
பரிசுச்சீட்டு, பணச்சுழற்சி (MLM) மோசடி, ஏலச்சீட்டு மோசடி, தீபாவளி ஃபண்டு மோசடி, மளிகைப் பொருள்கள் மோசடி, நகைச்சீட்டு மோசடி, கடன் வாங்கித் தருவதாக முன்பணம் பெறும் மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி, ஆன்லைன் வர்த்தக மோசடி, குறுஞ்செய்தி மோசடி... இப்படி விதவிதமாக வலை விரிக்கும் மோசடி நிறுவனங்களிடமிருந்து தப்புவது எப்படி? தமிழ்நாடு காவல் துறை பொருளாதாரக் குற்றப்பிரிவு தரும் சில எச்சரிக்கை டிப்ஸ்:
* ரிசர்வ் வங்கியில், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங் களின் பெயர்கள் மற்றும் முகவரிகள், https://www.rbi.org.in/scripts/NBFC_Pub_lic.aspx என்ற இணையதளத்தில் உள்ளன.
* டெபாசிட் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிதி நிறுவனங்களின் பெயர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தவிர மற்ற நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து பணத்தை முதலீடாகப் (Deposit) பெற முடியாது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
* இதுபோன்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 12.5 சதவிகிதம் மட்டுமே வட்டி தரமுடியும்.
* இந்த நிதி நிறுவனங்கள், மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதற்காகப் பரிசுப் பொருள்கள், ஊக்கத்தொகை போன்றவை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
* முதலீடு செய்யப்படும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்பட வேண்டும். கடன் வாங்குவதாக இருந்தால், நீங்கள் கையெழுத்திட்ட கடன் ஒப்பந்த நகல் உங்களுக்குத் தரப்பட வேண்டும்.
* ‘மிக அதிக வருமானம் கிடைக்கும்’ என்று அளிக்கப்படும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.
*முதலீடுகளை வாங்கும் நிதி நிறுவனங்கள், அவற்றை எந்தவிதமான திட்டத்தில் முதலீடு செய்து, பணத்தைப் பெருக்கித் திருப்பித் தருகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். .
* முதலீடு செய்யும் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு அந்த நிறுவனத்துக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
* பரிசுச்சீட்டு, பணச்சுழற்சித் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

*அதிகாரபூர்வமற்ற நிதி நிறுவனங்கள், பணச்சுழற்சித் திட்டங்களை நடத்துவோர் பற்றி அந்தந்த மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் தெரிவிக்கலாம். சென்னையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவை 98405 84729; 044-22504332 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். கம்பெனி பெயர்/ஏரியா/புகார்தாரர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 75987 65105 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். தொடர்பு முகவரி: பொருளாதாரக் குற்றப்பிரிவு, பிளாக் 2, முதல் தளம், Sidco old corporate building, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.
இ- மெயில்: eowscambuster@gmail.com
- கனிஷ்கா