“மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ... எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘நடப்பது அம்மாவின் ஆட்சி’ என்று கூச்சமில்லாமல் கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவின் முதல் எதிரிகளே இவர்கள்தான். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதாகச் சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அதிரடி கிளப்புகிறார் கோவை வழக்கறிஞர் லோகநாதன். ஜெயலலிதா இறந்தது முதல், அது சம்பந்தமான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் திரட்டிக்கொண்டிருக்கும் லோகநாதனிடம் பேசினோம்.

‘‘இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியாலோ, துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தாலோ அமைந்தது கிடையாது இந்த ஆட்சி. ஜெயலலிதாவின் முகத்துக்காகத்தான் மக்கள் ஓட்டுபோட்டார்கள். ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்சியில் அமர்ந்திருக்கும் இவர்கள், ஜெயலலிதாவின் புகழை நிலைநாட்டுவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு நாள். ஆனால், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம்கூட இன்னமும் தேர்வுசெய்யப்படவில்லை. 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்தார். மறுநாள், எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகிலேயே ஜெயலலிதாவை அடக்கம் செய்தார்கள். அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான ஓர் அரசாணையை அடுத்த நாளே வெளியிட்டது. அதில், ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தைகள் திட்டம், மழைநீர் சேகரிப்புத்திட்டம், இலவச மிதிவண்டி, மடிக்கணினி, தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற் கான காரணமாக மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதன்பிறகு, அந்த நினைவு மண்டபப் பணி என்ன ஆனது என்ற தகவலே இல்லை.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மூன்று கேள்விகள் கேட்டேன். 14.11.2017 அன்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

* ‘ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதா? ஒப்பந்தப்புள்ளி எந்தத் தேதியில் வெளியிடப்பட்டது? ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பித்த நிறுவனங்களின் பெயர் மற்றும் விவரம், எந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?’ என்று கேட்டிருந்தேன். ‘இல்லை’ என்று பதில் கொடுத்திருக் கிறார்கள்.

* அடுத்ததாக ‘ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட இருக்கும் நினைவிட வரைபடம் இறுதிசெய்யப்பட்டுவிட்டதா? ஆம் எனில், அதன் நகலை வழங்கவும்’ என்று கேட்டிருந்தேன். அதற்கும் ‘இல்லை’ என்ற பதில்தான் வந்திருக்கிறது.

* ‘ நினைவிடத்துக்கான வரைபடத்தை முடிவுசெய்வதற்கு தனியார் நிறுவனங்க ளிடமிருந்து வரைபட மாதிரிகள் பெறப்பட்டுள்ளனவா? ஆம் எனில், எந்தெந்த நிறுவனங்கள் வரைபட மாதிரியை வழங்கியுள்ளன?’ என்ற கேள்விக்கு, ‘ஆம். வரைபட மாதிரிகள் பரிசீலனையில் உள்ளன’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நினைவிடம் கட்டுவதற்கு அடிப்படைத் தேவை, பணம். அரசு பணம் ஒதுக்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ‘நினைவிடம் அமைக்கக்கூடாது’ என்று யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனாலும், இவர்கள் அதற்காக ஒரு கல்கூட எடுத்து எடுக்கவில்லை. இவர்கள் ஜெயலலிதாவைப் பெயரளவுக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். வரலாற்றில் பதிவாகப்போகும் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தைக்கூட ஏனோதானோ எனத்தான் நடத்தினார்கள்.

‘சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறக்கத் தேதி ஒதுக்கித் தாருங்கள்’ என்று 24.05.2017 அன்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கடிதத்தில் ‘ஜூலை மாதத்தில் ஏதாவது ஓர் தேதி’ என்று குறித்துச் சொல்லப்பட்டிருந்தது. ‘ஜூலை மாதம் பிரதமர் மோடி கையால் ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும்’ என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அந்தப் படத் திறப்பும் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. அதன்பிறகு, மோடியைப் பலமுறை இவர்கள் நேரில் சந்தித்திருக்கிறார்கள். ஏன், மோடியே தமிழகத்துக்கு வந்துபோயிருக்கிறார். பன்னீருக்கும் எடப்பாடிக்கும் பஞ்சாயத்து பண்ண நேரம் இருக்கும் மோடிக்கு, முன்னாள் முதல்வரான ஜெயலலிதா படத்தைத் திறந்துவைக்க நேரம் இல்லையா என்ன?

‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்தார்கள், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும்’ என்று அறிவித்தார்களே... இப்படி நீங்கள் கேட்கலாம். அவை இரண்டும், ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்த நேரத்தில் ஓ.பி.எஸ் வைத்த கோரிக்கைகள்.

ஓ.பி.எஸ்-ஸை கூல் பண்ணுவதற்காக நடத்தப்பட்ட கேம் அது. ‘போயஸ் கார்டன் நினைவிடமாக்கப்படும்’ என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இதுவரை அதுதொடர்பாக எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. இவர்கள் ‘அம்மா... அம்மா...’ என்று சொல்வதெல்லாம் சும்மா. அம்மா பெயரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டம் இது’’ என்கிறார் லோகநாதன்.

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: தி.விஜய்