Published:Updated:

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

Published:Updated:
நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்
நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

10 கோடிக்கு ஒரே செக்!

தூய வெண்மையில் நேர்த்தியான உடை... நுனிநாக்கு ஆங்கிலம்... இதுதான் திருவாரூர் சக்திவேல். கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களைக் குறிவைத்து ‘கிரீன் இண்டியா’ என்ற திட்டத்துடன் வந்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்களே இவரின் இலக்கு. ‘ஒரு லட்ச ரூபாய் கட்டினால் ஒரு கோடி ரூபாய் லோன் கிடைக்கும். இரண்டு லட்சம் ரூபாய் கட்டினால் இரண்டு கோடி ரூபாய் வரை லோன் கிடைக்கும்’ என்பதே சக்திவேலின் தில்லாலங்கடித் திட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

இவரது பேச்சில் மயங்கிய போச்சம்பள்ளி பூங்காவனம், அரசம்பட்டி சங்கீதா, கோணனூர் ருத்ரா ஆகியோர், 27 மகளிர் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அந்த மகளிர் குழுக்களிடமிருந்து சுமார் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துகொண்டு சக்திவேல் எஸ்கேப்.

போச்சம்பள்ளியைச் சேர்ந்த அமுதா, ‘‘சக்திவேல் பேச்சைக் கேட்டு நம்பி 5 லட்சம் ரூபாயைக்  கொடுத்தேன். உரிய காலத்தில் கடன் கிடைக்கவில்லை. நண்பர்களுடன் சென்று அவரிடம் பணம் கேட்டேன். உடனே எங்கள் டிரஸ்ட்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு ‘செக்’ கொடுத்தார். அந்த ‘செக்’ பவுன்ஸ் ஆகிவிட்டது. பிறகு, 5 லட்சத்துக்கு மட்டும் செக் கொடுத்தார். அதுவும் பவுன்ஸ் ஆகிவிட்டது’’ என்றார்.

- எம்.வடிவேல்

மானியத்தோடு மத்திய அரசு கடன்!

பிரதமர் பெயரைச் சொல்லி, ஒரத்தநாடு பகுதியில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளது ஒரு கும்பல்.

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

பீப்புள் ஃபார்ம் ஆப் இந்தியா என்ற பெயரில் அலுவலகம் திறந்தது ஒரு கும்பல். 18 ஆயிரம் ரூபாய் டெபாசிட் வாங்கிக்கொண்டு நிறைய பெண்களை வேலைக்குச் சேர்த்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் என்றனர். ‘பாரதப் பிரதமரின் திட்டத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடன் தருகிறோம்’ என்றனர். 30-க்கும் மேற்பட்ட பெண்களை நோட்டீஸ்களுடன் கிராமங்களுக்கு அனுப்பி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வசூலித்தனர்.

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

‘15 நாள்களில் அரசு வங்கிகளில் கடன் பெற்றுத் தரப்படும்’ என உறுதி அளித்தனர். ஒரத்தநாட்டில் ஒரு வீட்டில் ஆபீஸ் போட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அங்கு அழைத்துச் சென்று பணம் கட்ட வைத்தனர். வங்கிகளில் சிலர் விசாரித்தபோது, அப்படியொரு திட்டமே கிடையாது என்பது தெரியவந்தது. மக்கள் உஷாராவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டனர். பணிபுரிந்த பெண்களுக்கும் சம்பளம் இல்லை.

- ஏ.ராம்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

முதலில் சிக்குவது ஏஜென்ட்கள்தான்!

திக வட்டி தருவதாகச் சொல்லும் நிதி நிறுவனங்களை நடத்தும் மோசடிப் பேர்வழிகள் பாதுகாப்பாக எஸ்கேப் ஆகிவிடுவார்கள். சிக்குவது, இவர்களுக்கு ஏஜென்ட்டுகளாக இருந்தவர்கள்தான். தூண்டிலில் முதலில் விழுவது இவர்கள்தான். காரணம், கமிஷன் அப்படி. ஆயிரம் ரூபாய் வசூலித்தால் 300 ரூபாயை ஸ்பாட்டிலேயே ஏஜென்ட் எடுத்துக்கொள்ளலாம். ஃபிக்சட் டெபாசிட் ஒரு லட்சம் பிடித்துக் கொடுத்தால், 30 ஆயிரம் ரூபாய் கமிஷன். ‘எப்படி கட்டுப்படியாகும்’ என்ற கேள்வி இவர்களுக்கு வருவதில்லை. பெரிய ஹோட்டலில் பார்ட்டி, வட இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா என்று திணறடிப்பதில் மயங்கும் ஏஜென்ட்டுகள், முதலில் தங்கள் சொந்தபந்தம், நண்பர்கள், ஊர்க்காரர்கள் அனைவரையும் முதலீட்டாளர்களாக்கி விடுவார்கள். கடைசியில் கம்பெனி கம்பி நீட்டியதும், மக்களிடம் மாட்டிக்கொள்வது ஏஜென்ட்டுகள்தான். இதுபோன்ற மோசடி நிறுவனங்களுக்கு ஏஜென்ட் பிடிக்கும் கூட்டங்கள் பல ஹோட்டல்களில் நடக்கின்றன. 

- செ.சல்மான்

நிதி மோசடி ஜூனியர்: துணுக்குகள்

பெயர் வெச்சு ஏமாத்தினாங்க!

‘மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் இந்தியா லிமிடெட்’ , ‘மதுரை ரூரல் டெவலப்மென்ட் பெனிஃபிட் ஃபண்ட் இந்தியா லிமிடெட்’ (சுருக்கமாக எம்.ஆர்.டி.டி) என்ற இரண்டு பெயர்களில் மதுரையில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதுபோல, ‘நீளமாகப் பெயர் வைத்து, அதில் ‘இந்தியா’ என்ற வார்த்தையும் இருந்தால் அது நம்பிக்கையான நிறுவனம்’ என ஒரு நினைப்பு. இந்த நம்பிக்கையோடுதான், இந்த இரண்டு நிதி நிறுவனங்களை சுரேஷ்பாட்சா, ராமரத்தினம் உள்பட சிலர் நடத்தினர். தமிழகம் முழுக்க 17 கிளைகளைத் திறந்து மக்களிடம் டெபாசிட் வாங்கினர். வட்டியை மட்டுமல்ல, அசலையும் திருப்பிக் கொடுக்காமல் அலையவிட்டனர். இவர்கள்மீது புகார்கள் கிளம்பவும், இவர்கள் நிதி நிறுவனம் நடத்த ரிசர்வ் வங்கி தடைபோட்டது. இவர்களின் வங்கிக்கணக்கையும் முடக்கியது. இவர்கள் வாங்கிப்போட்ட 300 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தியது. இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தோ, என்னவோ, இதன் இயக்குநர்கள் கோடிக்கணக்கான பணத்தை சேஃபாகப் பதுக்கிவிட்டனர்.

- செ.சல்மான்