Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!
பிரீமியம் ஸ்டோரி

ம்பது ரூபாய் பாத்திரச்சீட்டு மோசடியில் தொடங்கி, ரூ. 5 ஆயிரம் கோடி சுருட்டிய பாஸி போரெக்ஸ் நிறுவன மோசடி வரை விதவிதமான நிதி மோசடிகளுக்குப் பஞ்சமில்லாத இடம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள். ஆசைகாட்டி மோசம் செய்யும் சில நிறுவனங்கள்மீது வழக்கு தொடர்ந்துள்ள கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபி.தளபதி, சில லேட்டஸ்ட் மோசடிகள் குறித்து நம்மிடம் விவரித்தார்...

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!
நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பம்புசெட் மோசடி!

‘‘வறட்சியில் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்ற அரசு, மானியத்துடன் ஆழ்துளைக்கிணறு அமைத்துக் கொடுக்கிறது. அத்துடன் பம்புசெட் பொருத்தி, மும்முனை மின்சார இணைப்பும் பெற்றுத் தரப்படும். உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு நாங்களே ஏஜென்ட்’’ - இப்படிச் சொல்லி, ‘தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் ஒன்றியம்’ என்ற பெயரில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சத்தியமங்கலம் சீனிவாசன் என்பவர் ஆபீஸ் போட்டார். 

விஷயம் காட்டுத்தீயாகப் பரவ, விவசாயிகள் வரிசை கட்டி நின்று, ஆளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தனர். பணம் குவியவே, தர்மபுரி, சங்ககிரி, மோகனூர், அரூர், ஊத்தங்கரை என்று அடுத்தடுத்து கிளைகளையும் திறந்தார் சீனிவாசன். மாதங்கள் கடந்தும் ஒரே ஒரு போர்வெல்கூடத் தோண்டவில்லை. சந்தேகப்பட்ட சிலர், போலீஸ் ஸ்டேஷன் போனார்கள். டெபாசிட் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.15 ஆயிரத்துக்கு சீனிவாசன் செக்  கொடுத்தார். அக்கவுன்ட்டில் பணம் இல்லாமல், அவை திரும்பி வந்த நாளில், சீனிவாசன் எஸ்கேப்.

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

கொப்பரை டாட் காம்!

ஈமுக்கோழி மோசடியை வெர்ஷன் மாற்றிச் சிலர் ஆரம்பித்த அலப்பறைத் திட்டம், ‘கொப்பரை டாட் காம்’. இதில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் போதும். மாதம் 2,000 தேங்காய்கள் உங்கள் வீடுதேடி வரும். அவற்றை உடைத்து, பருப்பைத் தோண்டி, காய வைத்து கொப்பரையாக்கிக் கொடுக்கவேண்டும். குறைந்தபட்சம் 300 கிலோ கொப்பரை கிடைக்கும். கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வழங்கப்படும். இப்படி 3,000 ரூபாய், 2 லட்சம் ரூபாய்க்கு 5 சதவிகிதம் வட்டி கணக்கிட்டு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்று ஆகமொத்தம் 2 லட்சம் முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 13 ஆயிரம் ரூபாய்.

பேராசையில் ஒரே நபர் 20 லட்சம் டெபாசிட் செய்த கதையெல்லாம் இங்கும் உண்டு. ஒருகட்டத்தில், சொன்ன வட்டியைக் கொடுக்க முடியாமல் கொப்பரை டாட் காம் கம்பெனிகள் மூடப்பட்டன.

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

ரூ.342 கோடி வந்துவிழும்!

‘‘வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் எங்கள் கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கிறது. அதை வைத்து, கிரானைட், கார்மென்்ட்ஸ், தோல் தொழில், கன்ஸ்ட்ரக்‌ஷன், தகவல் தொழில்நுட்பம், சினிமா தயாரிப்பு, பொழுதுபோக்கு சேனல், ஒருங்கிணைந்த மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், விவசாயம்சார்ந்த தொழில் உள்பட 12 கம்பெனிகளை ஆரம்பிக்கவுள்ளோம். எது உங்களுக்கு உகந்ததோ, அந்தத் தொழில் நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரர் ஆகலாம்.

அதற்கு நீங்கள், எங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி உறுப்பினராக வேண்டும். அதிலிருந்து 45-வது நாளில், உங்கள் வங்கிக்கணக்கில் முதற்கட்டமாக ரூ. 42 லட்சம் வந்து விழும். நீங்கள் நிறைய நபர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துவிடும் பட்சத்தில், இந்த நிறுவனங்களில் ஒன்றில் உங்களை இயக்குநர் ஆக்குவோம். அப்போது, உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.342 கோடி வந்துவிழும். அதைத் தொழிலுக்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். ஆனால், ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி வழங்கப்படும். அதைச் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தலாம்.’’

இப்படியான பிரசாரத்துடன், சதுரங்க வேட்டையைத் தொடங்கியுள்ள ஒரு கும்பல், சுவையான மதிய உணவுடன் உயர்தர ஹோட்டல்களில் பலியாடுகளை அழைத்து மீட்டிங் நடத்துகிறது.

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

ஓடும் காரில் டீலிங்!

 ‘‘மின்னல் தாக்கும் கோயில் கோபுரக் கலசங்கள் இரிடியமாக மாறுகின்றன. இது, அபூர்வ சக்தி வாய்ந்தது. ராக்கெட்டை இயக்கும் அளவுக்கு ஆற்றல் உடையது. இதற்கு, வெளிநாட்டில் ஏகப்பட்ட கிராக்கி. இதை, ஏழாயிரம் கோடி ரூபாய் வரை விலைகொடுத்து வாங்க வெளிநாட்டினர் அலைகிறார்கள்.’’

நிதி மோசடி ஜூனியர்: கொப்பரை டு கோபுரக் கலசம்! - பலே... சதுரங்க வேட்டைகள்!

இப்படியான தகவல்களுடன் ஆள்பிடிக்கும் வேலையில் ஒரு கும்பல் இயங்கிவருகிறது. இந்தக் கும்பலுக்கு ஆபீஸ் எல்லாம் கிடையாது. ஓடும் காரில்தான் எல்லா டீலிங்கும் நடக்கும். ‘ஒரிஜினல் இரிடியக் கலசம்தானா’ என்று எப்படிக் கண்டுபிடிப்பது...அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது ‘ரைஸ்புல்லிங்’ பரிசோதனை. கைநிறைய அரிசியை அள்ளி, இரிடியக் கலசத்தின் அருகில் கொண்டுசெல்ல வேண்டும். அந்த அரிசி, காந்தம்போல் விரைந்து சென்று கலசத்தில் ஒட்டிக்கொள்ளவேண்டும். அதுதான், ஒரிஜினல் இரிடியம். சில லட்சங்களை வாங்கிக்கொண்டு, கோயில் கலசத்தை ரகசியமாக விற்றுவிட்டு அந்தக் கும்பல் பறந்துவிடும்.

ஜாக்கிரத மக்கழே!

- ஜி.பழனிச்சாமி