Published:Updated:

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்
பிரீமியம் ஸ்டோரி
அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

Published:Updated:
அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்
பிரீமியம் ஸ்டோரி
அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவித்து, பின் ரத்து செய்யப்பட்டபோது, அங்கு போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், மருதுகணேஷ், மதுசூதனன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். பி.ஜே.பி சார்பில் கரு.நாகராஜனும், சுயேச்சையாக நடிகர் விஷாலும் போட்டியிடுகின்றனர். அவர்கள் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களை ஒப்பீடு செய்தோம்.

கார் இல்லாத தினகரன்!


முதல்வராகும் கனவுடன், ஆர்.கே.நகரில் அ.தி.மு.க (அம்மா) அணி வேட்பாளராக  மார்ச் மாதம் களத்தில் குதித்த தினகரன் தாக்கல்செய்த பிரமாணப்பத்திரத்தில் சுவாரஸ்யமான பல தகவல்கள் இருந்தன. பணம் உள்ளிட்ட இவரது அசையும் சொத்துகளின் மதிப்பு 11,45,781 ரூபாய் 94 பைசா. மனைவி அனுராதாவின் பெயரில் உள்ள ரொக்கம், வங்கிக் கணக்கு இருப்பு உள்ளிட்டவற்றின் மதிப்பு 7,18,66,055 ரூபாய் 23 பைசா. மகள் பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு 49,54,942 ரூபாய் 52 பைசா. தன் பெயரில் ரூ.57,44,008, மனைவி பெயரில் ரூ.2,40,71,687 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை. தன் பெயரில் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை. மனைவி பெயரில் 11.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாடா சஃபாரி கார், ஜீப் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.

தினகரன் இப்போது சுயேச்சை வேட்பாளராகக் களம் காண்கிறார். தன் பெயரில் 16,73,799 ரூபாயும், மனைவி பெயரில் 6,87,21,524 ரூபாயும், மகள் பெயரில் 1,17,41,411 ரூபாயும் அசையும் சொத்துகள் உள்ளன என்று கூறியுள்ளார். மார்ச் மாதத்துக்கும், இப்போதைக்கும் இடையே தினகரனின் அசையும் சொத்து மதிப்பு சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மனைவி பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு 3 சதவிகிதம் குறைந்துள்ளது. மகள் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

விவசாயி மதுசூதனன்!

ன்னீர்செல்வம் அணியின் சார்பில், கடந்த மார்ச் மாதம் போட்டியிட்டபோது, தாமும், தம் மனைவியும் விவசாயி என்று மதுசூதனன் குறிப்பிட்டிருந்தார். தன் பெயரிலும், மனைவி பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 5.37 கோடி எனத் தெரிவித்திருந்தார். ரூ. 3.16 லட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் வைத்துள்ளதாகவும், மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் வாகனங்கள் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இப்போது, அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார் மதுசூதனன். தனக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ. 1.49 கோடி உள்ளன என்றும், தன் மனைவிக்கு ரூ. 3.69 கோடிஅசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் ரூ. 5.18 கோடி மதிப்பு. கடந்த முறை அஃபிடவிட்டில் குறிப்பிட்டதைவிட, இது குறைவுதான். விவசாயத்தில் நஷ்டம் வந்திருக்கும்போல!

டூவீலர் வைத்துள்ள தி.மு.க வேட்பாளர்!

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், தம் பெயரில் உள்ள பணம் மற்றும் நகைகளின் மதிப்பு ரூ. 2,79,531 என்றும், மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.7,08,609 என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது பெயரில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்றும், மனைவி பெயரில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மகள், மகன் பெயர்களில் சொத்துகள்  இல்லை என்றும் கூறியிருந்தார். தமக்குச் சொந்தமாக PASSION PRO-HERO என்ற டூவீலர் மட்டும் உள்ளதாக மருதுகணேஷ் அப்போது கூறியிருந்தார்.

மருதுகணேஷ் இப்போது தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில் அசையும் சொத்து மதிப்பு ரூ. 2,57,845 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்றும் கூறியுள்ளார். மனைவி கவிதா பெயரில், ரூ.7,08,347 அசையும் சொத்துகள் இருப்பதாகக் கூறியுள்ளார். மனைவி, மகள், மகன் பெயர்களில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். பெரிதாக வித்தியாசங்கள் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

வாகனமே இல்லாத பி.ஜே.பி வேட்பாளர்!

பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜன், கன்சல்டன்சி தொழில் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார். தமது பெயரில் ரூ.20,75,000 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.5,85,000 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமது பெயரில், சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் 2090 சதுர அடி வீடு இருப்பதாகக் கூறியுள்ளார். இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். யார் பெயரிலும் எந்த வாகனமும் இல்லையாம்.

அதிகரித்த சொத்துகள்! - போட்டுக்கொடுக்கும் அஃபிடவிட்கள்

கடனாளி விஷால்!

நடிகர் விஷால் வேட்புமனுவுடன் தாக்கல் செய்திருக்கும் அஃபிடவிட்டில் உள்ள தகவல்கள்...

‘2015-16-ம் ஆண்டு தாக்கல் செய்திருக்கும் வருமான வரி ரிட்டர்னில்       ரூ. 4.21 கோடிக்கு வருமானம் காட்டியுள்ளார். இப்போது ரூ.2,45,740 கையிருப்பு வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். ரூ. 49.83 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார், ரூ.35.98 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் கார், ரூ.10.88 லட்சம் மதிப்புள்ள எக்ஸ்.யு.வி கார், ரூ.7.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ10 கார் என மொத்தம் ரூ.1.04 கோடி மதிப்புள்ள நான்கு கார்கள் வைத்திருக்கிறார். இந்தக் கார்களையும் வங்கிக் கடனில்தான் வாங்கியிருக்கிறார். நகைகள் உள்ளிட்ட வேறு எந்தச் சொத்துகளும் இல்லை. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் ஏதும் இல்லை. ஐ.டி.பி.ஐ வங்கியில் ஈடாக (எதை ஈடாக வைத்தார் என்பதைக் குறிப்பிடவில்லை) வைத்து ரூ. 6.49 கோடி கடன் வாங்கியிருக்கிறார். வருமானவரிக் கணக்கைத் தாமதமாகத் தாக்கல் செய்ததால்,       ரூ. 34.28 லட்சம் வட்டி செலுத்த வேண்டியுள்ளது.

- கே.பாலசுப்பிரமணி