Published:Updated:

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

நிலம்... நீர்... நீதி!

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

நிலம்... நீர்... நீதி!

Published:Updated:
மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!
மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

‘‘மறுபடியும் 2015 மாதிரி ஆகுமா?!’’ என்ற பயம்கலந்த குரல்களை சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் நாம் கேட்டிருக்க முடியும். தொடர்மழையின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் சில வாரங்களுக்கு முன் மூழ்க ஆரம்பித்ததுதான் காரணம். குறிப்பாக, 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீரில் மூழ்கிப்போன தாம்பரம், படப்பை, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் இந்தக் குரல் அதிகமாவே ஒலித்தது. ஆனால், இதே பகுதியில் இருக்கும் சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் சிறுமாத்தூர் பகுதிகளில் இப்போது இத்தகைய குரல்கள் ஒலிக்கவில்லை. காரணம்... இந்த மூன்று ஊர்களிலும் இருக்கும் மூன்று ஏரிகளும் சீரமைக்கப்பட்டு, பலமான கரைகளுடன் கம்பீரமாக நிற்பதுதான். மழையின் தொடர்ச்சியாக, இப்போது இந்த மூன்று ஏரிகளும் தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கின்றன!

‘‘மூணு ஏரிகளைத் தூர்வாரி, மூணு கிராமங்களோட பயத்தைப் போக்கினதோட, இன்னும் ரெண்டு வருஷத்துக்குப் பிரச்னையில்லாம விவசாயம் நடக்குறதுக்கும் விகடனோட ‘நிலம் நீர் நீதி’ திட்டம்’ உதவியிருக்கு” என  நன்றிப்பெருக்கோடு பேசுகின்றனர் சாலமங்கலம் உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2015-ம் ஆண்டு சென்னையைப் பாதித்த பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, வாசகர்களின் பங்களிப்போடு விகடன் முன்னெடுத்த திட்டம்தான் ‘நிலம் நீர் நீதி’ அறத்திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ், அடையாறு ஆற்றின் உபவடிநிலப் பகுதிகளிலுள்ள ஏரிகளைச் சீரமைக்கும் பணி 2016, ஜூலை மாதத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, விகடன் குழும இதழ்களில் அவ்வப்போது பதிவுசெய்துவருகிறோம். அடுத்தகட்ட பணிகள் பற்றிய பதிவு இதோ...

சென்னையை அடுத்த வண்டலூர்-ஒரகடம் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது சாலமங்கலம் ஏரி. 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலமாக, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துதல், ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர் கால்வாய் எடுக்கப்படுதல் போன்ற பணிகளும், ஏரியின் இயற்கைச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக மரக்கன்றுகள் நடும் பணியும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இப்போது பெய்த மழையால் இந்த ஏரியில் 28 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து சிறுமாத்தூர்... சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியின்மூலம் 70 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. ஏரியின் ஒரு பகுதியில் 2 ஆயிரம் சதுர அடிக்குச் சுவர் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதை அகற்றுவதற்காக அரசுத் துறைகளை நாம் அணுகினோம். அவர்களும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில், நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இடைக்காலத் தடை வாங்கிவிட்டனர். அதனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.

ஏரியின் கரையையொட்டி பனை விதைகள், புளியங்கன்று, புங்கன், பூவரசு, இலுப்பை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தொடர்ந்து கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

71 ஏக்கர் பரப்பளவில் நரியம்பாக்கம் ஏரி விரிந்துள்ளது. பெரும்பாலான நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாகிவிட்ட நிலையில், இன்றும்கூட இந்த ஏரியை நம்பி 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. ஏரி சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், கூடுதலாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கரைகள் சில இடங்களில் லேசாக சரிந்துள்ளன. மண்ணின் தன்மை காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சரிவுகளைச் சீர்படுத்தி, மேலும் சரிவுகள் ஏற்படாமல் உறுதியான அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் கோடைக் காலத்தின்போது இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

வாசகர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘நிலம் நீர் நீதி’ திட்டம், தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தமிழகப் பொதுப்பணித் துறை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகள் உறுதுணையாக இருந்து வருவதை இங்கே நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறோம். ஏரிகளில் நடுவதற்கான மரங்கள் விலைக்கு வாங்கப்பட்டு வரும் நிலையில், மரக்கன்றுகள், பனைவிதைகள், வெட்டிவேர் போன்றவற்றை இலவசமாகவே வழங்கியிருக்கும் நல்உள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். பணிகள் அடுத்தடுத்த கட்டங்களை அடையும் போது, அதுகுறித்து தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

- விகடன் குழு
படங்கள்:தே.அசோக்குமார்

மூன்று கிராமங்கள்... மூன்று ஏரிகள்... நீர்நிலைகளின் அருமையை உணர்த்தும் அறத்திட்டம்!

சிறுமாத்தூர்-மணிமங்கலம் ஏரி இணைப்புக் கால்வாய்

சி
றுமாத்தூர் ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர், மணிமங்கலம் ஏரியில் சென்று கலக்கிறது. சிறுமாத்தூர் ஏரியைவிட மணிமங்கலம் ஏரி மிகப்பெரியது. இந்த இரண்டு ஏரிகளுக்கும் இடையிலான நீர் செல்லும் கால்வாய் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் புதர் மண்டிக் கிடந்தது. உள்ளாட்சித் துறையிடம் அனுமதிபெற்று, 425 மீட்டர் நீளமுள்ள கால்வாய் இப்போது சீரமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் சில பகுதிகள், காப்புக்காடுகளின் வழியாகச் செல்வதால், வனத்துறையிடம் அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism