Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

வகை வகையான லோன் மோசடிகள்!

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

வகை வகையான லோன் மோசடிகள்!

Published:Updated:
நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...
நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

ணத்தின் மீதுள்ள மக்களின் பேரார்வமும், பேராசையும்தான் லோன் தருவதாக மோசடி செய்பவர்களின் முதலீடு. வங்கிகளில், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தனிநபர் கடன் முதல் வீட்டுக்கடன் வரை வாங்கித் தருவதாகக்கூறி நடக்கும் மோசடிகள் மலைக்க வைக்கின்றன. இப்படி, ‘வங்கிகளின் முகவர்கள்’ என்ற அடையாளத்துடன் ஆயிரக்கணக்கானோர் செயல்படுகின்றனர். தூண்டில்போட இவர்களுக்கு வெரைட்டியான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

சிபில் டேட்டா!


ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் செல்போனைத் தவணை முறையில் வாங்கினீர்கள் என்றால், உங்களின் மொபைல் எண், பான் அட்டை விவரங்கள் எல்லாமே நிதி நிறுவனம் அல்லது வங்கியின் கடன் தகவலில் இடம்பெற்றுவிடும். அந்த நிதி நிறுவனமோ அல்லது வங்கியோ, உங்களின் கடன் வரலாற்றைக் கவனிக்கும் ‘சிபில்’ என்ற அமைப்புக்குக் கடன் விவரங்களை அனுப்பிவிடும். கடன் தவணையைப் பத்து மாதங்களில் ஒழுங்காக நீங்கள் கட்டிவிட்டால், ‘கடனை முறையாகச் செலுத்தியவர்’ என்று சிபில் உங்களைக் குறிப்பிடும்.

சிபில் டேட்டாவில் உள்ள உங்களின் மொபைல் நம்பருக்குத் தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் வரும், ‘இன்ஸ்டன்ட் லோன் பத்து லட்ச ரூபாய் வரை தரப்படும்’ என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். ‘‘24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் கடன் தருகிறோம். அதிக ஆவணங்கள் தேவை இல்லை’’ என்பார்கள். இந்த வலையில் விழுந்துவிட்டீர்கள் என்றால், அதுதான் அவர்களின் வெற்றி.

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

உடனே லோன்?

‘‘லோன் வாங்கித்தருகிறேன்’’ என்று உத்தரவாதம் கொடுப்பார்கள். ‘‘உங்கள் சம்பளம் எவ்வளவு?’’ என்று கேட்பார்கள். ‘‘மாதம் 20 ஆயிரம் ரூபாய்’’ என்று நீங்கள் சொன்னால், ‘‘இரண்டு லட்சம் ரூபாய் பர்சனல் லோன் கிடைக்கும்.அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது’’ என்பார்கள். தாங்கள்தான் அப்ரூவல் கொடுப்பவர்கள் என்பதைப் போலவே பேசுவார்கள். எத்தனை மாதத் தவணைகளில் திருப்பிக் கட்ட வேண்டும் என்பதைச் சொல்லி, உங்களுக்கு லோன் கிடைத்துவிட்டது என்பதுபோலவே பேசுவார்கள்.

ஆனால், விண்ணப்பம் வாங்கியபிறகு, ‘‘ஐயாயிரம் ரூபாய் கொடுங்கள். உங்களுக்கு உடனடியாக லோன் கிடைக்கும்’’ என்பார்கள்.பணத்தைக் கொடுத்துவிட்டால், அதன்பிறகு அவர்களைப் பிடிக்கவே முடியாது. இப்படிக் கொடுத்து ஏமாந்தவர்கள் அதிகம். தனியார் வங்கிகளின் பெயரைச் சொல்லித்தான், இப்படியான மோசடிகள் அதிகம் நடக்கின்றன. 

தனிநபர் கடன் தருவதற்காக எந்த வங்கியும் முன்கூட்டியே பணம் வாங்குவதில்லை. தனிநபர் கடன் அப்ரூவல் ஆனபின்னர், பிராசஸிங் கட்டணத்தை அதிலேயே பிடித்தம் செய்துகொண்டு, மீதித் தொகையைக் கடனாகத் தருவதுதான் நடைமுறை. எந்த ஒரு வங்கியிலிருந்தும் மொபைல் போன் மூலம் கூப்பிட்டு ‘கடன் தருகிறோம்’ என்று சொல்லமாட்டார்கள்.மொபைல் எண்ணிலிருந்து கூப்பிட்டு ‘லோன் தருகிறோம்’ என்று சொல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மொபைல் போனில் பேசுபவர்கள், வங்கி நியமித்திருக்கும் ஏஜென்சியின் ஆட்கள்தான். அவர்களின் வேலை, உங்களிடமிருந்து டாக்குமென்ட்களை கலெக்ட் செய்து கொடுப்பது மட்டுமே. ‘உங்களுக்குக் கடன் கிடைக்குமா, கிடைக்காதா’ என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

பளபள நோட்டீஸ்கள்!

ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களைக் குறிவைத்தே அதிகமான லோன் மோசடிகள் நடக்கின்றன. சென்னை தரமணி, பெருங்குடி பக்கம் மாலை வேளையில் போனால், ஐ.டி நிறுவனங்கள் முன்பு பள பள நோட்டீஸ்களுடன் சிலர் நிற்பார்கள். தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன் தருவதாகச் சொல்வார்கள். அவர்களில் 75 சதவிகிதம் பேர் வங்கியின் நேரடிப் பணியாளர்கள் கிடையாது. அவர்களிடம் உங்கள் நம்பரைக் கொடுத்துவிட்டால், உங்களுக்கு போன் மூலம் டார்ச்சர்கள் தொடங்கும்.

வீட்டுக்கடன் மோசடிகள்!

வீட்டுக்கடன் வாங்கித்தருவதாகச் சொல்லியும் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. பொதுத்துறை வங்கியில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அந்த வங்கியின் கிளை சென்னை, சைதாப்பேட்டையில் இருக்கிறது. வீட்டுக்கடன் கேட்டு அந்த வங்கியை அணுகினேன். வீட்டுக்கடன் பிரிவில் இருந்த அதிகாரி, பல்வேறு ஆவணங்களைக் கேட்டார். அந்த ஆவணங்களை வாங்க எனக்குப் பல நாள்கள் ஆகலாம். அவர் கேட்ட சில ஆவணங்களை என்னால் தர முடியாது.

ஆனால், அவரே எனக்கு ஒரு வழியைச் சொன்னார். ஆவணங்களைத் தயாரித்துத் தருவதற்கு ஒரு நபரை அவர் வைத்திருக்கிறார். அந்த நபரிடம் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும்... அவர் ஆவணங்களை ரெடி செய்து கொடுப்பார். ‘‘நீங்கள் எந்த நிறுவனத்திலும் வேலை பார்க்காவிட்டாலும்கூட, ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்கள், சம்பளச் சான்றிதழ் உள்பட தேவையான ஆவணங்கள் அனைத்தையும் ரெடி செய்து தருகிறேன்’’ என்றார். ‘‘இப்படி போலியான ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று மறுத்துவிட்டேன். இப்படியான போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து லோன் பெறுவதற்கு என்றே ஒரு நெட்வொர்க் இருக்கிறது.

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

நேரடியாக அணுகலாம்!

உங்கள் கடன் வரலாறு (சிபில் ரேட்டிங்) நன்றாக இருக்கும் பட்சத்தில், கடனுக்காக உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் வங்கியை நேரடியாக அணுகுவது சிறந்த வழி. உங்களுக்குக் கடன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற விவரத்தை முதல் சந்திப்பிலேயே சொல்லிவிடுவார்கள். பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் கடன் தருவதாக விளம்பரம் செய்வார்கள். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும்; மற்றவர்களுக்குக் கிடைக்காது. தனியார் வங்கிகளில் கடன் தருவார்கள். ஆனால், முறையான ஆவணங்கள், திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள். கடன் பெறுவதற்கு நேரடியாக வங்கி அதிகாரிகளை மட்டுமே அணுக வேண்டும்.

இணையதளத்தில்


இப்போது, அனைத்து தனியார் வங்கிகளும், இணையதளம் வழியாகவே லோன் விண்ணப்பங்களைப் பெறுகின்றன. இணையத்திலேயே பிராசஸிங் செய்கின்றன. எனவே, எந்த வங்கியில் கடன் தேவையோ அந்த வங்கியின் இணையதளப் பக்கத்தில் சென்று பதிவுசெய்தால், உங்கள் கடன் விண்ணப்பம் ஏற்கப்படும். தகுதி இருந்தால், எந்த டார்ச்சரும் இல்லாமல் கடன் கிடைக்கும்.

- கே.பாலசுப்பிரமணி

ஆதார் விளையாட்டு!

நிதி மோசடி ஜூனியர்: தினமும் போன்... பளபளக்கும் நோட்டீஸ்...

‘வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என்ற உத்தரவு போலவே, ‘இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்களும் தங்கள் பாலிசிகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை வைத்து சிலர் சாமர்த்திய கேம் ஆடுகிறார்கள். எல்.ஐ.சி பாலிசி வைத்திருப்பவர்கள்தான் இந்தியாவில் அதிகம். ‘உங்கள் எல்.ஐ.சி பாலிசியை ஆதார் எண்ணுடன் இணைக்க இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்’ என நிறையப் பேருக்கு போனில் தகவல் போகிறது. இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பும் பலரின் பாலிசி தகவல்கள் திருடப்படுகின்றன. ‘எஸ்.எம்.எஸ் அனுப்பி ஆதார் எண்ணை இணைக்கும் வசதியை நாங்கள் இன்னும் ஏற்படுத்தவே இல்லை. இதை நம்பாதீர்கள், ஏமாறாதீர்கள்’ என எல்.ஐ.சி நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது.