Published:Updated:

டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

டிபனும் இல்லை... மெடலும் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

சென்னை மாரத்தான் குளறுபடி

டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

சென்னை மாரத்தான் குளறுபடி

Published:Updated:
டிபனும் இல்லை... மெடலும் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
டிபனும் இல்லை... மெடலும் இல்லை!
டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

‘சென்னை மாரத்தான்’ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதைப் பலரும் பெருமையாக நினைப்பார்கள். அதிகாலை எழுந்து, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் வருவார்கள் பலரும். அதற்காக, போக்குவரத்தையே மாற்ற வேண்டிய அளவுக்குக் கூட்டம் கூடும். ‘சென்னை ரன்னர்ஸ்’ என்ற அமைப்பு சார்பில் ‘விப்ரோ’ ஆதரவுடன் ஒவ்வோர் ஆண்டும் இது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த பந்தயத்தில் பல குழப்பங்கள்.

டிசம்பர் 3-ம் தேதி சென்னை  ஓ.எம்.ஆர் சாலையில் நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்குபெற ஒவ்வொருக்கும் ரூ.975 கட்டணமாகப் பெறப்பட்டது. பந்தயத்தில் கலந்துகொள்பவர்களுக்கு டி-ஷர்ட், மெடல், காலை உணவு போன்றவற்றை வழங்க வேண்டும். ஆனால், ஆயிரக்கணக்கானோருக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை, ‘கோதுமை கேசரி, இட்லி பொடிமாஸ், வெண் பொங்கல், வெஜ் சாம்பார், கொள்ளுச் சட்னி, வேக வைத்த சுண்டல், காபி ஆகியவை வழங்கப்படும்’ எனப் பசியைத் தூண்டியது.

டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பந்தயத்தில் ஓடிவிட்டுப் பசியுடன் வந்தவர்கள், காலை உணவு தீர்ந்துபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மெடல் வழங்கும் மேடையில் சிலர் ஏறி, ‘‘இப்படிச் செய்துவிட்டீர்களே...’’ என உரிமையுடன் கோபித்தனர்.
பலர், பல மாவட்டங்களிலிருந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பலர் வந்திருந் தனர். ‘‘மெடலும் கொடுக்கவில்லை’’ என்று பலர் ஆதங்கப்பட்டனர்.

இது தொடர்பாக சென்னை ரன்னர்ஸ் அமைப்பைச் சேர்ந்த குமரவேலிடம் பேசினோம். ‘‘இட்லி பொடிமாஸ் கெட்டுப்போய்விட்டது. அதனால், மற்ற உணவுகள் அதிகமாக வழங்கப்பட்டன. பிறகு வந்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சாப்பிடாமல் சென்றவர்களுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பவுள்ளோம். மெடல் பற்றாக்குறை ஏற்பட்டதும் உண்மைதான். திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகள்தான் காரணம்’’ என வருத்தம் தெரிவித்தார்.

டிபனும் இல்லை... மெடலும் இல்லை!

கொஞ்ச நேரம் கழித்து அவரே போன் செய்து, ‘‘விடுபட்டவர்களுக்கு மெடல் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். காலை உணவு சாப்பிடாமல் சென்றவர்களையும், மெடல் வாங்காமல் சென்றவர்களையும், அடுத்த ஆண்டு நுழைவுக்கட்டணம் இல்லாமல் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்’’ என்றார்.

- பொன்.செந்தில்குமார்