Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை

நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை

மோசடி மன்னனின் தில்லாலங்கடி

குழந்தைகளுக்கான சட்டைகள் வெறும் 10 ரூபாய்தான்... பட்டுப் புடவை 100 ரூபாய்... 500 ரூபாய்க்கு வீட்டு உபயோகப் பொருள்கள்... ஒரு ஆண்ட்ராய்டு போன் எடுத்தால் இன்னொரு போன் இலவசம்... 100 ரூபாய்க்கு போனுக்கு ரீசார்ஜ் செய்தால்100 ரூபாய் நெட்கார்டு ஃப்ரீ... 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் பாக்குமட்டைத் தட்டு செய்யும் மிஷின்... கட்டிங் செய்துகொண்டால் ஃபேஷியல் ஃப்ரீ... ஃபேஷியல் செய்துகொண்டால் ஜீன்ஸ் பேன்ட் ஃப்ரீ... பெண்கள் ஃபேஷியல் செய்துகொண்டால் 1,000 ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட் ஃப்ரீ... இப்படி சிவக்குமார் செய்யாத தொழிலே கிடையாது. அனைத்திலும் ‘ஃப்ரீ ’யால் மக்களை மயக்கினார். அதற்காக, ஒவ்வொரு ஸ்கீம் ஆஃபரின்போதும் நடிகர், நடிகைகளைக் கூப்பிட்டு அமர்க்களப்படுத்தினார்.

சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி என ஐந்து மாவட்ட மக்களைத் தன் வசப்படுத்தி 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்ததோடு, பல பெண்களையும் மோசம் செய்து, தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ‘வின் ஸ்டார் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.

நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை

வின் ஸ்டார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களிடம் விசாரித்தோம். ‘‘சிவக்குமாரின் சொந்த ஊர் பழனி அருகேயுள்ள தாராபுரம். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தாராபுரத்தில் ஒரு ஜவுளிக்கடைக்கு வேலைக்குச் சென்றார். கடையின் உரிமையாளர் மரணம் அடைய, அவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடங்களிலேயே மண வாழ்க்கையை முறித்துக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக சேலம்  வந்து செட்டில் ஆனார். ஓமலூர் அருகே சிறிய அளவில் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். பிறகு, வின்னர்ஸ் இந்தியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பார்ட்னராகச் சேர்ந்து, சேலம் பொறுப்பாளராக ஆனார்.

2007-ல் அங்கிருந்து பிரிந்துவந்து சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே ‘வின் ஸ்டார் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கல்லூரி முடித்த இளம்பெண்கள், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினார். அப்ரூவல் இல்லாத விவசாய நிலங்களில் பிளாட் போடுவது இவரின் ஸ்டைல். ‘ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கட்டினால், மாதம் பத்தாயிரம் திருப்பிக் கொடுப்பதோடு, 11-வது மாதத்தில் முழுத் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்; கூடவே நிலத்தையும் கிரயம் செய்துகொள்ளலாம்’ என ஆஃபர் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். நிலத்தின் மதிப்புக்கு ஏற்றபடி, ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை முன்பணம் வாங்கினார். ஒரு பிளாட் வாங்கினால் இன்னொரு பிளாட் இலவசம் என்றும் அறிவித்தார்.

‘ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் 100-வது நாளில் ஒண்ணரை லட்சம் பெற்றுக்கொள்ளலாம்’ என்று கவர்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்தார். வெளிநாடுகளில் வேலைசெய்து பணம் அனுப்பியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வுத்தொகை வாங்கியவர்களும் பெருமளவு டெபாசிட் செய்தனர். இந்த ஸ்கீமில் மட்டும் குறைந்தது 50 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்தது. வின் ஸ்டார் லோக்கல் கேபிள் சேனல் தொடங்கி, 24 மணி நேரமும் சிவக்குமார் நேரடியாகத் தோன்றி, தொழில் ஆஃபர்களை அள்ளிவிட்டு ஏகப்பட்ட கலெக்‌ஷனை அள்ளினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை

‘டி.வி-யில் அவர் பேசுவதைக் கேட்டு அவரின் ரசிகையானேன். ஆனால், என்னை பாலியல் பலாத்காரம் செய்து மோசம் செய்துவிட்டார்’ என்று கெளசல்யா என்பவர் போலீஸில் புகார் தந்தார். 50 வயதைக் கடந்த சிவக்குமார்மீது இதுபோல பல புகார்கள். அனைத்தையும் பணத்தால் சரிக்கட்டினார். இப்போது, கம்பி எண்ணுகிறார்’’ என்றனர்.

பொதுமக்களிடம் சுமார் 400 கோடி ரூபாய்க்குமேல் சிவக்குமார் ஏமாற்றியிருப்பதால், இந்த வழக்கை சேலம் காவல்துறைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரிக்கிறது.

சிவக்குமாரிடம் தொழில் கற்றுக்கொண்ட இன்னொருவர், இப்போது சேலம் நான்குரோட்டில் நிறுவனம் தொடங்கியிருக்கிறார். வின் ஸ்டார் நிறுவனத்தில் வேலை செய்த பலரும் இப்போது இங்கு வேலை பார்க்கிறார்கள். சிவக்குமார் போலவே இவரும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறார். சேலம் மக்கள் அடுத்த ரவுண்டு ஏமாற ரெடியாகி வருகிறார்கள்.

- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்

நிதி மோசடி ஜூனியர்: ஒரு ப்ளாட் வாங்கினால் இன்னொன்று இலவசம்... 100 ரூபாய்க்கு பட்டுப்புடவை... 10 ரூபாய்க்கு சட்டை

பிரதமரால்  அதிகமாச்சு!

வ்வோர் ஆண்டும் இந்தியாவில் போலி சான்றிதழ்கள் கொடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்றிப் பெறப்படும் இழப்பீடு, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய். இதில் சுமார் 85 முதல் 90 சதவிகித மோசடிகள் கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. ஒரு லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய்க்குள் அடங்கும் இழப்பீடு விஷயங்களில்தான் அதிகம் மோசடிகள் நடக்கின்றன. எல்லோருக்கும் ஆபத்து கால இழப்பீடு தரும் திட்டங்களை நல்லெண்ணத்தோடு பிரதமர் மோடி ஆரம்பித்தார். ஆனால், அதற்குப்பிறகுதான் மோசடிகள் அதிகமாகியுள்ளன.