Published:Updated:

மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

மத்திய அரசு தராத ரூ.300 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

கரூரில் முடங்கிய ஏற்றுமதி

மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

கரூரில் முடங்கிய ஏற்றுமதி

Published:Updated:
மத்திய அரசு தராத ரூ.300 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

‘ஜவுளி ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை ரூ.300 கோடியைத் தராமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. இதனால் ஏற்றுமதியே முடங்கிவிட்டது’ என்று கரூரைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

‘உயர்மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற அறிவிப்பு, ஜி.எஸ்.டி என அடுத்தடுத்த அதிரடித் தாக்குதல்களால் தங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தி யாளர்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி யாளர்கள் கண்ணீர் வடித்து வந்தனர். இந்த நிலையில், ஏற்றுமதி ஊக்கத்தொகையை மத்திய அரசு பெருமளவில் பாக்கி வைத்துள்ளதாக ஜவுளி ஏற்றுமதி யாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் பாபுவிடம் பேசினோம். ‘‘கரூர் மாவட்டத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருக்கிறோம். ஏற்றுமதிக்கு ஏழு சதவிகித ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கிவந்தது. அதை, ஜி.எஸ்.டி-யில் வெறும் இரண்டு சதவிகிதமாகக் குறைத்துவிட்டனர். அது எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்தபோது, ‘அந்த ஐந்து சதவிகிதத்தை ரீஃபண்ட் ஆக ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவோம்’ என்றார்கள். ஆனால், கடந்த ஐந்து மாதங்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக பாக்கி வைத்துள்ளனர்.

அரசு இப்படித் தாமதம் செய்யலாமா? 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 11 கோடியாக இருந்தது. 2017 அக்டோபர் நிலவரப்படி, அது ரூ.5 ஆயிரத்து 398 கோடியாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒருபக்கம், எங்கள் தொழில் சரிவை நோக்கிப் போகிறது. இன்னொருபுறம், நாங்கள் செலுத்திய வரித்தொகையில் ‘ரீஃபண்ட்’ தொகையையும் மத்திய அரசு தராமல் உள்ளது. இதனால் ஜவுளி ஏற்றுமதித் தொழில் அதலபாதாளத்துக்குப் போகிறது’’ என்று கவலையுடன் சொன்னார்.

மத்திய அரசு தராத ரூ.300 கோடி!

ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான சுந்தரேசன், “நாங்கள் கட்டிய வரியிலிருந்து திருப்பிக் கொடுக்க வேண்டிய எங்கள் பணம்தான் இந்த ரீஃபண்ட். ஏற்றுமதி செய்துவிட்டோம் என்பது தெரிந்ததுமே சில நாள்களில் இதைத் திரும்பக் கொடுத்தால்தான், அடுத்த உற்பத்தியைத் திட்டமிட வசதியாக இருக்கும். பல மாதங்களாக எங்கள் பணம் முடங்கினால், எப்படித் தொழில் செய்ய முடியும்? எங்களது ரீஃபண்ட் தொகையை விரைவில் வழங்கவில்லை என்றால், எங்கள் தொழிலை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்றார் விரக்தியுடன்.

ஜி.எஸ்.டி-யால் இன்னும் என்னென்ன சிக்கல்கள் வருமோ தெரியவில்லை.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்