Published:Updated:

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

Published:Updated:
ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

மொத்தத் தண்ணீரையும் கர்நாடக அணைகளில் மடக்கிவிடுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வருவது அபூர்வம். அப்படி வந்தாலும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நிரம்புவது அதிசயம். அப்படி அதிசயமாக நிரம்பிய அணையில் ஷட்டர் உடைந்து, தண்ணீர் வெளியேறிய அவலம் நிகழ்ந்துள்ளது. அணையைக் கட்டியதற்கு ஆன செலவைவிட, அதிக செலவில் சீரமைத்த பிறகு, இது நிகழ்ந்திருப்பதுதான் வேதனை.

நவம்பர் 29-ம் தேதி இந்த அணையில் 52 அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியபோது, அணையின் முதல் ஷட்டர் உடைந்தது. இதைத் தொடர்ந்து மற்ற எல்லா ஷட்டர்களையும் திறந்து தண்ணீரை வீணாக வெளியேற்றினார்கள். 32 அடியாக நீர்மட்டம் குறைந்தால்தான், ஷட்டரைச் சரிசெய்ய முடியும் என்பதால் இப்படி!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை இது. கிருஷ்ணகிரிக்கும் காவேரிப்பட்டினத்துக்கும் நடுவில் பெரியமுத்தூரில் தென்பெண்ணை ஆற்றில் அணையைக் கட்டினால், இங்கு 700 ஏரிகள் பாசன வசதிபெறும் என்ற எண்ணத்தில் கட்டினார்கள். வெறும் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது அணை. 500 ஏக்கர் பரப்பில், 1.67 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கிவைக்கும் திறனுடன் 52 அடி உயரத்தில் கட்டினார்கள். இந்த அணை நிரம்பினால், இடது - வலது கால்வாய்கள் வழியே பாய்ந்துசெல்லும் நீர், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 87 பெரிய ஏரிகளையும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள 600 சிறிய ஏரிகளையும் நிரப்பும். இதன்மூலம், 15 லட்சம் விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். இதுதவிர, 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம், நேரடியாகப் பாசன வசதிபெறுகிறது. 

இடையில் கர்நாடக அரசு அம்மாநிலத்தில் அடுத்தடுத்து தடுப்பணைகள் கட்டியதால், தமிழகத்தில் தென்பெண்ணை வறண்டு போனது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு,  2015-ம் ஆண்டுதான் தென்பெண்ணையில் வந்த வெள்ளம் அணையை நிரப்பியது. ‘முப்போகம் சாகுபடி செய்யப் போகிறோம்’ என விவசாயிகள் மகிழ்ந்தார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம், ஊழல்!

2015-ம் ஆண்டில் இதேபோல நவம்பர் மாதத்தில் அதிக வெள்ளம் வந்தபோது, அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று ஷட்டர்களைத் திறந்தார்கள். ஆனால், பல ஆண்டுகளாகப் பராமரிக்காத ஷட்டர்களை வேகமாகத் திறக்கவும் முடியவில்லை; உபரித் தண்ணீரை வெளியேற்றிய பிறகு மூடவும் முடியவில்லை. அதனால் அப்போதும் தண்ணீர் வீணானது. அதன்பின் இந்த அணையைப் பராமரிக்க ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகளும் நடைபெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

இதன்பின் அணை பலமாகத்தானே ஆகியிருக்க வேண்டும்? ஆனால், அதுதான் இல்லை! இந்த நவம்பர் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு 350 கனஅடி தண்ணீர் சீராக அணையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. அப்போது அணையின் முதலாவது ஷட்டர் பெரிய சத்தத்துடன் பலமிழந்து உடைந்தது. மொத்த நீரும் கடலுக்குப் போனது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டரைச் சந்தித்தோம். ‘‘அணை ஷட்டரைக் கண்காணிக்கத் தவறிய செயற்பொறியாளர் பாலசுப்ரமணி என்பவரை மட்டும் இப்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர். இது மட்டும் போதாது. கே.ஆர்.பி அணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள அத்தனை அதிகாரிகளையும் மாற்றினால்தான் அணையைக் காப்பாற்ற முடியும். ஆறு கோடி ரூபாய் நிதியில், ஷட்டர்களுக்கு வெறும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மட்டும் செலவுசெய்து பெயின்ட் அடித்துவிட்டு மீதிப் பணத்தை முறைகேடாக செலவு செய்துள்ளனர். இதில் அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருக்கிறது’’ என்றார் அவர்.

அணைப் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெரியமுத்தூர் கெளரவப்பனை சந்தித்தோம். ‘‘தாங்கவே முடியாத அளவுக்கு அணையின் பெயரால் ஊழல் நடக்கிறது. அணைப் பாதுகாப்புக்காக வாங்கிய நிதியில் 60 சதவிகிதம் கமிஷன் அடித்துள்ளனர். பிறகு எப்படி அணையின் ஷட்டர் உடையாமல் இருக்கும்? பணத்தை எப்படிச் செலவு செய்தார்கள் என்ற விவரத்தைத் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர்’’ என்றார் அவர்.

ஆறு கோடி ரூபாய் செலவிட்டும் அணையை உடைத்த ஊழல்!

அணையின் உதவி செயற்பொறியாளர் சாம்ராஜைச் சந்தித்தோம். ‘‘2016-ல் அணையின் பராமரிப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஷட்டர் பராமரிப்புச் செலவு ரூ.1.10 கோடி. ரூ.3.67 கோடியில் கட்டுமானப்பணிகளையும், 64 லட்சத்தில் அணையின் எலெக்ட்ரிகல் பணிகளையும் இடிதாங்கி அமைக்கும் பணிகளையும் செய்துள்ளோம். லேபர் கூலி ரூ.45 லட்சம். வெல்டிங் ஒர்க் ரூ.14 லட்சம் என எல்லாவற்றுக்கும் முறையாகக் கணக்கு வைத்திருக்கிறோம்’’ என்றார்.

அணையில் கட்டுமானப் பணிகள் செய்ததாகச் சொல்லப்பட்ட இடங்களைப் பார்த்தோம். அணையிலும் பூங்காவிலும் புதர் போலப் புல் வளர்ந்துள்ளது.அதைக்கூட வெட்டவில்லை. விளக்குகள் எரியவில்லை. இந்த இருளான சூழலே ‘என்ன நடந்திருக்கும்’ என்பதை உணர்த்திவிடுகிறது.

- எம்.வடிவேல்
படங்கள்: க.மணிவண்ணன்