுகள் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்படுகின்றன என அறிகிறேன். இதனால், வீட்டுவசதி வாரியத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். அதனால், எங்களுடைய நாணயத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த விஷயத்தில், உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என அரசுக்குக் கடிதம் எழுதி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ராஜகோபால். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே சீறியதைக் கண்டு கொதிப்படைந்தது அன்றைய தி.மு.க அரசு. உடனே, 50 லட்ச ரூபாய் ரூபாய் செலவில் நாளிதழ்களில் விளக்கத்தை அரைப் பக்கத்துக்கு விளம்பரமாகக் கொடுத்தது.

 ராஜகோபாலின் திறமையை அறிந்த ஜெயலலிதா, 2012 ஜனவரியில் அவரை உள்துறைச் செயலாளராக நியமித்தார். 2013 மே மாதம் அந்தப் பதவியிலிருந்து ராஜகோபால் அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டார். ‘ராஜகோபால் பணியில் கண்டிப்புக் காட்டினார். இதனாலேயே போலீஸ் உயரதிகாரிகளுக்கும் ராஜகோபாலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன’ எனப் புகார் கிளம்பியது. போலீஸ் அதிகாரிகள் தொடர்பான ஃபைல்களில் நிறைய விளக்கம் கேட்டு பெண்டிங்கில் வைத்தார். டி.ஜி.பி பரிந்துரைத்தப் பதவி உயர்வு மற்றும் மாற்றங்கள் தொடர்பான ஃபைல்களில் திருத்தம் போட்டார். விளக்கம் கேட்டுக் கேட்டு கோப்புகள் அடிக்கடி திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் சஞ்சய் அரோரா, சுனில்குமார், சுனில்குமார் சிங், சந்தீப் மித்தல், பாலநாகதேவி, வி.ஏ.ரவிக்குமார், சேஷசாயி, நல்லசிவம், ராமசுப்பிரமணி ஆகியோரின் பதவி உயர்வுகள் காத்திருப்பில் இருந்தன. இதனால் எழுந்த புகார்களால்தான், உள்துறையிலிருந்து அவரைத் தூக்கினார்கள்.

 அதன்பிறகு வேறு சில துறைகளில் பணியாற்றிவிட்டு மத்திய அரசுப்பணிக்குப் போன அவர், இப்போது ராஜ்பவனுக்கு வந்ததன் மூலம் மாநில பணிக்குத் திரும்பியிருக்கிறார்.

வெளியே

ரமேஷ் சந்த் மீனா

 2013
-ம் ஆண்டு மார்ச்சில் கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ரமேஷ் சந்த் மீனா, அன்றுமுதல் ராஜ்பவனில் கோலோச்சினார். அப்போது, அவர்மீது வகைதொகை இல்லாமல் புகார்கள் கிளம்பின. இப்போது ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டதும், ராஜ்பவனில் இருக்கிற ஊழியர்கள் சிலர் இனிப்பு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள்.

 ‘‘கோயம்பேடு மற்றும் பனையூரில் உள்ள ரமேஷ் சந்த் மீனாவின் வீடுகளுக்கு ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். அங்கு, துப்புரவுப் பணி, துணிகளைத் துவைத்துக் காயவைப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது எனப் பணிகள் தரப்பட்டன. அங்கே செல்லாதவர்கள் பற்றி ரமேஷ் சந்த் மீனாவின் மனைவியிடமிருந்து, ராஜ்பவன் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. அதனால், ராஜ்பவன் வளாகத்தில் உள்ள குடியிருப்புகளிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாபு, ரவணம்மா, முத்துலட்சுமி என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.

 ராஜ்பவனில் ஒளவையார் சிலை திறப்பு விழாவில் பேசிய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், ரமேஷ் சந்த் மீனாவைப் பாராட்டிப் பேசினார். அடுத்த நாள் அவரது நெற்குன்றம் வீட்டை வித்யாசாகர் ராவ் திறந்துவைத்தார். ஆனால், கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வந்தபிறகு, இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்டார். ராஜ்பவனில் ராஜதந்திரியாகச் செயல்பட்டு அதிகாரிகளின் ராஜ்பவனாக கவர்னர் மாளிகையை மாற்றி வைத்த மீனாவை அவர் மாற்றிவிட்டார்’’ என்கிறார்கள் ராஜ்பவன் ஊழியர்கள்.

 கவர்னர் மாளிகை செயலகத்தில் விசாரித்தபோது, ‘‘ரமேஷ் சந்த் மீனாமீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். தற்காலிக ஊழியர்கள் பலர் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதற்காக நடவடிக்கை எடுத்ததால் இப்படிச் சொல்கிறார்கள். ரமேஷ் சந்த் மீனாவின் வீடுகளுக்கு கவர்னர் மாளிகை ஊழியர்கள் பணிக்கு அனுப்பப்படுவது கிடையாது’’ என்றார்கள்.

ராஜ்பவன், இனி நிழல் அதிகார மையமாக மட்டுமே இருக்காது என்பது தெரிகிறது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி