Published:Updated:

கடல் தமிழ்க் கண்ணீர்!

கடல் தமிழ்க் கண்ணீர்!
பிரீமியம் ஸ்டோரி
கடல் தமிழ்க் கண்ணீர்!

அறிவுமதி, படம்: எல்.ராஜேந்திரன்

கடல் தமிழ்க் கண்ணீர்!

அறிவுமதி, படம்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
கடல் தமிழ்க் கண்ணீர்!
பிரீமியம் ஸ்டோரி
கடல் தமிழ்க் கண்ணீர்!

• புயலு முடிஞ்சுருச்சே!
பூத்த
வெள்ளி
தெரிஞ்சுருச்சே!

கடலுக்குப்
போன
தொர
கர
வந்து
சேரலியே!

கண்ணு ரெண்டும்
சோரலியே!

கடல் தமிழ்க் கண்ணீர்!

• கடலு ஓஞ்சுருச்சே!
காத்து
மொத்தம்
தூங்கிருச்சே!

தொழிலுக்குப்
போன
தொர
தோணி
வந்து
சேரலியே!

துக்கமின்னும்
ஆறலியே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• கடலுக்கே பலியாக
நாங்க
கரையாராய்ப்
பிறந்தோமா!

படகில் போய் பலியாக
நாங்க
பரதவராய்ப்
பிறந்தோமா!

• மீனுக்கே இரையாக
நாங்க
மீனவராய்ப்
பிறந்தோமா!

மூழ்கித்தான் சாவதற்கே
நாங்க
முக்குவராய்ப்
பிறந்தோமா!

  செத்துச் செத்து
  வீழ்வதற்கே
  நாங்க
  செட்டியராய்ப்
  பிறந்தோமா!

• குமரியிலே ஒரு காலம்
கோடி
சனம்
செத்தோமே!

பூம்புகாரில் ஒரு காலம்
பொத
பொதையாச்
செத்தோமே!

• அப்பப்போ அப்பப்போ
அலை
விழுங்கச்
செத்தோமே!

துப்பாக்கிக்
குறி
பார்க்கத்
துடி
துடித்துச்
செத்தோமே!

• சாவுக்கும் நடு நடுவே
சாதிக்க
வந்தவர்கள்!

நாங்கள்
சேர, சோழ
பாண்டியர்க்கும்
சிறந்த
வெற்றி
தந்தவர்கள்!

• சிங்கார
வேலரைத்தான்
சிந்திக்க
விட்டவர்கள்!

வல்வெட்டித்
துறையானால்
வரலாற்றைத்
தொட்டவர்கள்!

• இன்று
குமரிக் கடல் நெடுகக்
குமுறி
அழுகின்றோம்!

ஒதுங்கும்
உடல்
தேடி
உருகி
அழுகின்றோம்!

• இடைத் தேர்தல் சத்தத்தில்
எம்
அழுகை
கேட்காதோ!