’ஷாக்’ கொடுக்கும் ஜெ. அத்தை மகள்

“ ‘இப்போ, ஜெயலலிதாவுக்கு அவங்க அம்மாவும் இல்ல... ஏதோ தனியாக இருக்குற பொண்ணாச்சே, கூப்பிடுறாளேனு பாக்கப் போனேன். அங்க போனதும்தான் தெரிஞ்சது... நிறைமாச கர்ப்பிணியா நின்னா. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. சரின்னு கூட இருந்து பிரசவம் பார்த்தேன். அழகான பெண் குழந்தை பிறந்துச்சு. கூடவே இருந்து எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன்’ என்று என் அம்மாவிடம் பெரியம்மா சொன்னார்” - இப்படி அதிர்ச்சித் தகவல்களை நம்மிடம் கொட்டினார், ஜெயலலிதாவின் உறவினர் லலிதா.

‘ஜெயலலிதாவின் மகள்’ என அவ்வப்போது யாராவது ஒரு பெண் வெளியே வருவார். இப்போது, பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் டி.என்.ஏ சோதனை கேட்டு உச்ச நீதிமன்றம் வரை போய்வந்துள்ளார். இந்த நிலையில், பெங்களூரு பசவனகுடியில் வசித்துவரும் ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

‘‘உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த வகையில் உறவு முறை?’’

‘‘ஜெயலலிதாவின் அப்பா ஜெயராம் எனக்குத் தாய்மாமன். எங்கள் அம்மா சீதம்மாவும் ஜெயராமும் உடன் பிறந்தவர்கள். ஜெயலலிதா எங்களுக்கு தாய்மாமன் மகள் என்ற உறவு.’’

‘‘ஜெயலலிதாவை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?’’

‘‘இரண்டு முறை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அதுவும், 1970-களில் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயம். ‘இவர்தான் உங்கள் அத்தை சந்தியாவின் மகள் ஜெயலலிதா’ என்று அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு, சில மாதங்கள் கழித்து நடந்த எங்கள் பெரியம்மா ஜெயலட்சுமி மகன் ரங்காச்சாரி திருமணத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தேன். அப்பவே, தனக்கென்று ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு கெத்தா தனித்து இருப்பார். சொந்தம் பந்தம் என்று நெருங்கிப் பழகமாட்டார். அதனால், நாங்களெல்லாம் ஜெயலலிதாவைவிட்டு ஒதுங்கியே இருந்தோம். அதிலும், சினிமாவைவிட்டு அவர் அரசியலுக்கு வந்தபிறகு, எங்கள் யாரையும் ஜெயலலிதாவிடம் சசிகலா நெருங்கவிடவில்லை.’’

‘‘1970-களில் இரண்டு முறை மட்டுமே ஜெயலலிதாவை நேரில் பார்த்த உங்களுக்கு, ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்த தகவல் எப்படித் தெரியும்?’’

‘‘இந்தக் கேள்விக்கு நான் கொஞ்சம் விளக்கமாகவே பதில் சொல்கிறேன். எங்கள் மாமா ஜெயராம் மறைவுக்குப் பிறகு, சந்தியா குடும்பத்துடனான உறவை நாங்கள் தொடர விரும்பவில்லை. அப்போது, ஒரு முறை சென்னை சென்றிருந்த பெரியம்மா ஜெயலட்சுமி, மயிலாப்பூரில் தங்கியிருந்தார். அப்போது, ஜெயலலிதாவிடமிருந்து பெரியம்மாவுக்கு அவசரமாக அழைப்பு வந்துள்ளது. அவரும் சென்று ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளார்.’’

‘‘உங்கள் பெரியம்மாவிடம் மட்டும் ஜெயலலிதா பேசக் காரணம் என்ன?’’

‘‘பெரியம்மா மகன் ரங்காச்சாரி சென்னையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அதனால் அடிக்கடி பெரியம்மா சென்னை போய்விட்டு வருவார். ஆரம்பம் முதலே சந்தியாவும் ஜெயலலிதாவும் தொடர்ந்து பெரியம்மாவிடம் மட்டும் பேசிவந்துள்ளனர். சந்தியா நல்ல மதிப்பு வைத்திருந்ததால், ஜெயலலிதாவும் என் பெரியம்மாவிடம் நன்றாகப் பேசிவந்தார். அந்தப் பழக்கத்தில் ஜெயலலிதா அந்த அவசரமான சமயத்தில் பெரியம்மாவை அழைத்துள்ளார்.’’

‘‘எதற்காகப் பெரியம்மாவை அவசரமாக ஜெயலலிதா அழைத்தார்?’’

‘‘சென்னையிலிருந்து திரும்பிய பெரியம்மா ஜெயலட்சுமி, ‘ஜெயலலிதாவ பாத்துட்டு வந்தேன்’ என்று எங்கள் அம்மாவிடம் சொன்னார்கள். எங்க அம்மாவுக்குப் பெரியம்மா ஜெயலட்சுமிமீது கோபம் வந்துவிட்டது. ‘நீ ஏன் அவளைப் பார்க்கப் போனே?’ என்று சண்டை போட்டார். பெரியம்மா, அம்மாவிடம் நிதானமாகக் காரணத்தைச் சொன்னார். ‘ஜெயலலிதாவுக்கு இப்போ அவங்க அம்மாவும் இல்லை... ஏதோ தனியாக இருக்குற பொண்ணு கூப்பிடடுறாளேன்னு பாக்கப் போனேன். அங்க போனதும்தான் தெரிஞ்சது... நிறைமாச கர்ப்பிணியா நின்னா. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. கூட இருந்து பிரசவம் பாத்தேன். அழகான பெண் குழந்தை பிறந்துச்சு’ என அம்மாவிடம் சொன்னார். பிறகு, இந்தத் தகவலை வெளியே சொல்லக் கூடாதென்று அம்மாவிடம் பெரியம்மா சத்தியம் வாங்கினார். பெரியம்மாவும், அவரைத் தொடர்ந்து அம்மாவும் 1983-ல் அடுத்தடுத்து இறந்துபோனார்கள்.”

“ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததாக பெரியம்மா சொன்னது எந்த ஆண்டு?”

“பெரியம்மா இறப்பதற்கு சில வருஷங்களுக்கு முன்னால்தான், ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்தது. வருடமோ, தேதியோ சரியாக நினைவில்லை. பெரியம்மா உயிருடன் இருந்திருந்தால், தற்போதைய சூழலில் அந்த விவரங்களையெல்லாம் நிச்சயமாகச் சொல்லியிருப்பார்கள்.’’

‘‘ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மையென்றால், அப்பா..?’’

‘‘அதுதான் உலகத்துக்கே தெரியுமே! ஷோபன்பாபுவுடன் ஜெயலலிதா ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தது. (சில பத்திரிகைகள்கூட ஜெயலலிதாவை ‘திருமதி’ என்று எழுதின. அதற்கு ‘என்னை எப்படி திருமதி என எழுதலாம்’ என்று வழக்குப் போட்டாரே?)”

‘‘சந்தியா குடும்பம்மீது உங்களுக்கு என்ன கோபம்?’’

‘‘எங்கள் மாமா ஜெயராம் இறந்ததில் சந்தேகம் இருப்பதாகவும், சந்தியாதான் மாமா ஜெயராமை ஏதோ செய்துவிட்டார்கள் என்றும், பெரியம்மா ஜெயலட்சுமியும், அம்மா சீதாலட்சுமியும் சொல்வார்கள். அதை, அவர்கள் உயிருடன் இருந்தவரை என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.’’

‘‘ஜெயராம் இயற்கையாக மரணம் அடையவில்லை எனச் சொல்ல வருகிறீர்களா?’’

‘‘அப்படிச் சொல்லவில்லை. ஆனால், எங்கள் தாய்மாமன் ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என அம்மா கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அதனால்தான், எங்கள் மாமாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் சந்தியா குடும்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.’’

‘‘சைலஜா என்பவர் யார்?’’

‘‘சந்தியாவின் மகள் எனச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் என் மாமா ஜெயராமுக்குப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. மாமா ஜெயராமுக்கு ஜெயலலிதாவும், ஜெயகுமாரும் மட்டுமே வாரிசுகள்.

‘‘பிறகு எப்படி அம்ருதாவுக்கு டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்?’’

‘‘அம்ருதா எனக்கு அறிமுகம் ஆனதே எங்கள் உறவுக்காரப் பெண் ரஞ்சனி ரவீந்திரநாத் மூலம்தான். அதுவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்துவந்து, ‘இவங்க பெயர் அம்ருதா. சைலஜாவுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அம்ருதாவை எடுத்து வளர்த்துள்ளார். அம்ருதாதான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று ரஞ்சனி ரவீந்திரநாத் கூறினார். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை... அது அம்ருதாவா என்று டி.என்.ஏ சோதனை செய்தால் தெரிந்துவிடும் என்றுதான் சொன்னேன்.’’

‘‘ஜெயலலிதாவின் மகள் குறித்த தகவல் அறிந்த வேறு யாரும் இருக்கிறார்களா?’’

‘‘எங்கள் குடும்ப உறவு முறையில் ஒருவருக்கு மட்டும் தகவல் அறிய வாய்ப்புள்ளது, அவர் எங்கள் பெரியம்மா ஜெயலட்சுமி மகன் ரங்காச்சாரி. அவர், பெங்களூரு ஒய்ட்ஃபீல்டில் குடியிருக்கிறார். அவர் அவ்வளவு எளிதாக யாரிடமும் பேசிவிட மாட்டார்.

ஜெயலலிதா எங்களோடு நெருக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், அவர் எங்கள் உறவினர். மறைந்துவிட்ட அவருக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதிக் காரியம் செய்யவேண்டும். அதை அவரின் மகள் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்.’’

- எம்.வடிவேல்