Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

கண்ணீர் வடிக்கும் சாமானியர்கள்

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

கண்ணீர் வடிக்கும் சாமானியர்கள்

Published:Updated:
நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”
நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

ங்கையின் திருமணம், அம்மாவின் இதய ஆபரேஷன், குழந்தைகளின் படிப்புச் செலவு என அதிமுக்கியமான செலவுகளுக்காக சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்திருந்தனர் ஆயிரக்கணக்கான அப்பாவிகள். மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு கம்பிநீட்டிவிட்டது ‘திரிபுரா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிதி நிறுவனம்.

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பசவராஜ் உபின். இவர் தன் நண்பர்களான சுமன்னா, கிருஷ்ணபிரசாத் வெங்கட்ராவ் பெரும்புடே, வேணு உள்பட ஏழு பேருடன் இணைந்து ‘திரிபுரா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனத்தை 2003 ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் தொடங்கினார்.

‘சீட்டுத் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ. 500 முதல் ரூ. 50,000 வரை 20 மாதங்களுக்குத் தவணை முறையில் செலுத்தினால், இரு மடங்காகப் பணம் திருப்பித் தரப்படும், ஊக்கத்தொகை அளிக்கப்படும்’ எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசினர். முதலீடு குவிந்தது.

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 150-க்கும் மேற்பட்ட கிளைகளைத் திறந்து வசூல் வேட்டை நடத்தினர். இந்த நிறுவனத்தில், இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, தமிழகத்தில் செயல்பட்டுவந்த பல கிளைகள் மூடப்பட்டன. இதனால், முதலீடு செய்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அருணாச்சலம், “ஒண்ணரை லட்சம் ரூபாய்க்குச் சீட்டு போட்டிருந்தேன். முதிர்வுத்தொகை வாங்க வேண்டிய நேரத்துல, அலுவலகத்தைக் காலி பண்ணிட்டாங்க” என்றார் சோகத்துடன்.

திருவெறும்பூரைச் சேர்ந்த மதினா பானு, “முதிர்வுத்தொகையை வட்டியும் முதலுமா  கொடுக்கிறோம்னு சொல்லி ‘செக்’ கொடுத்தாங்க. அதை வங்கியில போட்டேன். பணம் இல்லைனு திரும்பி வந்திடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்தை ஏமாத்திட்டாங்க” என்றார் கண்ணீருடன்.

திருச்சியில் பாதிக்கப்பட்டவர் களின் புகார்கள்மீது திருச்சி தில்லைநகர் போலீஸார் விசாரணை நடத்தினர். 135 நபர்களுக்கு சுமார் 2 கோடியே 17 லட்சம் ரூபாயைத் திருப்பி தராமல் பொதுமக்களை ஏமாற்றியதாக, திரிபுரா சிட்பண்டு நிறுவனத்தின் சென்னை மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணபிரசாத், பொது மேலாளர் தீனதயாளன், மண்டல மேலாளர் ராகவன், கோட்ட மேலாளர் சசிகுமார், திருச்சி கிளை மேலாளர் மோகன்ராஜ், துணை மேலாளர் திருநாவுக்கரசு, முகவர் கார்த்திக் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து, சிலரைக் கைதுசெய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தால் கோவையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், “என் தங்கச்சி கல்யாணத்துக் காக 50,000 ரூபாய்க்குச் சீட்டு போட்டிருந்தேன். எனக்கு எப்போது பணம் தேவையோ, அன்றைய தேதியைப் போட்டு முன்கூட்டியே ‘செக்’ கொடுத்துட்டாங்க. ஆனா, ‘செக்’ ரிட்டர்ன் ஆயிடிச்சு. ஆபீஸ்ல போய்க்கேட்டதுக்கு, ‘ஃபண்டு பிராப்ளம். கொஞ்சம் பொறுத்துக்கோங்க’னு சொன்னாங்க. அடுத்த நாளே ஆபீஸை இழுத்துப் பூட்டிட்டாங்க” என்று கண்கலங்குகிறார்.

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

“என்னோட ரெண்டு வருஷ உழைப்பு மொத்தமும் போசக்சுங்க. நாலு லட்சம் ரூபாய்க்கு, மூணு சீட்டு போட்டிருந்தேன். எல்லாத்துலயும் முக்கால்வாசி பணத்தைக் கட்டிட்டேன். இப்போ திடீர்னு காணாம போயிட்டாங்க. எனக்குப் பைத்தியமே பிடிச்சுரும் போலிருக்கு” என்று பதற்றத்துடன் பேசினார் மேரி.

 கோவை ஜி.ஹெச் அருகே இருக்கும் திரிபுரா சிட்ஸ் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு, எந்தப் பொருளும் இல்லை.

 சிதம்பரத்தில் செயல் பட்டுவந்த திரிபுரா சிட்ஸ் அலுவலகத்தை நவம்பர் 7-ம் தேதி மக்கள் அடித்துநொறுக்கினர். பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கிய காவல்துறை, இதுவரை வழக்கு எதுவும் பதியவில்லை. பாதிக்கப் பட்ட துரை, “என் பொண்ணு படிப்புச் செலவுக்கு ஆகும்னு ஒரு லட்சம் ரூபாய் சீட்டுக் கட்டினேன். மொத்தமாக சுருட்டிட்டுப்போயிட்டாங்க. போலீஸும் அவங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கு” என்றார் சோகத்துடன்.

 திரிபுரா சிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணபிரசாத், “கடந்த 14 ஆண்டுகளாக எந்தக்  குறைபாடும் இல்லாமல் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் கொடுக்க வேண்டிய தொகையைவிட வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகை அதிகம். கடந்த சில மாதங்களாகச் சீட்டு எடுத்தவர்களிடமிருந்து நிலுவைத் தொகை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெயரில் 60 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

டிசைன் டிசைனாக ஏமாற்றினாலும், இன்னும் ஏமாறக் காத்திருப்பதுதானே இங்கு வழக்கம்!

- சி.ய.ஆனந்தகுமார், எம்.புண்ணியமூர்த்தி, பூபாலன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எஸ்.தேவராஜன், க.விக்னேஷ்வரன்

நிதி மோசடி ஜூனியர்: “செக் எல்லாம் ரிட்டர்ன் வருது!”

அதிகம் நடப்பது மோசடிதான்!

போ
தை மருந்து கடத்தல், தங்கக் கடத்தல், ஆயுதக் கடத்தல், நிதி மோசடி எனப் பலவிதமான வழக்குகளை அமலாக்கப் பிரிவு விசாரிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதார வலிமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் அத்தனை நிழல் சமாசாரங்களையும் விசாரிப்பது அமலாக்கப் பிரிவின் வேலை. ஆனால், இவர்கள் விசாரணையில் அதிகம் சிக்குவது போதை மருந்து விவகாரமோ, தங்கக் கடத்தலோ இல்லை. அமலாக்கப் பிரிவின் விசாரணையில் இருப்பவற்றில் 74 சதவிகித வழக்குகள் நிதி மோசடி தொடர்பானவைதான்.