Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்!

நிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்!
பிரீமியம் ஸ்டோரி

நிதி மோசடிகளுக்கு தனிநபர்கள் மட்டுமே இலக்கு அல்ல; வங்கிகளும்தான். 2016-17-ம் நிதியாண்டில், இந்தியாவின் 76 வங்கிகள் சந்தித்த நிதி மோசடிகள் 5,076. (இது, ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமான இழப்புகளைச் சந்தித்த மோசடிகளின் லிஸ்ட்) தெரிந்தோ, தெரியாமலோ மோசடி மன்னர்களிடம் வங்கி அதிகாரிகளும் ஏமாறுகிறார்கள். இந்த மோசடிகளில் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு, ரூ.16,788 கோடி. அதிகம் இழப்பைச் சந்தித்தது பாரத ஸ்டேட் வங்கி. 544 மோசடிகளில் அந்த வங்கி இழந்தது, ரூ.1,913 கோடி. அதிக மோசடிகளைச் சந்தித்தது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. 688 மோசடிகளில் அது, ரூ.368 கோடியை இழந்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இது. இந்த மோசடிகளில் சுமார் 450 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.இன்னொருபுறம், வங்கிகள் கொடுத்த கடன் திரும்பிவராமல் இருக்கும் நிலையும் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கணக்கின்படி, இந்திய வங்கிகளின் வாராக்கடன், ரூ.6,06,911 கோடி. இவற்றைக் ‘கெட்ட கடன்’ என்கிறார்கள். காலப்போக்கில் இவற்றைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு, இந்தப் பணம் திரும்பி வராமலே போகலாம். 

நிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோசடிப் பேர்வழிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ‘புரிந்துணர்வை’ அம்பலப்படுத்துகிறார், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாசின். ‘‘நிதி மோசடிகளில் 80 சதவிகிதம் பாதிக்கப்படுவது பொதுத்துறை வங்கிகள்தான். 15 சதவிகித பாதிப்பு தனியார் வங்கிகளுக்கு ஏற்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும்கூட பாதிக்கப்படுகின்றன.சிறந்த வங்கி அதிகாரி ஒருவரால், ‘யார் நல்லவர், யார் ஏமாற்றுக்காரர்’ என்பதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்’’ என்கிறார்.

நிதி மோசடி ஜூனியர்: வங்கிகளின் கெட்ட கடன்... 6 லட்சம் கோடி ரூபாய்!

‘‘இந்திய வங்கிகளில் நிகழ்ந்த டாப் 10 நிதி மோசடிகளை ஆராய்ந்தோம். எல்லாவற்றிலுமே, ‘இவருக்குக் கடன் வாங்கி ஏமாற்றுவதே நோக்கம்’ என்பதை உணர்த்தும் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன. ஆனால், அதைமீறிக் கடன் கொடுத்திருக்கிறார்கள்’’ என்கிற பாசின், விஜய் மல்லையாவை உதாரணமாகக் காட்டுகிறார். ‘‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பெயரில் வாங்கிய கடனைப் பல்வேறு செலவுகளுக்கு அவர்கள் திருப்பிவிட்டார்கள். அவற்றிலிருந்து லாபம் வராது எனத் தெரிந்தும் இதைச் செய்தார்கள். வங்கிகள் இதைக் கண்காணிக்கத் தவறின’’ என்பது பாசின் சொல்லும் குற்றச்சாட்டு. வங்கிகள்மீது இப்படி குற்றச்சாட்டு எழக் காரணமானவர்கள், சொகுசு வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- ந.பா.சேதுராமன்