மத்தியப்பிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில் உள்ள நவகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபாதின் பைகா என்பவர்தான் இந்த அரிய சாதனையைப் படைத்திருக்கிறார். காரணம், இன்ஷுரன்ஸ்.
வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்காக, ‘பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற இன்ஷூரன்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். ‘ஜன் தன்’ எனப்படும் ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கு ஆரம்பித்துள்ள ஏழைகள், ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம் கட்டினால் போதும்... இவர்கள் விபத்தில் இறக்க நேரிட்டால், இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும். வங்கிக்கணக்கிலிருந்தே இந்த பிரீமியம் பிடித்தம் செய்யப்பட்டு விடும். இதை வைத்து மோசடி செய்ததாக, கிராமப் பஞ்சாயத்து அதிகாரி, வங்கி மேலாளர், பைகாவின் மனைவி ஆகியோர் இந்த வாரம் கைது செய்யப் பட்டுள்ளனர்.

நடந்தது இதுதான்... 2016 நவம்பர் 20-ம் தேதி பாபாதின் பைகா இறந்துவிட்டார். அவருக்கு இறப்புச் சான்றிதழையும் கிராமப் பஞ்சாயத்து அதிகாரி கொடுத்துவிட்டார். அவர் இறந்து இரண்டு வாரம் கழித்து, டிசம்பர் 6-ம் தேதி... கரோந்தி என்ற ஊரில் இருக்கும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில், அவர் பெயரில் ஜன்தன் வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதிலேயே பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷ்யூரன்ஸ் பிரீமியமும் பிடித்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 16-ம் தேதி பாபாதின் பைகா இறந்துவிட்டதாக ஒரு போலி இறப்புச் சான்றிதழ் ரெடி செய்து, இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு கேட்கிறார் பைகாவின் மனைவி.
ஆனால், ‘பாலிசி எடுத்த பத்தே நாள்களில் மரணம் நிகழ்ந்துள்ளது’ எனக் காரணம் சொல்லி, இழப்பீடு தராமல் நிராகரிக்கிறது இன்ஷூரன்ஸ் நிறுவனம். அதன்பின்னும் யாரும் அசரவில்லை. 10 நாள்களில்தானே கேட்கக்கூடாது? ‘பாபாதின் பைகா ஜனவரி 20-ம் தேதி இறந்தார்’ என மூன்றாவதாக இன்னொரு இறப்புச் சான்றிதழ் வாங்கி, இழப்பீட்டுக்கு விண்ணப் பித்தார், அவரின் மனைவி. இந்த முறை இரண்டு லட்சம் கிடைத்துவிட்டது. விஷயம் தாமதமாக இப்போதுதான் போலீஸ் காதுகளுக்குப் போய், வழக்கு போட்டிருக்கிறார்கள்.
‘இந்தியாவின் 80 மாவட்டங்களில் இப்படி போலியாக இழப்பீடு கேட்கும் வழக்கம் அதிகம் உள்ளது’ என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிளாக் லிஸ்ட் போட்டு வைத்துள்ளன. தவறான இறப்புச் சான்றிதழ் மட்டுமில்லை, ஊரிலேயே இல்லாத ஆளை ‘இறந்துவிட்டார்’ என்று கணக்குக் காட்டி இன்ஷூரன்ஸ் பெறுவதும் உண்டு. சாகக் கிடக்கிற நபர்களின் உறவினர்களிடம் டீல் பேசி, அந்த நபரின் பெயரில் பாலிசி எடுத்து, பிறகு கிடைக்கும் இழப்பீட்டைப் பங்கு போடுவதும் உண்டு. நிதி நிறுவனங்களை ஆரம்பித்துப் பலர் மக்களை ஏமாற்றுவது ஒரு பக்கம் என்றால், அதற்கு உல்டாவாக சிலர் செய்யும் மோசடி இது!
- எஸ்.உமாபதி