‘‘மதுபோதையில் நிகழ்ந்த முன்விரோதச் சண்டைக்குத் தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசி, வன்முறையைத் தூண்ட நினைக்கிறார்கள்’’ எனக் கவலையுடன் சொல்கிறது கடலூர் போலீஸ். ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்த விவகாரம், இப்போது சாதிய மோதலாக உருவகப்படுத்தப்படுகிறது.

சாத்தாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் நண்பர்களுக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த சிலம்பரசன், பூவரசன், சுப்பிரமணியன் ஆகியோருக்கும் மணல் லாரிகளிடம் மாமூல் வசூல் செய்யும் விவகாரத்தில் முன்விரோதம். மதுபோதையில் இவர்களுக்குள் தீபாவளியன்று இரவு தகராறு. சிலம்பரசன் கடுமையாகத் தாக்கப்பட்டார். துரைமுருகன், வினோத், ஆனந்தன் மூவர்மீதும் வழக்குப் போட்ட போலீஸ், துரைமுருகனைக் கைது செய்தது. மற்ற இருவரும் காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவிக்கப்பட்டனர்.

நவம்பர் 26-ம் தேதி மாலை மர்மமான முறையில் பலத்த தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட ஆனந்தன், சிகிச்சை பலனின்றி 28-ம் தேதி உயிரிழந்தார். ’என்னை சிலம்பரசன், பூவரசன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும்தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்’ என்று அவர் சொல்லும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. பா.ம.க-வும், வி.சி.க-வும் விவகாரத்தைக் கையில் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் பதற்றம்.

ஆனந்தன் தந்தை அரிகிருஷ்ணன், ‘‘திருக்கூடலையாற்றூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. மணல் எடுக்க வரும் லாரிகளிடம் அந்த மூவரும் மாமூல் வசூல் செய்வார்கள். இதைத் தட்டிக் கேட்டதால், என் மகனுக்கும் அவர்களுக்கும் தகராறு. ‘உன் மகனை ஊரை விட்டுப் போகச்சொல். அவனைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்’ என்று என்னிடமே கூறினார் சிலம்பரசனின் அப்பா. அப்படியே செய்துவிட்டார்கள்’’ என்றார்.

தலித் மக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘கோயில் கட்டுவதற்காக மணல் லாரிகளிடம் பணம் வசூல் செய்தது உண்மைதான். இது அனைத்துக் கிராமங்களிலுமே உள்ள நடைமுறைதான். இதுபோல அவர்களும்தான் வாங்குவார்கள். அந்தப் பையனேதான் தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு இங்கு ஓடிவந்து தீ வைத்துக்கொண்டான். அப்போது அவன் நண்பர்களும் உறவினர்களுமே இருந்தனர். எங்கள்மீது வீண்பழி சுமத்துகிறார்கள்’’ என்றனர்.

‘‘இது தற்கொலைதான். சம்பவம் நடந்த அன்றும் இருதரப்பும் குடிபோதையில் இருந்தனர். அப்போது ‘எங்களை உங்களால் என்ன செய்ய முடியும்’ என்று நக்கலாகப் பேசியிருக்கிறது சிலம்பரசன் தரப்பு. மதுபோதையில் இருந்த ஆனந்தன் உணர்ச்சிவசப்பட்டு தீ வைத்துக் கொண்டார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் விபத்துக் குறிப்பிலும் இப்படித்தான் வாக்குமூலம் தந்தார். அங்கிருந்து கடலூர் அழைத்துச் செல்லும்போது ஆம்புலன்ஸில் அவரின் நண்பர்கள் சொல்லித்தான் வாக்குமூலத்தை மாற்றினார். அதற்கு அவருடன் சென்ற போலீஸ்காரர் ஒருவரே சாட்சி’’ என்கிறது போலீஸ் தரப்பு.

கடலூர் மாவட்ட எஸ்.பி-யான விஜயகுமாரிடம் பேசினோம். “மருத்துவரால் பெறப்பட்ட விபத்து அறிக்கையில், தானே தீ வைத்துக்கொண்டதாக ஆனந்தன் தெரிவித்துள்ளார். அப்போது, அவரின் அண்ணணும் உடன் இருந்துள்ளார். தீப்பெட்டி, மண்ணெண்ணெயை ஆனந்தன் எங்கிருந்து எடுத்தார் என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம். வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ, அதன் பிறகு அவர்களின் உறவினர்களால் எடுக்கப்பட்டது” என்றார்.

‘‘மணல் குவாரியால் நிகழ்ந்த மோதல், சாதிய வன்முறையாக மாறாமல் உடனே தடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

- ஜெ.முருகன்
படம்: எஸ்.தேவராஜன்