Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கோடிக்கணக்கில் வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கட்டாமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையாவின் கதை நமக்குத் தெரியும்தான். இப்போது லண்டனுக்கு அருகிலுள்ள டெவின் என்ற கிராமத்தில் வசிக்கும் மல்லையாவுக்கு உள்ளூர்வாசிகளிடம் ஆதரவு பெருகி வருவதாகச் செய்தி. ‘பந்தாவே இல்லாத ஆள், எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கிறார்’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்களாம். இதென்ன பிரமாதம்?அவர் திரும்பவும் இந்தியாவுக்கு வந்தால், இதைவிட வேற லெவல் விஷயங்களெல்லாம் நடக்கும்...

கம்பேரிஸன் கோவாலு!

•  அவர் இங்கு வந்து இறங்கிய முதல் நொடியே, ஆளாளுக்கு அவருடன் செல்ஃபி எடுக்க ஆளாய்ப் பறப்பார்கள். விமானப் பணிப்பெண்கள் தொடங்கி சாலையில் செல்பவர்கள் வரை எல்லோர் மொபைல்களிலும் மல்லையா சிரிப்பார். ‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை வைத்து சமூக வலைதளங்களை நிறைத்ததுபோல மல்லையாவுடன் எடுக்கும் செல்ஃபிக்களும் எண்ணிக்கையில் நீளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பக்தர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், மல்லையாவின் சொத்துப் பட்டியலைவிட நீளமாக ஒரு வாட்ஸ் அப்   ஃபார்வேர்டு டைப் செய்து அனுப்புவார்கள். ‘மல்லையா என்ற இந்தியத் தொழிலதிபர் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செய்யும் சதி’ என நீளும் அந்த மெசேஜையும் நான்கு பேர் நம்பி ஃபார்வேர்டு செய்துகொண்டிருப்பார்கள்.

• வழக்கம்போல, மல்லையாவுக்கு ஆதரவாகவும் ஒரு கோஷ்டி களமிறங்கும். ‘Savemallya.com’, ‘#InnocentMallya’ என விதவிதமான வெப்சைட்களும் ஹேஷ்டேக்குகளும் தூள் பறக்கும். இதையெல்லாம் பார்த்து மல்லையாவே நெகிழ்ந்து கண்ணீர் விடுவார்.

கம்பேரிஸன் கோவாலு!

• மல்லையா வீட்டு வாசலுக்கு வந்து, ‘‘இப்ப என்ன கெட்டுப்போச்சு? கொஞ்சம் லாஸ் ஆகிப் போச்சு. அவ்ளோதானே? இந்தாங்க அடுத்த லோன். இதை வெச்சு பிசினஸை லாபகரமா மாத்துங்க’’ எனச் சிரித்துக்கொண்டே கடன் தருவார்கள் வங்கி அதிகாரிகள் .

• மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதுவார். ‘மல்லையா - தொழிலபதிராகத் தோற்று, மனிதராக வென்ற ஒருவரின் கதை’ எனத் தெள்ளிய தமிழில் அதிகாரம் அதிகாரமாக எழுதப்படும் அந்தப் புத்தகத்தைப் படித்தால் மல்லையாவுக்கே, ‘இந்தப் புத்தகம் நிஜமாவே நம்மளை பத்திதானா?’ என்ற சந்தேகம் எழும்.

ஓவியம்: பிரேம் டாவின்சி